Posts

Showing posts from June, 2011

நல்லதோர் வீணை செய்தே....

Image
      நல்லதோர் வீ ணை செய்தே!...                          ...    புதிய தமிழகரசு பதிவியேற்றவுடன் சுமார் ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தைப்புறக்கணித்துவிட்டது...ஏன்..இது முன்பிருந்த முதல்வர் கருணா நிதியால் கட்டப்பட்டது என்ற ஈகோதான்..புதிய தலைமைச்செயலகம் என்னவாகும்..இன்னும் சில மாதங்களில் பராமரிப்பின்றி வைக்கப்பட்டு செடி கொடிகள், செயற்கை நீருற்றுக்கள் போன்றவைகள் கவனிப்பாரற்று அழியும்...கண்கவர் கலைப்பொருட்கள் , மேஜை நாற்காலிகள் காணாமல் போகும்... ஆக மொத்தம் மக்கள் வரிப்பணம் அத்தனையும் ஒரு முன்னாள் முதல்வர் மீதான வெறுப்பு, தேசத்தின்பொதுச்சொத்தைக்கரையான் பிடித்துபோகச்செய்வதாக இருக்கிறது....      .இதாவது ஒரு புதிய ஆட்சி வந்ததால் புதிய தலைமைச்செயலக ம் புறக்கணிக்கப்பட்டது என்று கூறலாம்..ஆனால் புதிய ஆட்சி வராமலேயே ஒரு இருபது நாள்   தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு ஏப்ரல் 13 க்குப்பிறகு புதிய தலைமைச்செயலகம் வந்த  முதல்வர் கலைஞர் அவர்கள் அங்கிருந்த மீன் தொட்டியைப்பார்க்கிறார்..பாசம் பிடித்து கிடக்கிறது. உடனே அங்கிருந்த அதிகாரிகளைப்பார்த்து என்ன பராம

அழும் குழந்தை சிரிக்கிறது...

Image
      திருப்பூரில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் (PEM SCHOOL OF EZCELLENCE)பள்ளிக்கு 20-06-2011 அன்று காலை சென்றிருந்தேன். இப்பள்ளி CBSE திட்டத்தில் செயல்படுகிறது. நமது காலத்தில் எல்லாம் ( 25 வருடமுன்பு)ஐந்து வயது முடிந்தவுடன் தான் பள்ளியில் சேர்ப்பார்கள். அதுவும் வலது கையால் இடது காதைத்தொட வேண்டும்..ஆனால் இப்போது... மூன்று வயது முடிவதற்குள்ளேயே முதலில் PRE K.G.,அப்புறம்  L.K.G. பின் U.K.G, எனப்படித்து வந்தால் தான் ஒன்றாம் வகுப்பில் சேரவே முடியும்.. அம்மா மடியில் மழலை பேசி விளையாடும் குழந்தையை பள்ளியில் சேர்த்தவுடனேயே அழ ஆரம்ப்பித்து  விடுகி றது..தாயைப்பிரிகிற சூழல்   மட்டுமல்ல, தான் ஓடியாடி விளையாடிய பழகிய இடத்திற்குப்பதிலாக , பள்ளிச்சூழல் மாறுபட்டு இருப்பதால், பயந்து போய் அழ ஆரம்பித்துவிடுகிறது.  குழந்தைகளுக்கு பறவைகளை மிகவும் பிடிக்கும்.எனவே பள்ளியில் வண்ணப்பறவைகளை வைத்து பராமரிக்கவேண்டும்.   மழலையர் பள்ளிகளில் ஊஞ்சல், சறுக்கு போன்றவற்றை அமைப்பதன் மூலம் குழந்தைகளின் வீட்டு நினைப்பை மாற்றி ,பிற குழந்தைகளோடு விளையாடும் எண்ணத்தை ஏற்படுத்தினால் பள்

சரசுவதிக்கு கோவில் கட்டுவோம்...

Image
               மலர்க்கொடிகளின் வேர்களுக்கு .. ..            திருப்பூரில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒரு ஆக்கபூர்வமான அதிசயமான 32 புதிய வகுப்பறைகளுக்கான கிரஹப்பிரவேசம் 8-6-2011 அன்று நடைபெற்றது...அவர்களுடைய அழைப்பிதழில் யாருடைய பெயரும் முன்னிலைப்படுத்தப்படவில்லை....யார் அழைக்கிறார்கள் என்ற இடத்தில்,   மலர்க்கொடிகளின் வேர்களுக்கு   நீர் ஊற்றும் சேவகர்களாகவும்,   காத்து நிற்கும்     காவலர்களாகவும்...                தலைவர் மற்றும் உறுப்பினர்கள்  பள்ளி வளர்ச்சிக்குழு என்று மட்டுமே போட்டிருந்தார்கள்.. எனக்கும் அழைப்பிதழ் வந்தது …. காலை 6 மணிக்கு பள்ளிக்குப்போனேன்...அங்கு நான் கண்டது... கலையரசி படத்திலே எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு  பாட்டுப்பாடுவார்..அது அதிசியம் பார்த்தேன் மண்ணிலே...அது அப்படியே நிக்குது என் கண்ணிலே.. என்று வரும்..அது போலத்தான்...எனக்கும் பாடத்தோன்றியது... பள்ளியின் பிரம்மாண்டமான தோற்றத்தைப்பார்த்து...   அட! இதென்ன பிரமாதம் என்கிறீர்களா? .தனியார் பள்ளிகளைப்பார்த்த கண்களுக்கு இது அதிசயமாகப்படாதுதான்!.ஆனால்   இந்த பள்ளியின் பழைய(2003) தோற்றத்தைப்பார்த்த