Posts

Showing posts from 2017

மேதகு அப்துல்கலாமும் ஜெய்வாபாய் பள்ளியும்..

Image
மேதகு அப்துல் கலாம் அவர்களும் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள்

                              மேல் நிலைப்பள்ளியும்

                                     (ஜெய்வாபாய்ஈசுவரன்)



திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிதான் இந்தியளவில் மிக அதிகமான அளவில் மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளியாகும். 2009-ம் ஆண்டு இந்தப்பள்ளியில் படித்த மாணவிகள் 7285 ஆகும். நான் இந்தப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் பொருளாளராக, செயலாளராக, தலைவராக 1989-ம் ஆண்டு முதல் 2009 –ம் ஆண்டுவரை சேவைசெய்துள்ளேன். இந்தப்பள்ளியானது மேதகு பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுடன் 2001-ம் ஆண்டு முதல் தொடர்பில் இருந்துவந்துள்ளது. அது பற்றி எங்களது நினைவலைகள் உங்கள் பார்வைக்கு… தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் ஏழாம் வகுப்பு மாணவிகள் ஆறுபேர் சேர்ந்து என்னுடையை வழிகாட்டுதலில் மழை நீர் சேகரிப்பு ஆய்வை நடத்தி இப்பள்ளியில் அதை அமுல்படுத்தியிருந்தனர். இந்த ஆய்வானது 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய விஞ்ஞானிகள் மா நாட்டில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட…

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..

Image
இதுகல்வித்தாஜ்மஹால்.......
முகலாயமன்னன்ஷாஜகான்தனதுமனைவிமும்தாஜ்மீது
கொண்டஅன்பின்காரணமாககட்டியஉலகஅதிசியமானதாஜ்மஹால் பற்றித்தெரியும்! இதுஎன்னகல்வித்தாஜ்மஹால் ! எங்கேஇருக்கிறது? எனஅறியஆவலாகஉள்ளதா?

                   1992-ம்ஆண்டு திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் 50 ஆவது பொன்விழா கொண்டாட பள்ளி நிர்வாகமும், பெற்றோர்-ஆசிரியர் கழகமும் முடிவு செய்தன. அன்றையதலைமையாசிரியைபிரேமாடேனியலும், நானும்இப்பள்ளியைஉருவாக்கியஆஷர்குடும்பத்தைஅழைப்பதுஎனமுடிவெடுத்துவாரிசுகளின்விபரங்களைதேடஆரம்பித்தோம்..அப்போதுதான்