Posts

Showing posts from 2010

அரசுப்பள்ளிகளும்-பராமரிப்பும்..

Image
அரசு/ நகராட்சிப்பள்ளிகளைப்பராமரிக்க சில ஆலோசனைகள்.... . .. அரசுப்பள்ளிகளும் பராமரிப்பும். . தமிழக அரசின் சார்பாக நடத்தப்படும் அரசு பொதுமருத்துவமனைகள்,அரசு போக்குவரத்து பேருந்துகள், அரசு, நகராட்சி,ஊராட்சிப்பள்ளிகள் போன்றவற்றிற்கு பொதுவான குறைபாடாக மக்களாலும்,ஊடகங்களாலும் சொல்லப்படுவது ஒன்றே ஒன்றுதான்! அது போதிய பராமரிப்பின்றி ,சுத்தமின்றி காணப்படுவதுதான். அரசுப்பள்ளிகள், நகராட்சிப்பள்ளிகள் கட்டப்படும்போது நன்றாகத்தான் இருக்கிறது.மாணவர்களின் வசதிக்காக வாங்கப்படும் இருக்கை வசதிகள்,அலமாரிகள்,கணிப்பொறிகள் போன்றவைகள் மட்டுமல்ல, வகுப்பறைக்கட்டங்கள் உட்படபோதியபராமரிப்பின்றியும்,முரட்டுத்தனமானகக்கையாளுவது போன்றவைகளால் விரைவில் சிதிலமடைந்து விடுகிறது.பெரும்பான்மையான பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு தான் ஓய்வு பெறும்போது, எந்தவிதமான புகாரின்றி,தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட. தன்னால் வாங்கப்பட்ட அனைத்துப்பொருள்களையும் அடுத்து வரும் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து பென்சனை பாதுகாத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்..மாணவர்களின் கல்வி வளர்ச்சி

உலக மாணவர் தினமாக கொண்டாடுவோம்!

Image
உலக மாணவர் தினவிழா! பாரத ரத்னா டாக்டர் அ.பெ.ஜெ.அப்துல்கலாம் (15-10-2010) அவர்களின் 80 வது பிறந்தநாள்! (புகைப்படங்களை பெரிதாக்க கிளிக் செய்யுங்கள்) 14-10-2010 அன்று இரவு 10 மணிக்கு,அப்துல் கலாம் அவர்களின் இணைய தளத்தில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை மின்னஞ்சலில் அடித்துக்கொண்டிருந்தேன்.அப்போது ...ஒரு போன். சார்! நான் பார்த்திபா பேசுகிறேன்..எனக்கு ஒரே குழப்பம்.யார் பார்த்திபா?.சார் நான் தான் ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவி..டெல்லிக்கு ஜனாதிபதி அவர்களைப்பார்க்க வ ந்தவர்களில் நானும் ஒருவள் சார்! நமது ஜனாதிபதி அவர்களுக்கு நாளை 80 வது பிறந்த நாள்..பள்ளியில் வருடா வருடம் அவருடைய பிறந்தநாளைக்கொண்டாடுவீர்கள்..இந்த வருடம் உண்டா சார் என்றார். நான் தற்போது பெற்றோர்-ஆசிரியர் கழக பொறுப்பில் இல்லை.!.பள்ளியில் கொண்டாடுவார்களா எனத்தெரியாது..ஆனால் 15-10-2010 அன்று மத்தியரசின் நிதியுதவியுடன் ” இன்ஸ்பியர்

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

Image
(அல்லி பூ பதிவு 2) அல்லிக்குளம்(Nymphaea nouchali)வைக்கலாம் வாருங்கள்! நீல அல்லி. அடடே! தவளையாரே!! இலை மேல் உட்கார் ந்து என்ன பார் க்கிறாய்? நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதைத்தான் நானும் பார்க்க வ ந்தேன்! ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் பள்ளியில் உள்ள அல்லிக்குளத்தைப்பார்வையிடும் பிற பள்ளி மாணவ-மாணவிகள். சந்திரனைக்காணாமல் அல்லி முகம் மலருமா? என்ற கண்ணதாசன் பாட்டிற்கு அழகு சேர்க்கும் வெள்ளை நிற ஆம்பல் என்கிற அல்லி !... குவளை என அழைக்கப்படும் நீல அல்லி. பூக்களை ரசிக்காத மனிதர்கள் உண்டா? அப்படி ஒரு மனிதன் இன்னும் பிறக்கவில்லையென்றே சொல்லலாம்.. பூக்களைப்பறித்து அதுவும் அடுத்தவர் வீட்டு பூவைப்பறித்து சாமிக்கு வைப்பதில் ஒரு குஷி இருக்கிறதே சொல்லி மாளாது! சாமி பூ கேட்டதாகத்தெரியவில்லை!ஆசாமிகளாகிய நாம் தான் சாமிகளுக்கு பூ கோர்த்து மாலையாக அணிவித்து மகிழ்கிறோம்...பூக்களின் அழகைக்கண்டு சொக்கிவிடுகிறோம்! பூக்களின் மணமும்,அதன் கல்ர்,மென்மை போன்றவை நமது கவலைகளை மறக்கச்செய்து,மன அழுத்தங்களை குறைத்து விடுகிறது.அதிலும் தாமரை,அல்லி போன்ற நீர்வாழ்தாவரங்களின் பூக்களின் அழகைத்தான் நீங்களே பார்க்க