புத்தகம் ஏதோ சொல்லத்துடிக்குது...


                புத்தகம் ஏதோ சொல்லத்துடிக்குது!...

            (திருப்பூரில் ஜனவரி 25முதல் பிப்ரவரி 5 வரை
          9 வது புத்தகக்கண்காட்சி-திருப்பூர்).

புத்தகம் ஏதோ சொல்லத்துடிக்குது!
உன்னிடம் வந்து இருக்கத்துடிக்குது!!

மேற்கண்ட பாட்டை 1991-ல் அறிவொளி இயக்கத்தில் தன்னார்வத்
தொண்டனாக பணியாற்றிய போது பட்டி தொட்டியெல்லாம் பாடிய பாட்டு..ஏதாவது பணியாக கோவை செல்லும்போது புத்தகம் வேண்டும் என்றால் கோவையில் உள்ள  நியூ செஞ்சுரி புக்ஸ் மற்றும் விஜயா பதிப்பகத்திற்குச்சென்று புத்தகம் வாங்கும் பழக்கம்.. நமக்குத்தேவையான புத்தகங்கள் அனைத்துமே அங்கிருக்கும் எனச் சொல்லமுடியாது..
இந்தக்குறையை திருப்பூரில் 2004-ல் முதன் முதலாக பின்னல் புக் டிரெஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து புத்தகக்கண்காட்சியை டவுன் ஹாலில் நடத்தினார்கள். தினமும் இரவு 7மணிக்கு மேல் கருத்தரங்கம் என 10 நாட்களும்  நமக்கு வேண்டிய புத்தகம் மட்டுமல்ல செவிக்கு விருந்தும் கிடைக்கும்..எந்த விதமான லாப நோக்கமும் இல்லாமல் முற்போக்குச்சிந்தனையாளர்களால்


நடத்தப்பட்டதால் இந்த புத்தகக்கண்காட்சியில் பல்வேறு மாறுபட்ட சிந்தனை உடையவர்களையும் புத்தகம் என்ற ஐந்தெழுத்து ஒன்றிணைத்தது...முதலாவது புத்தகக்கண்காட்சியைக்கண்டு பொறாமைப்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டுமா இவர்கள் இப்படி நடத்தமுடியும்..ஏதோ ஒரு வேகத்தில் நடத்திவிட்டார்கள்...அடுத்த
ஆண்டு நடத்தமுடியுமா? என மனதுக்குள் பொறாமைப் பட்டவர்களும் உண்டு... அவர்களின் நினைப்பில் மண்ணைப் போட்டுவிட்டு, இதோ எட்டு ஆண்டுகளை முடித்து 9 வது ஆண்டு புத்தகக்கண்காட்சிக்கு திருப்பூர் தயாராகிவிட்டது...


ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெறவுள்ள புத்தகக்கண்காட்சியின் இரண்டாவது வரவேற்புக்குழு கூட்டம் இன்று(10-01-2012) புத்தகக்கண்காட்சி நடைபெறும் கே.ஆர்.சி. சிட்டி மைதானத்தில் நடைபெற்றது.

திரு. ஆர். ஈசுவரன் த.மு.எ.ச. மாவட்டத்தலைவர் இதுவரை நடைபெற்ற பணிகள் பற்றி விளக்கம் கூறுகிறார்.
  

திரு. குமாரசாமி அவர்கள் அழைப்பிதழ் ஏற்பாடுகள் பற்றி எடுத்துரைக்கிறார்.

Comments

  1. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ரத்னவேல் அவர்களுக்கு நன்றி.
    .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

அரசுப்பெண்கள் பள்ளிகளில் இளவரசிகளின் துயரம்!.