நமது வாரிசுகளைக்காப்பாற்ற வேண்டுமா?
நமது வாரிசுகளுக்காக பூமியைக் காப்போம்! சுற்றிச்சுழலும் பூமி! உன்னை சூடு படுத்தியது யாரு! சுற்றிச்சுழலும் பூமி! உன்னை சூடு படுத்தியது யாரு? மரங்களை வைத்து குளிர்விக்கிறோம் பாரு.! நீ சந்தோசமாக சுழன்றாடு! கவலைப்படாதே மரமே! தண்ணீர் ஊற்ற நாங்கள் இருக்கிறோம். . திருப்பூர் மாவட்ட கல்வித்துறையின் சார்பாக 6000-ம் மரங்கள் நடும் விழா! 15-09-2010 ஜெய்வாபாய் பள்ளியில்பேரரிஞர் அண்ணா பிற ந்த நாள் அன்று ஆரம்பம்.. மனித குலம் காக்க மரம் வளர்ப்போம்! இ ந்த உலகில் உள்ள நாம் ஒவ்வொருவரும் ஓடி ஓடிச்சம்பாதிப்பது எதற்காக?,அழகான வீடுகள் கட்டுவதும், நிலங்களை வாங்கிப்போடுவதும், கோடி கோடியாக சம்பாதித்து வங்கிக்கணக்கை வீங்கவைப்பதும் எதற்காக?அரண்மனை போன்ற வீடுகளில் நமது குழந்தைகள் வாழவேண்டும்,ஆடம்பரக்கார்களில் பவனி வரவேண்டும்,பத்து தலைமுறைக்கும் நமது வாரிசுகள் கவலையின்றி இப்பூமியில் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரும் முடியும் மட்டும் சொத்து சேர்த்து வைக்கவே விரும்புகிறோம். உண்மையிலேயே நமது குழ ந்தைகள் மீது அக்கறை இருக்குமானால...