Posts

Showing posts from November 23, 2010

அரசுப்பள்ளிகளும்-பராமரிப்பும்..

Image
அரசு/ நகராட்சிப்பள்ளிகளைப்பராமரிக்க சில ஆலோசனைகள்.... . .. அரசுப்பள்ளிகளும் பராமரிப்பும். . தமிழக அரசின் சார்பாக நடத்தப்படும் அரசு பொதுமருத்துவமனைகள்,அரசு போக்குவரத்து பேருந்துகள், அரசு, நகராட்சி,ஊராட்சிப்பள்ளிகள் போன்றவற்றிற்கு பொதுவான குறைபாடாக மக்களாலும்,ஊடகங்களாலும் சொல்லப்படுவது ஒன்றே ஒன்றுதான்! அது போதிய பராமரிப்பின்றி ,சுத்தமின்றி காணப்படுவதுதான். அரசுப்பள்ளிகள், நகராட்சிப்பள்ளிகள் கட்டப்படும்போது நன்றாகத்தான் இருக்கிறது.மாணவர்களின் வசதிக்காக வாங்கப்படும் இருக்கை வசதிகள்,அலமாரிகள்,கணிப்பொறிகள் போன்றவைகள் மட்டுமல்ல, வகுப்பறைக்கட்டங்கள் உட்படபோதியபராமரிப்பின்றியும்,முரட்டுத்தனமானகக்கையாளுவது போன்றவைகளால் விரைவில் சிதிலமடைந்து விடுகிறது.பெரும்பான்மையான பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு தான் ஓய்வு பெறும்போது, எந்தவிதமான புகாரின்றி,தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட. தன்னால் வாங்கப்பட்ட அனைத்துப்பொருள்களையும் அடுத்து வரும் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து பென்சனை பாதுகாத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்..மாணவர்களின் கல்வி வளர்ச்சி