Posts

Showing posts from November, 2018

தீபாவளி பிறந்த கதை..

Image
                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளியை முன்னிட்டுத்தான் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு போனஸ் என்பது வழங்கப்படுகிறது. அனைத்து மதம், ஜாதிகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கப்படுவதால்( குறைந்த பட்சமாக ஒரு மாத சம்பளம் முதல் குஜராத்தில் ஒரு வைர வியாபாரி தன் அலுவலகத்தில் பணிபுரியும் 800 தொழிலாளர்களுக்கு கார் வழங்கியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..) இது மதங்களைக்கடந்து அனைவராலும் வரவேற்கப்படும் ஒரு இந்துக்கள் பண்டிகையாக மட்டும் இதனை பார்க்கக்கூடாது. ஏனென்றால் தீபாவளி என்பது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல! சொல்லப்போனால் இந்துமதத்தினர் சுவீகரித்துக்கொண்ட பண்டிகை என்றும் கூறலாம்..!                      பீஹாரில் பவாபுரி என்ற ஊர்..கி.மு . 599 .. அக்டோபர் மாதம் 14-ம் நாள்..அமாவாசைக்கு முந்திய இரவு.. ஒரு 72 வயது ஆடைகளற்ற ஒரு மகான் ஊர் மக்களிடையே அகிம்சை, திருடாமை, வாய்மை போன்ற தத்துவங்களை கூறிக்கொண்டிருக்கிறார். ஊர் தலைவர் உட்பட மொத்த ஊர் மக்களும் விடிய விட