Posts

Showing posts from 2023
Image
  சனிப்பெயர்ச்சி என்றால் என்ன ? ! படம் 1.அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மையான அழகிய சனி கிரகம். இந்த கிரகம் உங்கள் வீட்டில் (பூமியில்)இருந்து 1.2 பில்லியன் கி.மீ தூரத்தில் இருக்கிறது. சூரியனை ஒரு முறை சுற்ற 30 வருடம் எடுத்துக்கொள்கிறது. மணிக்கு 36480 கி.மீ. வேகத்தில் செல்கிறது. # சனியின் தாக்கமண்டலம் அதன் மையத்தில் இருந்து வெறும் 5.45 கோடி கி.மீ. தான் என்று 19- ம் நூற்றாண்டிலேயே கணிதமேதை லாப்ளாஸ் கண்டுபிடித்துவிட்டார். இதன் பின்னரும் 120 கோடி கி.மீ தூரத்தில் உள்ள சனியின் தாக்கம் பூமியில் உள்ள மனிதர்கள் மீது இருக்கும் சோதிடர்கள் கூறுவது தவறானது, பொய்யானது என்பதை புரியாமல் மக்கள் இருப்பது வேதனையாக உள்ளது.# ( நன்றி விஞ்ஞான துளிர் டிசம்பர் 2023 இதழ் 12ம் பக்கம்) படம் 2. புராணக்கதைகளில் வரும் போலியான சனி கிரகம். மனிதர்கள் உருவாக்கிய மனித சிற்பம். இவரின் வாகனம் காகம். இவர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு போகிறார் என்று ஜனவரி 17 - 2023 ல் சொல்லி மக்கள் மத்தியில் பயம் ஊட்டி,அப்பனும் மகனும், அம்மாவும் மகளும் 2 வருடம் முகம் பார்க்க கூடாது என்று( திருக்கணித பஞ்சாங்கத்தின் படி)

சித்திரை 1 தமிழ் வருட பிறப்பா ? சமஸ்கிருத வருட பிறப்பா? தமிழர்களை முட்டாளுக்கும் ஆரியர்களின் புராணப்புரட்டு!

Image
  சித்திரை 1 ம் தமிழ் புத்தாண்டு என்றும், தமிழ் புத்தாண்டு அல்ல அது சமஸ்கிருத புத்தாண்டு என்றும் அல்ல அல்ல இது ஆரிய புத்தாண்டு என்றும் ஊடகங்களில் வருகின்றன. சித்திரை 1 புத்தாண்டு என்பது வேறு சில நாடுகளிலும் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. நமக்கு சித்திரை 1 தமிழ் புத்தாண்டு என்று ஏன் கொண்டாடத்தயக்கம் என்றால் தமிழ் வருடம் என்பது 60 ஆண்டு சுழற்சியில் வருவதால் தான்! அது ஒன்றாவதாக பிரப என்று ஆரம்பித்து அக்சய என்று 60 ஆண்டுகளில் முடிகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள பசலி , சாலிவாகன ஆண்டு, கொல்லம் ஆண்டு, தமிழில் 60 ஆண்டுக்கு மாற்றாக உள்ள திருவள்ளுவர் ஆண்டு, கிரிகோரியன் ஆங்கில ஆண்டுகள் எல்லாம் தொடர் ஆண்டுகளாக உள்ளதால் வரலாற்று நிகழ்வுகளை சரியான முறையில் கணக்கு வைக்க முடியும். ஆனால் தமிழில் உள்ள 60 ஆண்டுக்கணக்கில் நம் வயதைக்கூட சரியாக கணிக்கமுடியாத நிலைமையுள்ளதை நாம் இன்னும் உணரவில்லை. நல்ல வேளை கிரிகோரியன் ஆண்டும், திருவல்ளுவர் ஆண்டும் 2054 ம் இருப்பதால் நாம் பிழைத்தோம்! அதாங்க ஆங்கில ஆண்டு இருப்பதால் நாம் நம் வரலாற்று நிகழ்வுகளையும், நம் வயதையும் சரியாக கூறமுடிகிறது. இது ஒரு புறம் இருந்த