Posts

Showing posts from May 28, 2017

எங்கள் தேசம்.. இந்திய தேசம்.. வாழ்க வாழ்கவே!

இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான வரலாற்றுக்காவியம்.. கொங்கு வேளாளர் கவுண்டர்களில் 70 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் உண்டு.. இந்த கூட்டங்கள் என்பதும், குல தெய்வம் என்பதும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு தாய்வழியில் வந்த சமூகமாகவும், அந்த தாயே குலதெய்வமாகவும் இருந்திருக்கவேண்டும்..! இப்படி கொங்கு வேளாளர்களில் ஒரே கூட்டத்திற்குள் திருமண உறவு இருக்காது.. ஏனென்றால் ஒரே குலத்திற்குள் இருக்கும் ஆணும், பெண்ணும் சகோதரமுறையில் வருவார்கள்.. அதனால் ஒரே கூட்டத்தில் திருமணம் முடிக்காமல் வேறு கூட்டத்திற்குள் தான் திருமணம் நடைபெறும்.
இப்படி கொங்கு வேளாளர் திருமணங்களில் சமீப ஆண்டுகளில் அக்னி குண்டம் வளர்த்தி சமஸ்கிருத மந்திரம் ஓதி புரோகிதர்கள் மூலம் திருமணம் செய்வது வழக்கமாகிவிட்டது. இருந்தாலும் அருமைக்காரர் என்றும் சீர் காரர் என்றும் இருப்பவர்கள் இல்லாமல் திருமணம் நடைபெறுவதில்லை..இந்த சீர்காரர்களின் கூட்டத்தின் பெயர் முழுக்காதன் கூட்டம் அல்லது பொருள் தந்த கூட்டம் ஆகும். இவர்களின் குலதெய்வம் வெள்ளையம்மாள்.. கோவில் காடைஈஸ்வரர் கோவில், காங்கயம் அருகில் உள்ளது. இவர்கள் வணங்கும் மரம் , தல விருட்சம் வெடத்தலான் மரமா…