Posts

Showing posts from 2022

கல்வித்தாஜ்மகால் உருவாக்கிய லட்சுமிதேவி

Image
கல்வித்தாஜ்மகால் உருவாக்கிய லட்சுமிதேவி                                அக்டோபர் 31 ம் தேதி மதியம் 1 மணி சுமாருக்கு எனது போனுக்கு பெயர் தெரியாத ஒரு போனில் இருந்து கால் வருகிறது. நான் யாராக இருக்கும் என்ற எண்ணத்தில் பேசுகிறேன்.   எதிர் முனையில் அண்ணா நான் லட்சுமிதேவி கோவையில் இருந்து பேசுகிறேன் என்றவுடன் எனக்கு முகம் ஞாபகம் வந்துவிட்டது. 1985 ம் ஆண்டில் இருந்து எனக்கு   தொலைபேசித்துறையில் முதலில் தற்காலிக தொலைபேசி இயக்குனராக இருந்தார். நான் அங்கம் வகுத்த NFTE சங்கத்தின் மூலம் இவர்களைப்போல நாடு முழுவதும் இருந்த தற்காலிக ஊழியர்களை(RTP)   நிரந்தர ஊழியர்கள் ஆக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்து, போராடி நிரந்தரமானவர்களில் இவரும் ஒருவர்.   நான் திருப்பூரில் இருந்தாலும் கோவை தொலைபேசி நிலையத்தில் இவரைப்போல நிறையப்பேர் என்னை அண்ணா என்றே அழைப்பார்கள். 2011ம் ஆண்டு நான் ஓய்வு பெறும் வரை தொடர்பில் இருந்தார்கள். நான் ஓய்வு பெற்றபின் தொடர்பு படிப்படியாக விட்டுப்போய்விட்டது.   அண்ணா, இன்னும் ஜெய்வாபாய்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருக்கிறீர்களா? பள்ளிக்கு செல்வீர்களா? என்றார்.   நான் திருப்பூர் ஜெய்வா