அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!
(அல்லி பூ பதிவு 2) அல்லிக்குளம்(Nymphaea nouchali)வைக்கலாம் வாருங்கள்! நீல அல்லி. அடடே! தவளையாரே!! இலை மேல் உட்கார் ந்து என்ன பார் க்கிறாய்? நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதைத்தான் நானும் பார்க்க வ ந்தேன்! ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் பள்ளியில் உள்ள அல்லிக்குளத்தைப்பார்வையிடும் பிற பள்ளி மாணவ-மாணவிகள். சந்திரனைக்காணாமல் அல்லி முகம் மலருமா? என்ற கண்ணதாசன் பாட்டிற்கு அழகு சேர்க்கும் வெள்ளை நிற ஆம்பல் என்கிற அல்லி !... குவளை என அழைக்கப்படும் நீல அல்லி. பூக்களை ரசிக்காத மனிதர்கள் உண்டா? அப்படி ஒரு மனிதன் இன்னும் பிறக்கவில்லையென்றே சொல்லலாம்.. பூக்களைப்பறித்து அதுவும் அடுத்தவர் வீட்டு பூவைப்பறித்து சாமிக்கு வைப்பதில் ஒரு குஷி இருக்கிறதே சொல்லி மாளாது! சாமி பூ கேட்டதாகத்தெரியவில்லை!ஆசாமிகளாகிய நாம் தான் சாமிகளுக்கு பூ கோர்த்து மாலையாக அணிவித்து மகிழ்கிறோம்...பூக்களின் அழகைக்கண்டு சொக்கிவிடுகிறோம்! பூக்களின் மணமும்,அதன் கல்ர்,மென்மை போன்றவை நமது கவலைகளை மறக்கச்செய்து,மன அழுத்தங்களை குறைத்து விடுகிறது.அதிலும் தாமரை,அல்லி போன்ற நீர்வாழ்தாவரங்களின் பூக்களின் அழகைத்தான் நீங்களே பார்க்க...