Posts

Showing posts from April 8, 2020

பூமியன் புதல்வி சீதாதேவி..

Image
தசரத மைந்தனால் சீதாபிராட்டிக்கு நேர்ந்த துன்பம்!      திருப்பூர் புத்தக திருவிழாவில் நான் வாங்கிய , * வால்மீகி இராமாயணம் * ( தமிழில் சிவன் . கற்பகம் புத்தகாலயம் . சென்னை .) படித்து முடித்துவிட்டேன் . பின் என் துணைவியார் தற்போது படித்துக்கொண்டுள்ளார் . நேற்று ஒரு கேள்வி கேட்டார் . என்னங்க , ".. சீதையை மீட்க இராமன் நேரில் செல்லாமல் , சுக்ரீவனையும் , நீலனையும் அனுப்பி வைக்கிறார் . சீதை ஒரு வருடமாக அசோக வனத்தில் இராவணன் என்ற அசுரனின் கைதியாக இருக்கிறார் . சீதையை மீட்க இராமன் தானே சென்றிருக்க வேண்டும் . அப்போ தன் ஆருயிர் மனைவியான சீதை மேலே இராமனுக்கு அன்பு இல்லையா ..?" எனக்கேட்டார் . அப்போதுதான் என் மண்டைக்குள்ளும் பல கேள்விகள் பிறந்தன ..! காலம் காலமாக கோடிக்கணக்கான இந்துக்களாகிய நமக்கு , கணவன் மனைவியென்றால் அது இராமனும் , சீதையும் போல வாழ வேண்டும் என்பது தான் . அதாவது ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற ஒரு தாரக்கொள்கையை வலியுறுத்தும் விதமாக கூறுகிறார்கள் . ஒரு பெண்ணைப்பார்த்து சீதை போல வாழவேண்டும் எ