மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!
அல்லிப்பூ ( Nymphaea nouchali Burmf.;Nymphaeceae ) சந்திரனைக்காணாமல் அல்லி முகம் மலருமா? என்ற பாடலையும்,இரவினில் மலரும் அல்லிப்பூ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலையும் கேட்கும் போதெல்லாம் அல்லிப்பூவை பள்ளியில் வைத்து வளர்க்கவேண்டும்! இரவினில் மலர்வதைக்காணவேண்டும் என்ற எண்ணம் வரும்! ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் பள்ளியில் சிறிய குளம் அமைத்து அல்லி வைத்தோம். இரண்டு மாதம் கழித்து காலை 7 மணியளவில் மொட்டு நீருக்குள் இருந்து வெளியே தலையை நீட்டியிரு ந்தது! படம் 1-ல் இருந்து 10 வரை படத்தைப்பாருங்கள்...... படம் .1. 25-7-2010 காலை 7 மணி ப டம் 2.காலை 8.30மணி. படம் 3. காலை 09மணி. படம் 4. காலை 09.40 காலை 10 மணிக்கு பூ முழுவதுமாக மலர்ந்து விட்டது. பூவின் குறுக்கு வெட்டு நீளம் 17 செ.மீ.ஆகும். இது வரை நான் பார்த்ததெல்லாம் காலையில் மலரும் பூக்கள் மாலையில் விழுந்து விடுவதையும் பார்த்துப்பழக்கப்பட்ட எனக்கு அல்லிப்பூ அதிசியமாகப்பட்டது! ஏன் தெரியுமா? மாலையில் 7 மணியளவில் பார்த்தபோது பூ மூடத...