Posts

Showing posts from September, 2010

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

Image
(அல்லி பூ பதிவு 2) அல்லிக்குளம்(Nymphaea nouchali)வைக்கலாம் வாருங்கள்! நீல அல்லி. அடடே! தவளையாரே!! இலை மேல் உட்கார் ந்து என்ன பார் க்கிறாய்? நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதைத்தான் நானும் பார்க்க வ ந்தேன்! ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் பள்ளியில் உள்ள அல்லிக்குளத்தைப்பார்வையிடும் பிற பள்ளி மாணவ-மாணவிகள். சந்திரனைக்காணாமல் அல்லி முகம் மலருமா? என்ற கண்ணதாசன் பாட்டிற்கு அழகு சேர்க்கும் வெள்ளை நிற ஆம்பல் என்கிற அல்லி !... குவளை என அழைக்கப்படும் நீல அல்லி. பூக்களை ரசிக்காத மனிதர்கள் உண்டா? அப்படி ஒரு மனிதன் இன்னும் பிறக்கவில்லையென்றே சொல்லலாம்.. பூக்களைப்பறித்து அதுவும் அடுத்தவர் வீட்டு பூவைப்பறித்து சாமிக்கு வைப்பதில் ஒரு குஷி இருக்கிறதே சொல்லி மாளாது! சாமி பூ கேட்டதாகத்தெரியவில்லை!ஆசாமிகளாகிய நாம் தான் சாமிகளுக்கு பூ கோர்த்து மாலையாக அணிவித்து மகிழ்கிறோம்...பூக்களின் அழகைக்கண்டு சொக்கிவிடுகிறோம்! பூக்களின் மணமும்,அதன் கல்ர்,மென்மை போன்றவை நமது கவலைகளை மறக்கச்செய்து,மன அழுத்தங்களை குறைத்து விடுகிறது.அதிலும் தாமரை,அல்லி போன்ற நீர்வாழ்தாவரங்களின் பூக்களின் அழகைத்தான் நீங்களே பார்க்க

நமது வாரிசுகளைக்காப்பாற்ற வேண்டுமா?

Image
      நமது வாரிசுகளுக்காக பூமியைக் காப்போம்! சுற்றிச்சுழலும் பூமி! உன்னை சூடு படுத்தியது யாரு! சுற்றிச்சுழலும் பூமி! உன்னை சூடு படுத்தியது யாரு? மரங்களை வைத்து குளிர்விக்கிறோம் பாரு.! நீ சந்தோசமாக சுழன்றாடு! கவலைப்படாதே மரமே! தண்ணீர் ஊற்ற நாங்கள் இருக்கிறோம். . திருப்பூர் மாவட்ட கல்வித்துறையின் சார்பாக 6000-ம் மரங்கள் நடும் விழா! 15-09-2010 ஜெய்வாபாய் பள்ளியில்பேரரிஞர் அண்ணா பிற ந்த நாள் அன்று ஆரம்பம்.. மனித குலம் காக்க மரம் வளர்ப்போம்! இ ந்த உலகில் உள்ள நாம் ஒவ்வொருவரும் ஓடி ஓடிச்சம்பாதிப்பது எதற்காக?,அழகான வீடுகள் கட்டுவதும், நிலங்களை வாங்கிப்போடுவதும், கோடி கோடியாக சம்பாதித்து வங்கிக்கணக்கை வீங்கவைப்பதும் எதற்காக?அரண்மனை போன்ற வீடுகளில் நமது குழந்தைகள் வாழவேண்டும்,ஆடம்பரக்கார்களில் பவனி வரவேண்டும்,பத்து தலைமுறைக்கும் நமது வாரிசுகள் கவலையின்றி இப்பூமியில் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்பதற்காகவே ஒவ்வொருவரும் முடியும் மட்டும் சொத்து சேர்த்து வைக்கவே விரும்புகிறோம். உண்மையிலேயே நமது குழ ந்தைகள் மீது அக்கறை இருக்குமானால ,அவர்களுடைய எ