Sunday, August 28, 2011

ஒரிசாவில் ஐந்து நாட்கள் சுற்றுலா...

பூரி ஜெகநாதர் கோவில்

   தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாட்டிற்காக 2005-ம் ஆண்டு டிசம்பர் 25 முதல் 31 வரை புவனேசுவரத்திற்கு தமிழகத்தின் 30 குழந்தைகளை, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அழைத்துச்சென்ற நண்பர்கள் 11 பேருடன் நானும் சென்றிருந்தேன். அங்கே எடுக்கப்பட்ட பூரி ஜக நாதர் கோவில் மற்றும் கோனார்க் கோவில் புகைப்படங்களைப்பார்த்த எனது மனைவி என்னை எப்போது கூட்டிச்செல்வீர்கள் எனக்கேட்டிருந்தார். ஆறுவருடம் கழித்துத்தான் அவரின் விருப்பத்தை , அதுவும் பணி ஓய்வு பெற்ற பின்புதான் நிறைவேற்ற முடிந்தது. தனியாக மொழிதெரியாத ஊருக்கு செல்வது உசிதமல்ல(ஏற்கனவே ஜாலியன் வாலாபாக், வாகா எல்லை சென்ற அனுபவத்தால்) என்பதால் உறவினர்களை கூட்டமாகச்சேர்த்துக்கொண்டு செல்வதுதான் உத்தமம் என்பதால் 11 பேர் கொண்ட எங்கள் குழு சென்ற மாதம் 16-8-2011 அன்று சென்னையில் இருந்து இரவு 12 மணிக்கு ஹவுரா மெயிலில் புறப்பட்டு 17-8-2011 இரவு 9 மணியளவில் புவனேசுவரம் சென்றடைந்தோம்.. அடுத்த நாளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பையும் குறிப்பையும் பாருங்கள்..
புவனேசுவரம் ஓட்டல் ஸ்வஸ்திக்கில் வரவேற்பறையில்.அறை ஒதுக்கீட்டுக்காக காத்திருப்பு....

கி.மு. 261-ல் மகத சாம்ரஜ்ய அரசர் சாம்ராட் அசோகன், கலிங்க நாட்டின் மீது படையெடுத்து ,கலிங்கப்போரை நடத்தி வெற்றிபெறுகிறார். அவர்  போருக்குப்பின் புத்த மதத்துறவியால் போர்செய்வதைக்கைவிட்டு அமைதியின் தூதுவராக மாறுகிறார். போர் நடைபெற்ற இடத்தில் ஜப்பான் புத்தமதசங்கத்தால் 1972-ல் நிறுவப்பட்டுள்ள தவுலிமலையில் உள்ள புத்தமதக்கோவில்.


புத்த மதக்கோவிலின் முன் குழுவின் தலைவர் க..பாலசுப்ரமணியன்(கொங்கு முன்னேற்றக்கழக மாநில பொருளாளர்) மற்றும் ஆ.ஈசுவரன்.
இந்த தெளலகிரிக்கு நிறைய சுற்றுலாப்பயணிகள் வருவதால், புத்தர் கோவிலுக்கு பின்புறம் இந்து மதக்கோவிலும் கட்டப்பட்டு, மக்களை இக்கோவிலுக்கு அழைக்கிறார்கள்..அங்கு சென்றால் அந்தச்சாமி, இந்தச்சாமிக்கு பூஜையென்று ரூ.100/- கேட்டு நமது பர்சை காலிசெய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
புத்தர் சிலை முன்பு எங்கள் குழுவின் ஒரு பகுதியினர்.


உலகப்புகழ் பெற்ற கோனார்க் சூரியக்கோவில். சுமார் 200 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் கி.பி. 1242-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1255-ல் முடிக்கப்பட்டது. இதைக்கட்டிய அரசன் நரசிங்கதேவா..முகமதியனாக மாறிய கலாபகதா என்ற இந்துமத பழங்குடியினத்தலைவனால் 1567-ல் கோனார்க் கோவில் சிதைக்கப்பட்டது. கைகளை இழந்த சூரியக்கடவுள்.கோனார்க்கோவிலின் நுழைவு வாயில்.  27 டன் எடை கொண்ட ஒரெ கல்லில் ஒரு மிகப்பெரிய யானை, ஒருமனிதனை தனது துதிக்கையால் சுற்றிக்கொண்டுள்ளது. யானை மீது சிங்கம் பாய்ந்து அமுக்கிக்கொண்டுள்ளது.

கோனார்க் சிற்பங்கள் கட்டடக்கலைக்கு மட்டுமல்ல, பொறியியல் துறையிலும் முத்திரைபதித்த பிரம்மாண்டமான கோவில்....ஆமாம் அந்தக்காலத்தில் ஏது அண்ணா யுனிவர்சிட்டி போன்ற பொறியியல் கல்லூரிகள்.....?
சிதைவுக்குள்ளான நாட்டிய மண்டபம்.


இது தேரின் சக்கரமட்டுமல்ல.. நேரத்தைக்கணக்கிடும் கடிகாரமாகவும் விளங்குகிறது. சக்கரத்தின் ஒவ்வொரு ஆரமும் 3 மணி நேரத்தையும், இரண்டு ஆரங்களுக்கும் இடையில் உள்ள சிறு குண்டுகள் போன்ற கற்களுகிடையே உள்ளவை 5 நிமிடங்களாகவும் செதுக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள அச்சானியில் நமது ஆள்காட்டி விரலைவைத்தால் நிழல் விழும் இடத்தைக்கொண்டு நேரம் கணிக்கப்படுகிறது. மாயா ஜால வித்தை போலத்தெரிகிறது.


சூரியனுடைய மனைவியின் சிலை உள்ளே இருக்கிறது. கோவில் நடைபாதை சிற்ப வேலைப்பாடுகளைப்பாருங்கள்.

கோனார்க் கோவிலின் சூரியக்கடவுள் 7 குதிரைகளில்( ரெயின்போ அல்லது சூரியனில் இருந்து வெளிவரும் கலர்கள்) பயணிப்பது போல செதுக்கப்பட்டுள்ளது..கோவிலைச்சுற்றிலும் 24 தேர்ச்சக்கரங்கள் மிக மிக அழகிய சிற்பவேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளது..ஒரு நாளின் 24 மணி நேரத்தைக்குறிக்கிறதே!

         
கோனார்க்கைக்கண்டு கவி. ரவீந்திரநாத்தாகூர் கீழ்கண்டவாறு கூறுகிறார்...”...இக்கோவிலின் கற்கள் பேசும் மொழியானது, மனிதனின் மொழியைத்தோற்கடித்துவிட்டது.” என்ற கூற்று  கோனார்க்கைக்கண்டபின்தான் நிஜம் என்பதை உணரமுடிந்தது....

ஆசியாவிலேயே மிகப்பெரிய 1100 ச.கி.மீ கொண்ட நன்னீர் ஏரியான சில்கா லேக். ஆயிரக்கணக்கான பறவைகளும், மீன்களும், டால்பின்கள் போன்ற பல்வேறு வகையான உயிரினங்களின் புகலிடம். இவ்வேரியை நம்பி 132 கிராமங்களைச்சேர்ந்த 2 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். காற்றும் மழையும் சுழன்றடிக்க லைப்ஜாக்கட் இல்லாத படகுப்பயணம் ஆபத்தாக இருந்தாலும், ஒரு த்ரில் அனுபவம்தான். படகுக்காரர்கள் சில தீவுகளுகு நம்மை அழைத்துச்சென்று உயிருடன் சிப்பிக்குள் உள்ள பூச்சியில் இருந்து முத்து எடுப்பது போலக்காட்டி ஜோடி ரூ.100/- என்று கூறி விற்கிறார்கள்.  நாமும் வாங்கி விடுகிறோம்..பின்புதான் அது பிளாஸ்டிக் முத்து என்பது தெரியவருகிறது..அதோ பாருங்கள் டால்பின்.....
ஹிராபூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட யோகினி என்கிற 64 பெண் தெய்வங்களின் கோவில்.கோவிலின் சிலைகள் சிதைக்கப்பட்டுள்ளன.


அட...என்னங்க...இப்படியா அரப்பு போட்டு குளிப்பாங்கா...புவனேசுவரத்தில் உள்ள நந்தன் கானன் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப்பெங்கால் புலிகள்.கர்ப்பகிரகத்தில் சாமி சிலைகள் இல்லாத அழகிய சிற்பவேலைப்பாடுகள் கொண்ட ராஜா ராணி கோவில். இது என்ன சிரிப்பு..ஒரு வேளை கோல்கேட் விளம்பரத்திற்கு சிரிக்கிறாரோ.......புவனேசுவரத்தில் உள்ள காணக்கண்கோடி வேண்டும் என நினைக்கவைக்கிற அழகியசுத்தமான முகுடேஷ்வரர் கோவில்........... எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறதா?
அடடா...ஞாபகம் வந்து விட்டது....வந்தான் வென்றான் படத்தில் ஒரு டூயட்பாட்டில் இந்தக்கோவிலும் வருகிறதே!....பதினொன்றாம் நூற்றாண்டில் லாலாடெண்டு கேசர் என்ற அரசரால் கட்டப்பட்ட புவனேசுவரம் லிங்கராஜ் கோவில்..இவ்வளாகத்தில் சிறிதும், பெரிதுமாக நூறு கோவில்கள் உள்ளன.சில இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டவை....சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும் பெயரெடுத்த கோவிலின் சிற்பக்கலையும், பொறியியல் நுட்பமும் சங்கமிக்கும் வரலாற்றுப்பதிவாகும்.... இக்கோவிலும் சரி, பூரி ஜெகநாதர் கோவிலும் சரி... சுத்தம் என்றால் வீசை என்ன விலை ? என்று கேட்பது போல பண்டாரங்கள் சட்டி, சட்டியாக கோவில் பிரகாரத்திலேயே பிரசாதம் செய்து அதைக்கூடையில் வைத்து தூக்கி வருவதும், சாப்பிட்டவைகளை அங்கேயே போடுவதும்...பார்க்க சகிக்கவில்லை...ஒரிசா அசோகர் காலத்தில் புத்த மதமாக இருந்தது. பின் காரவேளர் என்ற அரசர் காலத்தில் சமண மதமாக மாறியதால், புவனேசுவரத்தில் உள்ள ரத்தினகிரி மலையில் சமண முனிவர்கள் செதுக்கி வாழ்ந்த  குகைக்கோவில்கள்...தற்போது நிறைய இளஞ்ஜோடிகளின் புகலிடமாக ...
 நன்றாகப்பாருங்கள்...ஜைனமதத்துறவிகள் பாறாங்கல்லைக்குடைந்து மாடி வீடு கட்டியுள்ளனர்.
ஆஹா...கோனார்க்கையும், பூரி ஜெகநாதரையும், சில்கா லேக்கையும், நந்தன் கானர் ஜூவையும் பார்த்தாச்சு.. நாளைக்காலைலே ஓட்டலை விட்டு கிளம்பவேண்டியதுதான் பாக்கி.....எனக்கூறுகிறார்களோ!. புவனேசுவரத்தின் ஸ்வஸ்திக் ஓட்டல் இரவு நேர மின்னொளியில் தங்கம் போல ஜொலிக்கிறது..


அப்பாடா... சில வருட கனவான ஒரிசாவைப்பார்த்தாச்சு...ஊர் போய்சேரலாம்.ஊர் போனவுடனே சுடச்சுட அரிசிம்பருப்பு சோறாக்கி...சாப்பிடவேண்டும் எனபேசிக்கொண்டு, சென்னை ரயிலுக்காக காத்திருக்கிறார்கள்....
Sunday, June 26, 2011

நல்லதோர் வீணை செய்தே....
      நல்லதோர் வீணை செய்தே!...

                      ...   புதிய தமிழகரசு பதிவியேற்றவுடன் சுமார் ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தைப்புறக்கணித்துவிட்டது...ஏன்..இது முன்பிருந்த முதல்வர் கருணா நிதியால் கட்டப்பட்டது என்ற ஈகோதான்..புதிய தலைமைச்செயலகம் என்னவாகும்..இன்னும் சில மாதங்களில் பராமரிப்பின்றி வைக்கப்பட்டு செடி கொடிகள், செயற்கை நீருற்றுக்கள் போன்றவைகள் கவனிப்பாரற்று அழியும்...கண்கவர் கலைப்பொருட்கள் , மேஜை நாற்காலிகள் காணாமல் போகும்... ஆக மொத்தம் மக்கள் வரிப்பணம் அத்தனையும் ஒரு முன்னாள் முதல்வர் மீதான வெறுப்பு, தேசத்தின்பொதுச்சொத்தைக்கரையான் பிடித்துபோகச்செய்வதாக இருக்கிறது....

     .இதாவது ஒரு புதிய ஆட்சி வந்ததால் புதிய தலைமைச்செயலகம் புறக்கணிக்கப்பட்டது என்று கூறலாம்..ஆனால் புதிய ஆட்சி வராமலேயே ஒரு இருபது நாள்  தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு ஏப்ரல் 13க்குப்பிறகு புதிய தலைமைச்செயலகம் வந்த  முதல்வர் கலைஞர் அவர்கள் அங்கிருந்த மீன் தொட்டியைப்பார்க்கிறார்..பாசம் பிடித்து கிடக்கிறது. உடனே அங்கிருந்த அதிகாரிகளைப்பார்த்து என்ன பராமரிக்க மாட்டீர்களா? என கடிந்து கொள்கிறார்.ரூபாய் ஆயிரம் கோடியில் கட்டப்பட்டதாகக்கூறப்படும் புத்தம் புது தலைமைச்செயலகத்திலேயே பராமரிப்பு சரியில்லை என்றால் தமிழகரசின் பிற அரசு அலுவலகங்கள், அரசுப்பேருந்துகள், மருத்துவமனைகள், பாலங்கள், சாலைகள், கல்லூரிகள், 40000க்கும் மேற்பட்ட அரசு/நகராட்சிப்பள்ளிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை அவரவர் ஊரில் பார்த்தாலே தெரியும்.

             தமிழகரசு புதியதாக மருத்துவமனைகள், கல்லூரிகள்,பள்ளிகள் பேருந்துகள் என ஆரம்பிக்கும்போது, புதியதாகக்கட்டும்போது மிகப்பிரமாதமாக இருக்கிறது.ஆனால் காலம் செல்லச்செல்ல இவைகள் போதிய பராமரிப்பின்றி வெய்யிலிலும்,மழையிலும் கிடந்து வீணாகிவிடுகின்றன. இந்தப்பொதுச்சொத்துக்களைப்பேணவேண்டியஅரசுஅதிகாரிகள், அலுவலர்கள்,ஆசிரியர்கள் என பெரும்பான்மையானவர்களுக்கு இது நம் நாட்டின் பொதுச்சொத்து, இவற்றைப்பேணவேண்டும் என்ற எண்ணம் மறைந்து, தனது சம்பளம், தனது பதவியுயர்வு என பொருளாதார வட்டத்திற்குள் விழுந்து விடுகின்றனர்.போதாக்குறைக்கு அரசு பராமரிப்பிற்கு ஒதுக்கும் தொகையோ மிகக்குறைவாக இருக்கிறது.... இதன் காரணமாக நமக்கென்ன வந்தது, மாதம் ஆனா சம்பளம் மட்டும் வந்தால் போதும் என்ற சுயநலப்போக்கின் காரணமாக பல நல்ல செயல்பாடுகள் பராமரிப்பின்மையால் வீணாகிக்கொண்டிருக்கின்றன.
    மகாகவி பாரதி கூறியது போல, 
  ” நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப்புழுதியில்  எறிவதுண்டோ” 
எனக்கூறியது மிகப்பொருத்தமானதே.. இதுவே தனது பொருளாக, சொத்தாக இருந்தால் பத்திரமாகப்பாதுகாப்பார்.   இவர்களைச்சொல்லிக்குற்றமில்லை. நமது கல்விமுறையில்பொதுச்சொத்துக்களைப்பேணுவதுபற்றி    குழந்தைகளுக்குச்சொல்லித்தரவில்லையே!

        
  ஒரு பள்ளியில் முன்பிருந்த தலைமையாசிரியர் ஓய்வு பெற்று விட்டால் அவருக்குப்பின் வருபவர், முன்பிருந்தவரை பள்ளி விழாவிற்கு அழைக்க மாட்டார்கள்! அவர் செய்த வேலைகளை நோண்டிப்பார்த்து ஏதாவது தப்பு கண்டுபிடிக்கமுடியுமா? என ஆராய்வார். முன்பிருந்தவர் உருவாக்கியவற்றை புதியதாக வந்தவர் கண்டுகொள்ளாமல், பராமரிப்பின்றி.போட்டு விடுவார்..சில மாதங்களில் அவை துருப்பிடித்து பின் காணாமல் காயலான் கடைக்குப் போய்விடும். 

     எனது அனுபவத்திலேயே பல வற்றைக்கண்டுள்ளேன். அதிலும் குறிப்பாக திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் கடந்த  1997-இல் இருந்து  15 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பல நல்ல திட்டங்கள், செயல்பாடுகள் கடந்த 3 ஆண்டுகளாக எனக்குப்பின் வந்த பெ.ஆ.கழக நிர்வாகிகளும், பள்ளி தலைமையாசிரியையின்ம் அக்கறையின்மையின் காரணமாக பல ஆண்டுகளாக பயன்பட்டவைகள் அழிவை நோக்கிச்சென்றுகொண்டுள்ளது..எடுத்துச்சொல்லியும் பயனில்லை.உதாரணமாக

     2003-ம் ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்றது. அங்கு இந்த மாநாட்டையொட்டி அறிவியல் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட எனக்கு வியப்பாக இருந்தது. அங்கிருந்தவை எளிய முறையில் அறிவியலை செயல்முறையில் மாணவர்களுக்கு விளக்கும்படியாக அமைந்திருந்தது. எனக்கும் இதைப்போன்று திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளியிலும் நிறுவவேண்டும் எனற எண்ணம் பிறந்தது.                                         காய்ந்து கிடக்கும் அறிவியல் பூங்கா..

2004-ம் ஆண்டு இந்தியா முழுவதும் அறிவியல் விழிப்புணர்வு ஆண்டாக கொண்டாட இந்திய அரசின் அறிவியல மற்றும் தொழில்நுட்ப இலாகா முடிவெடுத்து அறிவித்தது. இதையொட்டி ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளியில் நிறுவ அன்றைய தலைமையாசிரியை திருமதி. ஜரீன்பானு அவர்களிடம் லக்னோவில் எடுத்த அறிவியல் பூங்கா புகைப்படங்களைக்காட்டி, அறிவியல் பூங்கா பற்றிப்பேசினேன். அவரும் உற்சாகமாக எனது யோசனைக்குச்சம்மதித்து, அவரிடம் கல்வி பயின்று திருப்பூரில் சூரியபிரபா எக்‌ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்த திருமதி ராதாம்பிகை குப்புசாமியிடம் நன்கொடையாக ரூ.50000/=பெற்றுத்தந்தார். பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளை மூலமாக ரூ. ஒருலட்சமும். கலைவாணி சில்க்ஸ் நிறுவனத்தார் ரூ.15000/=ம் அளித்த தொகையில் ஜெய் சூர்யபிரபா அறிவியல் பூங்கா “பள்ளியில் அமைக்கப்பட்டு, 04-03-2004-ம் ஆண்டு தேசிய அறிவியல் நாளையொட்டி திறப்புவிழா செய்யப்பட்டது. இந்த அறிவியல் பூங்காவில் 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாடங்களில் வரும் நியூட்டணின் வண்ணத்தட்டு, நெம்புகோல் தத்துவம். ஒலியின் வேகத்தை அறிதல், டி.என்.ஏ. பரிவு ஊஞ்சல் உட்பட 12 வகையான அறிவியல்செயல்முறை மாதிரிகள் வைக்கப்பட்டன. இதை முறையாக சொல்லித்தர ஒவ்வொரு மாதிரிகளுக்கும் ஒரு மாணவிவீதம் பயிற்சி கொடுத்து மானவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தோம்.. இந்த அறிவியல் பூங்காவிற்குள் சுற்றிலும் மலர்ச்செடிகள் வைத்து இயற்கைச்சூழலையும் ஏற்படுத்தினோம். பிற பள்ளி தலைமையாசிரியர்கள், கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் எனப்பலரும் பாராட்டினார்கள். தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரு நகராட்சிப்பெண்கள் பள்ளியில் அறிவியல் பூங்கா நிறுவப்பட்டது ஜெய்வாபாய் பள்ளியில் தான்.
                
         திருமதி ஆர்.ஜரீன்பானு பேகம் அவர்கள் 2006- மே மாதம் ஓய்வு 
பெற்றபின் வந்த புதிய தலைமையாசிரியை திருமதி.விஜயாஆனந்தம் அவர்கள் வந்தபின் இந்த அறிவியல் பூங்காவிற்குள் மாணவிகளை அனுமதிபப்து குறையத்தொடங்கியது. மாணவிகள் வராவிட்டாலும் பரவாயில்லை என்று அறிவியல் பூங்காவை மட்டும் தொடர்ந்து 2008-ம் ஆண்டுவரை பராமரித்து வந்தேன். மாணவிகள் ஏன் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படவில்லை? முன்பிருந்த தலைமையாசிரியை காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதாலா? அல்லது இதனால் என்ன பயன் என நினைத்து விட்டார்களா? எனக்குத்தெரியவில்லை! மாணவிகள் அறிவியல் பூங்காவிற்குள் செல்லவேண்டும் என ஆசைப்பட்டு, முன்பிருந்தது போல மாணவிகளை அறிவியல் பூங்காவிற்குள் அனுமதிக்கவேண்டும் என்று பழைய நடைமுறையை பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் ஆர்வலர் என்ற காரணத்தாலும் அமுல்படுத்திட  பல முறை வேண்டியும் பலன் கிட்டவில்லை.

                     பெரிஸ் கோப்
    இந்த அறிவியல் பூங்காவைக்கொண்டுவர விதைபோட்டவன் என்ற முறையில் பொதுச்சொத்துக்களைப்பேணவேண்டும் என்ற நோக்கத்தில் பராமரிப்புபணியை மட்டும் கைவிடாமல் 2008-ம் நான் தலைவர் பதவியை ராஜினாமாசெய்யும் வரை நான் செய்து வந்தேன். இருபது ஆண்டுகாலம் பள்ளியைக்கட்டிக்காத்த நான் ஏன் ராஜினாமா செய்யவேண்டும்? எனது பொதுச்சொத்துக்களைப்பேணவேண்டும் என்ற வைராக்கியத்தால் இப்பள்ளியின் ஒரு ஏக்கர் நிலம் தனியார் பள்ளியால் ஆக்கிரமிக்கப்பட்டதைக்கண்டுபிடித்து , பள்ளி நிலத்தை மீட்க பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் என்ற முறையில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியை எதிர்த்து வழக்குப்போட்டு வெற்றியும் பெற்றோம்.. இதைப்பொறுக்காத ரோட்டரிமெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகள் பல்வேறி இன்னல்களைப்புரிந்தனர்.இப் பெண்கள் பள்ளிக்குள் காலை மாலையில் நடைப்பயணம் மேற்கொள்ளும் ஆண்களுக்கு நகராட்சியால் விதிக்கப்பட்ட விதிகள் என்மீது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. இதனால் புகார் மனுக்களை கல்வித்துறை, முதல்வர் எனத்தொடந்து அனுப்பினார்கள்.  மேலும் எனது தொலைபேசி இலாகாவிற்கு பல்வேறு பொய்புகார்களை தொடர்ந்து எழுதுவது போன்ற சகுணி வேலைகளில் ஈடுபட்டனர்.


    கல்வித்துறக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து வந்த நிர்ப்பந்தம், தலைமையாசிரியையின் போதுமான ஒத்துழைப்பின்மை போன்ற நிர்ப்பந்தம் ,மன உலைச்சல் போன்ற காரணங்களால் தலைவர் பதவியை 2008-ல் ராஜினாமா செய்துவிட்டேன். திருப்பூரில் தனியார் பள்ளிகளில் கூட இல்லாத செயற்கை நீர்வீழ்ச்சி, வண்ணபறவைகள், மயில்கள், புராக்கள், வாத்துகள் என மாணவிகளின் மனம்கவர்ந்தவைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன்.பல ஆண்டுகளாக பயன்பட்ட அறிவியல் பூங்கா பராமரிப்பின்றி உருக்குலைந்து போவதைக்கண்டு, மாணவிகளுக்கு பயன்படாமல் துருப்பிடித்து வீணாவதைக்கண்டு ரத்தக்கண்ணீர் வடிப்பதைத்தவிர வேறு வழி தெரியவில்லை..இது மட்டுமல்ல மாணவிகளின் கண்களைக்கவர்ந்த அழகிய பல வண்ணப்பறவைகள், அழகிய நீர் வீழ்ச்சி,  கழிவு நீர் மறு சுழற்சி அமைப்பு என பள்ளிக்குப்பெருமை சேர்த்த, முன்பிருந்த தலைமையாசிரியை திருமதி.ஜரீன்பானுபேகம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தால்(என்னால்) உருவாக்கப்பட்ட அனைத்தும் பராமரிப்பின்றி, அதன் மீது அக்கறையின்றிப்போனதால் ஒவ்வொன்றாக அழிந்து கொண்டிருக்கிறது..
.
         
     கடந்த மூன்று வருடங்களாக அறிவியல் பூங்கா பராமரிப்பின்றி பழுது பட்டு பல உபகரணங்கள் காணாமலும் உடைந்தும் விட்டது. இதற்கொரு விடிவு காலம் வராதா என ஏங்கிக்கொண்டிருந்தேன்..அந்த நாளும் வந்தது... 24-06-2011 அன்று பள்ளிக்கு வந்த முதன்மைக்கல்வி அலுவலர் திரு. த.ராஜேந்திரன் அவர்கள், அறிவியல் பூங்காவிற்கு வெளியே பல மாணவிகள் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்ததைக்கண்டு வியப்படைந்து தலைமையாசிரியை அவர்களை அழைத்து பூங்காவைத்திறக்கச்சொல்லி,


முதன்மைக்கல்வி அலுவலர் திரு.த.ராஜேந்திரன் அவர்கள் தனிமங்களின் அட்டவணையைப்பார்வையிடுகிறார்.

 மானவிகளை உள்ளே அனுமதித்துள்ளார். உள்ளே சென்ற மாணவிகள் ஒவ்வொன்றையும் இயக்கிப்பார்த்துள்ளனர். ஒரு சில உபகரணங்கள் நீண்டகாலம் இயக்கப்படாததால் துருப்பிடித்து இயங்கவில்லை. இது போன்ற ஒரு அறிவியல் பூங்காவைக்கண்டு மகிழ்வடைந்த முதன்மைக்கல்வி அலுவலர் இதை உடனே பராமரித்து 27-6-2011 முதல் மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரச்சொல்லியிருக்கிறார். 25-6-11 அன்று சனிக்கிழமை தலைமையாசிரியை அவர்கள் எனக்கு போன்செய்து, இதை 2004-ல் அமைத்ததற்கு பாராட்டினார். மேலும் இதை பழுதுபார்க்கவும் கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக 26-6-2011 அன்று ஆட்களை வரவழைத்து அனைத்து உபகரணங்களையும் பழுது பார்த்தேன்.

  
    திரு. த.ராஜேந்திரன் அவர்கள் நெம்புகோல் தத்துவத்தைப்பார்வையிடுகிறார்.


முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்,.பொதுச்சொத்துக்களைப்பேணுகின்ற முறையில்... நலங்கெடப்புழுதியில் வீசப்பட்ட(அறிவியல் பூங்காவை) வீணையைக்கண்டு, அதை நல்லதோர் வீணையாக மாற்றச்சொன்னதால் தலைமையாசிரியை அவர்கள் தனது மேலதிகாரியின் கட்டளைக்கேற்ப அறிவியல் பூங்காவிற்குள் மாணவிகளை அனுமதித்துள்ளார்.  27-6-2011 அன்று அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் சார்பாக அறிவியல் பூங்காவின் செயல்பாடுகளை வீடியோவாகவும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.. அனேகமாக இந்த அறிவியல் பூங்கா பிற அரசு நகராட்சிப்பள்ளிகளிலும் விரைவில் அமைக்கப்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அரசுக்கு காட்டுவதற்காக எடுத்துள்ளனர். இதற்காக ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியை திருமதி.விஜயாஆனந்தம் அவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளேன். இதே போல செயற்கை நீர்வீழ்ச்சி, வண்ணப்பறவைகள், மண்புழு உரத்தயாரிப்பு, கைகழுவும் நீரை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்துவது,  மழை நீர் சேகரிப்பு அமைப்பு, கணிப்பொறி ஆய்வகம் என அனைத்தையும் பராமரிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் மட்டுமல்ல பள்ளி நலனிலும், மாணவிகளின் நலனிலும் அக்கறையுள்ளோரின் விருப்பமாகும்.

   ..


  தூய்மை செய்யப்பட்ட அறிவியல் பூங்காவின் மாதிரிகளைக்காண வீடியோவைக் கிளிக் செய்யவும்.


     மேற்கண்ட அறிவியல் பங்கப்பியொடர்ந்த இரக்ேண்டும் மாணிகள் பன்பத்ேண்டும் என்று நினத்ுக்கொண்டேன். நினைப்பெல்லாம் நந்துவிடுமா? சிலங்கள் கித்ிரு..ராஜந்திரன் அவர்கள் ிருப்பூரில் இரந்து கோவைக்கு மாற்றாகிச்சென்று விட்டார். இவர் மாற்றாகிச்சென்றில் ைமையாசிரியைக்கு மிக்கிழ்ச்சி ஏற்பட்டு...கேட்பற்கு அிகாரி இல்லால்ீண்டும் அறிவியல் பங்கா பாமிப்பின்றி சிறுகச்சிறுக அழியத்ொடங்கியு. ஒரு நாள் காலையில் நைப்பம் செல்லும்பு கித்ில், காற்றின் ஈரப்பம் காட்டும் குவியைக்காணில்ல.ேக்குமத்ில் செய்யப்பட்டப்பந்ையும் காணில்லை.ாவல்காரிடம் கேட்டேன்.... ெரியு என்றார்...    இ
    
    இன்ன்ன் 


               Wednesday, June 22, 2011

அழும் குழந்தை சிரிக்கிறது...

 
    திருப்பூரில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெம் ஸ்கூல் ஆப்
எக்ஸ்லென்ஸ் (PEM SCHOOL OF EZCELLENCE)பள்ளிக்கு 20-06-2011 அன்று காலை சென்றிருந்தேன். இப்பள்ளி CBSE திட்டத்தில் செயல்படுகிறது. நமது காலத்தில் எல்லாம் ( 25 வருடமுன்பு)ஐந்து வயது முடிந்தவுடன் தான் பள்ளியில் சேர்ப்பார்கள். அதுவும் வலது கையால் இடது காதைத்தொட வேண்டும்..ஆனால் இப்போது...
மூன்று வயது முடிவதற்குள்ளேயே முதலில் PRE K.G.,அப்புறம்  L.K.G. பின் U.K.G, எனப்படித்து வந்தால் தான் ஒன்றாம் வகுப்பில் சேரவே முடியும்..
அம்மா மடியில் மழலை பேசி விளையாடும் குழந்தையை பள்ளியில் சேர்த்தவுடனேயே அழ ஆரம்ப்பித்து விடுகிறது..தாயைப்பிரிகிற சூழல் 
மட்டுமல்ல, தான் ஓடியாடி விளையாடிய பழகிய இடத்திற்குப்பதிலாக , பள்ளிச்சூழல் மாறுபட்டு இருப்பதால், பயந்து போய் அழ ஆரம்பித்துவிடுகிறது.
 குழந்தைகளுக்கு பறவைகளை மிகவும் பிடிக்கும்.எனவே பள்ளியில் வண்ணப்பறவைகளை வைத்து பராமரிக்கவேண்டும்.
 மழலையர் பள்ளிகளில் ஊஞ்சல், சறுக்கு போன்றவற்றை அமைப்பதன் மூலம் குழந்தைகளின் வீட்டு நினைப்பை மாற்றி ,பிற குழந்தைகளோடு விளையாடும் எண்ணத்தை ஏற்படுத்தினால் பள்ளிச்சூழலுக்கு குழந்தைகள் சில மணி நேரங்களில் பழகிவிடும். 

எனவே பள்ளிச்சூழல் குழந்தைக்கு பிடித்தமானதாக இருந்தால் அழ ஆரம்பிக்கும் குழந்தை சில மணித்துளிகளில் தனது பயம் நீங்கி அழுவதை நிறுத்தி விடுகிறது..அதற்கு பள்ளிச்சூழல் குழந்தையை இணக்கமானதாக மாற்ற  வர்ணமீனகள், பறவைகள்,அழகிய மலர்கள் , நீர்வீழ்ச்சிகள் என  பள்ளிகளில் ஏற்படுத்த ..

 வேண்டும்..


Thursday, June 9, 2011

சரசுவதிக்கு கோவில் கட்டுவோம்...


             மலர்க்கொடிகளின் வேர்களுக்கு....           திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒரு ஆக்கபூர்வமான அதிசயமான 32 புதிய வகுப்பறைகளுக்கான கிரஹப்பிரவேசம் 8-6-2011 அன்று நடைபெற்றது...அவர்களுடைய அழைப்பிதழில் யாருடைய பெயரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை....யார் அழைக்கிறார்கள் என்ற இடத்தில்,
  மலர்க்கொடிகளின் வேர்களுக்கு
  நீர் ஊற்றும் சேவகர்களாகவும்,
  காத்து நிற்கும்     காவலர்களாகவும்...
             
 தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
 பள்ளி வளர்ச்சிக்குழு

என்று மட்டுமே போட்டிருந்தார்கள்.. எனக்கும் அழைப்பிதழ் வந்தது….
காலை 6 மணிக்கு பள்ளிக்குப்போனேன்...அங்கு நான் கண்டது...
கலையரசி படத்திலே எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு பாட்டுப்பாடுவார்..அது
அதிசியம் பார்த்தேன் மண்ணிலே...அது அப்படியே நிக்குது என் கண்ணிலே..
என்று வரும்..அது போலத்தான்...எனக்கும் பாடத்தோன்றியது... பள்ளியின் பிரம்மாண்டமான தோற்றத்தைப்பார்த்து...
 அட! இதென்ன பிரமாதம் என்கிறீர்களா?.தனியார் பள்ளிகளைப்பார்த்த கண்களுக்கு இது அதிசயமாகப்படாதுதான்!.ஆனால்  இந்த பள்ளியின் பழைய(2003) தோற்றத்தைப்பார்த்த எனக்கு அதிசயமாகத்தான் பட்டது! இப்பள்ளியின் பழைய தோற்றத்தின் சிறு பகுதியைப்பாருங்கள்!..அனுப்பர்பாளையம் பகுதியின்
சந்தைப்பேட்டைக்குள் சுற்றிலும் பன்றிகள் புடை சூழ நாற்றம் பிடித்த இடத்தில் செயல்பட்டதைக்கண்டவர்களுக்கு........இப்போது ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்..


       2004-ம் ஆண்டு அனுப்பர்பாளையம்பகுதியில்   பொருளாதார வசதியும், கல்வியின்பால் அக்கறையும்கொண்ட பலர் இப்பள்ளியை மாற்றியமைக்க உறுதிபூண்டனர். அச்சமயம் பெற்றோர்-ஆசிரியர் கழகச்செயல்பாட்டிற்கு தமிழகளவில் முன் உதாரணமாக விளங்கிய ஜெய்வாபாய் நகராட்சிப்பள்ளியின் வளர்ச்சியினால் உந்தப்பட்டு, அதன் தலைவராக இருந்த என் அனுபவத்தை எடுத்துச்சொல்ல அழைக்கப்பட்டேன்.அந்தக்கூட்டத்தில் அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளியில் திரு.பரணி பெட்ரோல் பங்க் நடராஜ் அவர்கள் தலைமையில், உதவித்தலைவராக திரு. ஆறுமுகம், பொருளாளராக திரு.தேவராஜ் ஜெயின் ஆகியோரைக்கொண்ட   பெற்றோர்-ஆசிரியர் கழகம் புனரமைக்கப்பட்டது... நல்லோர் பலரும் கை கொடுக்க ஊர் கூடிக்கல்வித்தேரை இழுத்தனர்.
       2005-ம் ஆண்டில் அனுப்பர்பாளையம் பகுதியில் இருந்த இந்து அறநிலையத்துறைக்குச்சொந்தமான  10 ஏக்கர் கோவில் இடத்தை அரசியல் எதிர்ப்பு, கோர்ட் தடை என பல்வேறு சோதனைகளைத்தாண்டி, அன்றைய சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.சிவசாமி அவர்களின் துணையோடு ரூ.25 லட்சத்திற்கு  அரசிற்குச்சொந்தமான கோவில் இடத்தை, அரசுப்பள்ளிக்கு விலை கொடுத்து வாங்கினார்கள்...தற்காலிகமாக ரூ.20 லட்சம் மதிப்பில் 20 வகுப்பறைகள் கட்டப்பட்டு, பள்ளியை பன்றித்தொழுவமாக இருந்த சந்தைப்பேட்டைக்குள் இருந்து மாற்றினார்கள்.முதல் கட்டமாக தற்காலிகமாக 20 வகுப்பறைகள் கட்டப்பட்டு, அரசு மேல் நிலைப்பள்ளியாகவும் தகுதி உயர்த்தப்பட்டது. தங்களுக்கிருந்த செல்வாக்கின் காரணமாக , அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் துணையோடு கடும் முயற்சி செய்து, நபார்டு வங்கியின் உதவியுடன் நிரந்தரமாக 14 வகுப்பறைகள் கட்டப்பட்டன..
        இருபாலரும் படிக்கும் மேல் நிலைப்பள்ளியாக இருந்ததால் மேலும் பல வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் போன்றவை தேவைப்பட்டது..அரசின் உதவியை நாடினார்கள்..தமிழகரசு மற்றும் தனியார் பங்களிப்பு 49%+51% என்ற கணக்கில் அரசு ரூ.49 லட்சம் தந்தது..பொதுமக்களிடம்  ரூ.51 லட்சம் திரட்டவேண்டும்..கடுமையான பணி..ஊர்கூடித்தேர் இழுக்கும் பணி..32 வகுப்பறைகள் கட்ட வேண்டும்..எடுத்த பணியை எப்படி முடிப்பது என சிந்தித்தார்கள்..ரூ.2 லட்சத்திற்குமேல் நிதியளிப்பவர்கள்,  பெயர் வகுப்பறையில் கல்வெட்டில் பொறிக்கப்படும் எனக்கூறினார்கள். பலரின் ஏச்சிற்கும், பேச்சிற்கும் இடையில் 32 கொடை வள்ளல்களைக்கண்டுபிடித்தார்கள். இதற்கிடையில் அரசுப்பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவராக பெற்றோர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதியின் காரணமாக,பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கல்வித்துறையால் பதவி விலகினார்கள். புதிய தலைவராக வந்த பெற்றோர்(அரசுப்பள்ளி மாணவனின் தந்தை)தினக்கூலித்தொழிலாளி..அவரால் பாவம் என்ன செய்யமுடியும்? ஒரு சாக்பீஸ் பெட்டிகூட நன்கொடையாக வாங்கித்தரமுடியாதவர். கட்டடப்பணிகள் பாதியிலே நின்றது.
புதிய தலைமையாசிரியையாக திருமதி.ராணித்தங்கம் வந்தார்..ஏற்கனவே இருந்த நிர்வாகிகளை அனுகினார். பள்ளிவளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் பள்ளி வளர்ச்சிக்குழிவிலே சேர்ந்து பணியாற்றத்துவங்கினார்கள். நன்கொடையாளர்களீடம் இருந்து ஆரம்பத்தில் ரூ.51 லட்சம் திரட்டப்பட்டது..கட்டுமானப்பொருள்களின் விலையேற்றத்தால் கட்டப்பட்ட கட்டங்கள் முக்கால்வாசியில் நின்றன.  என்ன செய்வது? ஏற்கனவே பணம்கொடுத்தவர்களை மீண்டும் தயக்கத்துடனேயே அனுகினார்கள்..திருப்பூரின் கடுமையான தொழில்மந்தத்திற்கிடையேயும் ஏற்கனவே நிதிகொடுத்தவர்கள் மனம்கோணாது மேலும் ரூ.24 லட்சத்தை வழங்கி, மகாகவி பாரதி,

      ஏழைக்கு எழுத்தறிவிக்க,

               நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்
                    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
               அதுவமற்றவர் வாய்ச்சொல்லருளீர்
                    ஆண்மை யாளருழைப்பினை நல்கீர்..

என்பார்.பாரதியின் இக்கவிதைக்கு உயிர்கொடுத்த இந்த 32 பேருக்கு முதல் மரியாதை செய்யும் விழாதான் 8-6-2011 அன்று நடைபெற்றது.
              இரண்டடுக்குடன் கம்பீரமாக 32 வகுப்பறைகள் கட்டியாயிற்று!. வகுப்பறைகளை எப்படி ஒதுக்குவது? குடவோலை முறையக்கையாண்டனர். ஒரு சில்வர் குடத்தினுள் 32 எண்களை எழுதிப்போட்டனர்.  நிதி கொடுத்தவர் ஒரு டோக்கனை எடுக்கவேண்டும்..டோக்கனில் வந்த எண் அவர் கட்டிக்கொடுத்தது..அவர் விரும்பும் பெயரை அந்த வகுப்பறையில் வைத்துக்கொள்ளலாம்..
ooநன்கொடையளித்தவர்களின் குடும்பத்தார் முன்னிலையில் நான்கு அய்யர்கள் கணபதி ஹோமம் செய்தனர். பூஜை முடிந்தபின் ஒவ்வொருவருக்கும் பூஜையில் வைக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன.பின் ஒவ்வொருவரின் புகைப்படத்துடன் பள்ளி படத்துடன் கூடிய ஷீல்டும், பாராட்டு பத்திரமும் தரப்பட்டது..அதில்...
              நிதி தந்தவர்கள் தங்களுக்குரிய வகுப்பறைக்கு மீண்டும் சென்று மாணவ-மாணவிகளின் நலனுக்காக மீண்டும் பூஜைசெய்து வழிபட்டனர். எனக்கும் கூட ஒரு பாராட்டுப்பத்திரம் தந்தார்கள்..எனக்கெதற்கு எனக்கேட்டேன்...எங்களுக்கு”வழிகாட்டியே” நீங்கள் தான் என்றார்கள்..எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! கண்கள் கலங்கித்தான் போய்விட்டது...
       பல வருடங்களாக அடிப்படை வசதிகளின்றி பள்ளி என்பதற்கே பொருத்தமற்று இருந்த ஒரு அரசுப்பள்ளிக்கு, 32 வகுப்பறைகள் கட்டித்தந்தவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு பள்ளிவளர்ச்சிக்குழு 08-06-2011-ல் ஏற்பாடு செய்தனர். இதில் கூட ஈகோவின் காரணமாக மன வேதனைப்படக்கூடியளவில் 7-6-2011 இரவு பூஜையை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை பள்ளி வளர்ச்சிக்குழுவினர் முறியடித்து பூஜையை சிறப்பாக நடத்தி, நன்கொடையாளர்களைக் கெளரவித்தார்கள். இக்கண்கொள்ளாக்காட்சியைக்காண பள்ளி நிர்வாகத்திற்கும், மாணவ-மாணவிகளுக்கும்தான் கொடுத்துவைக்கவில்லை..
    
     திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சி.சிவசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்..இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் கே.தங்கவேல் அவர்கள் சட்டமன்றக்கூட்டத்தின் காரணமாக கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் கூட தங்களது  நல்லாசியைத்தெரிவித்திருப்பார்கள்....

              பல காலம் அரசியலால் அவதிப்பட்டுவந்த பள்ளிக்கு விடிவு காலம் வந்த பின்பும் மழை விட்டும் துவானம் விடவில்லை என்பதைப்போல, சரசுவதிக்கு கோவில் கட்ட உதவியவர்களுக்கு நன்றி செலுத்திய நிகழ்வைக்கூட அரசியலாக்கிவிட்டனர். இனி நடந்ததைப்பேசிப்பயனில்லை.. நடக்க வேண்டியதைப்பார்ப்போம்..தமிழகரசின் கல்வித்துறை சார்பாக, இந்த 32 வகுப்பறைகளை மிகச்சிறப்பான முறையில் கட்டித்தந்த பள்ளிவளர்ச்சிக்குழுவினரையும், நன்கொடையாளர்களையும் உரிய வகையில் கெளரவிக்க வேண்டும். அப்போதுதான் மேலும் பல அரசுப்பள்ளிகளுக்கு நன்கொடையளிக்க மக்கள் முன்வருவார்கள்.

       பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்.!.
       எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்.!.

   
  
.. 

ராணி ரூபா தேவி.. RANI RUPA DEVI STEP WELL AT AHEMADABAD, GUJARATH.                ராணி ரூபா  தேவி அல்லது ராணி ரூபாபாயின் பெய...