Wednesday, September 29, 2010

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!


(அல்லி பூ பதிவு 2)
அல்லிக்குளம்(Nymphaea nouchali)வைக்கலாம் வாருங்கள்!

நீல அல்லி.

அடடே! தவளையாரே!! இலை மேல் உட்கார் ந்து என்ன பார்க்கிறாய்?

நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதைத்தான் நானும் பார்க்க வ ந்தேன்!


ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் பள்ளியில் உள்ள அல்லிக்குளத்தைப்பார்வையிடும் பிற பள்ளி மாணவ-மாணவிகள்.


சந்திரனைக்காணாமல் அல்லி முகம் மலருமா? என்ற கண்ணதாசன் பாட்டிற்கு அழகு சேர்க்கும் வெள்ளை நிற ஆம்பல் என்கிற அல்லி !...

குவளை என அழைக்கப்படும் நீல அல்லி.

பூக்களை ரசிக்காத மனிதர்கள் உண்டா? அப்படி ஒரு மனிதன் இன்னும் பிறக்கவில்லையென்றே சொல்லலாம்.. பூக்களைப்பறித்து அதுவும் அடுத்தவர் வீட்டு பூவைப்பறித்து சாமிக்கு வைப்பதில் ஒரு குஷி இருக்கிறதே சொல்லி மாளாது! சாமி பூ கேட்டதாகத்தெரியவில்லை!ஆசாமிகளாகிய நாம் தான் சாமிகளுக்கு பூ கோர்த்து மாலையாக அணிவித்து மகிழ்கிறோம்...பூக்களின் அழகைக்கண்டு சொக்கிவிடுகிறோம்! பூக்களின் மணமும்,அதன் கல்ர்,மென்மை போன்றவை நமது கவலைகளை மறக்கச்செய்து,மன அழுத்தங்களை குறைத்து விடுகிறது.அதிலும் தாமரை,அல்லி போன்ற நீர்வாழ்தாவரங்களின் பூக்களின் அழகைத்தான் நீங்களே பார்க்கிறீர்களே!


நமது பள்ளிப்பாடங்களில் நீர்வாழ் தாவரங்கள்,உயிரினங்கள் பற்றி புத்தகத்தில் உள்ளவற்றைப்பார்த்து செயற்கையாக சொல்லித்தருகிறார்கள். அதற்குப்பதிலாக ஒரு அல்லிக்குளத்தை உருவாக்கி,அதில் மீன்களை விட்டு வளர்த்தால்....படிப்பதை விட ,நேரில்பார்ப்பது குழந்தைகளின் மனதில் ஆழப்பதியுமல்லவா? அதன் விளைவுதான் இந்த அல்லிக்குளங்கள்!
அல்லிக்குளத்தை படத்தில் உள்ளது போலவோ அல்லது வட்டமாகவோ 3அடி ஆழம் கொண்ட பள்ளம் தோண்டி,செங்கல் கொண்டு கட்டி பூசி விடுங்கள்..தரையிலும் பெரிய ஜல்லி கொண்டு கான்கிரீட் போட்டு பூசி விடுங்கள்.. குளம் இப்போது ரெடி! குளத்தினுள் ஒரு அடி ஆழத்திற்கு களிமண்,கொஞ்சம் மணல்,செம்மண் கலந்து போடவேண்டும்..எருக்கந்தலையை கொஞ்சம் மண்ணில் போட்டு அமுத்தி விட்டு,2 அடி உயரத்திற்கு தண்ணீர் ஊற்றி அல்லி நாற்றை தண்ணீரில் முழுவதும்(அல்லி செடி நர்சரிகளில் கிடைக்கும் விலை ரூ.150-ல் இருந்து இருக்கிறது)மூழ்கும்படி நட்டு வையுங்கள்..அல்லிக்கொடி மேலே வர வர தண்ணீர்மட்டத்தை உயர்த்தவேண்டும்.


குளத்தில் தண்ணீர் தெளிந்தவுடன் சாதாரண மீன்கள், வண்ண மீன்களை வாங்கிவிடுங்கள். கொசு வருமே என்ற பயம் வேண்டாம..மீன்கள் கொசு முட்டைகளை சாப்பிட்டு விடும்.. சிறிய குழந்தைகள் இருந்தால் பாதுகாப்பு
செய்யவேண்டும்..


ஒரு மாதததில் பூக்கத்தொடங்கும்.. பல (6,7) கலர்களில் அல்லி நாற்றுகள் கிடைக்கிறது..இதில் பகலில் /இரவில் பூக்கும் அல்லிகள் இரண்டையும் வைத்துவிட்டால் அல்லிக்குளத்தில் எப்போதும் பூ இரு ந்துகொண்டே இருக்கும்.
1
2
நமது வீடுகளில் அல்லி வளர்ப்பது நமது மனதுக்கு அமைதியைக்கொடுக்கும். இரண்டு அடி விட்டமுள்ள சிமெண்ட் தொட்டி, சின்டெக்ஸ் தொட்டிகளில் கூட வளர்க்கலாம். என்ன பூ கொஞ்சம் சிறியதாக இருக்கும்..


3

நெய்தல் மலர்(அல்லி) பூக்கத்தொடங்கும் கண்கொள்ளாக்காட்சியைப்பாருங்கள்.
4

5

6

7

8

9

10

குளத்தை நாடி பறவைகளும்,தவளை போன்றவைகளும் வரும்..தவளையை வைத்து கரு ,முட்டை,தலைப்பிரட்டை போன்றவைகளைச்சொல்லிக்கொடுத்து குழந்தைகளைக்கு குதூகலமூட்டலாம்....

முதல் பதிவு: மொட்டு மலராகும்!மலர்ந்த பூ மொட்டாகுமா ?

4 comments:

 1. அல்லிக்குளம் மிக அருமையான முயற்சி. பிற பள்ளி மாணவியருக்கும் பயன்படுவது அறிந்து மிக்க சந்தோஷம்.

  மலரோடு மலராக..
  பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி.

  வெள்ளை ஆம்பலும் குவளை அல்லியும் வெகு அழகு.

  பூ விரிந்த பின் உள்ளே ஒரு மொட்டு. சிந்தனையும் தலைப்பும் நன்று. இதே போல விரியும் மொட்டினை காட்சிப்படுத்திய என் பதிவு: மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல..

  ReplyDelete
 2. 2இங்கும் காணலாம் சில மலர் படங்கள்:)! நன்றி!

  ReplyDelete
 3. நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete
 4. மிக அற்புதமான முயற்சி உங்களுடையது. கிருஷ்ணகிரியில் என் நண்பர் திரு.சனத் குமார் அவர்கள் நீங்கள் சொல்லும் விஷயங்கள் குறித்து நிறைய சிந்திக்கிறார். செயல்படுகிறார். நல்ல பள்ளி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்.

  உங்கள் வலைப்பூவை என்னுடைய இணையதளத்தின் சகபயணிகள் பகுதியில் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.

  http://www.kpenneswaran.com

  பென்னேஸ்வரன்

  ReplyDelete

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...