சரசுவதிக்கு கோவில் கட்டுவோம்...
மலர்க்கொடிகளின் வேர்களுக்கு .. .. திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒரு ஆக்கபூர்வமான அதிசயமான 32 புதிய வகுப்பறைகளுக்கான கிரஹப்பிரவேசம் 8-6-2011 அன்று நடைபெற்றது...அவர்களுடைய அழைப்பிதழில் யாருடைய பெயரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை....யார் அழைக்கிறார்கள் என்ற இடத்தில், மலர்க்கொடிகளின் வேர்களுக்கு நீர் ஊற்றும் சேவகர்களாகவும், காத்து நிற்கும் காவலர்களாகவும்... தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பள்ளி வளர்ச்சிக்குழு என்று மட்டுமே போட்டிருந்தார்கள்.. எனக்கும் அழைப்பிதழ் வந்தது …. காலை 6 மணிக்கு பள்ளிக்குப்போனேன்...அங்கு நான் கண்டது... கலையரசி படத்திலே எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு பாட்டுப்பாடுவார்..அது அதிசியம் பார்த்தேன் மண்ணிலே...அது அப்படியே நிக்குது என் கண்ணிலே.. என்று வரும்..அது போலத்தான்...எனக்கும் பாடத்தோன்றியது... பள்ளியின் ப...