Wednesday, November 26, 2014

22 nd NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS-2014.


             
திருப்பூர் மாவட்டத்தில்    22 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2014


                                                                            
மாநாட்டு சின்னம்.

அழைப்பிதழ்.

ஏஞ்சல் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் குழந்தை விஞ்ஞானிகள்.

மாநாடு  நிறைவுவிழா..

திருமதி.வனிதா செயல் அலுவலர்.

மாவட்ட தலைவர் ஆ.ஈசுவரன்.

 மா நாட்டு துவக்கவுரை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சுப்பிரமணியம்.                          மத்தியரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் சார்பாக கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும், நாடு முழுவதும் உள்ள உள்ளூர் வளங்களைக்கண்டறிதல், பிரச்சனைகளைக்கண்டறிந்து தீர்வு காண்பது போன்றவை இதன் முக்கிய அம்சங்களாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பொதுத்தலைப்பின் கீழ் 3 மாத காலம் மாணவர்கள் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். மாவட்டம், மா நிலம் என தேர்வாகி பின் அகில இந்திய அளவில் டிசம்பர் 27 முதல் 31 வரை ந்டைபெறும் இம்மா நாட்டில் நாடு முழுவதும் இருந்து மா நிலங்களில் தேர்வான மாணவர்கள் கலந்து கொளவார்கள். இந்த ஆண்டு 22 வது தேசிய மா நாடு டிசம்பர் 27 முதல் 31 வரை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ”கால நிலை மாற்றத்தைப்புரிந்து கொள்வோம் ”என்பதாகும்.

                  தமிழக அளவில் குழந்தைகள் அறிவியல் மா நாடு வருகிற டிசம்பர் 7,8 & 9 தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மெளண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த மா நில மா நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்ள 6 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வாகியுள்ளன. 21-11-2014 சனிக்கிழமையன்று ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் திருப்பூர் மாவட்ட மா நாடு  நடைபெற்றது. இந்த மா நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 18 பள்ளிகளில் இருந்து 47 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 8 பேர் கொண்ட நடுவர் குழு மா நில மா நாட்டில் கலந்து கொள்ளும் தகுதியுடைய ஆய்வுகளை தேர்ந்தெடுத்தனர். அவை பின்வருமாறு:

1. தமிழ் ஜூனியர்”: ஜேசீஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, காங்கயம். இவர்களின் ஆய்வானது காங்கயம் பகுதிகளில் தேங்காய் உலரவைக்கும் தொழிற்சாலைகளில் தேங்காய்கள் பூசனம் பிடிக்காமல் இருக்க கந்தகம் பயன்படுத்துகிறார்கள். இந்த கந்தகமானது தேங்காய் பருப்பிலும், காற்றையும் கெடுக்கிறது. கந்தகம் எரிவதால் வெளியேறும் புகை காற்றில் கலந்து விலங்குகளுக்கும், மனிதர்களுக்கு சுவாசப்பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது” எனற ஆய்வு தேர்வாகியுள்ளது.
2. ஆங்கிலம் ஜூனியர்: பெம் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்லென்ஸ் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகள், காற்றின் வேகம், மேகங்களின் வகைகள், மழைப்பொழிவு, வெப்பம் இவற்றிற்குள்ள தொடர்பு என்ன என்ற ஆய்வினை செய்துள்ளனர். மூன்று மாதகால புள்ளிவிபர அடிப்படையில். மழை வரும்போது இருந்த வெப்பம், மேகத்தின் பெயர், காற்றின் வேகம், ஈரப்பதம் போன்றவற்றின் மூலம் மழை  தரும் மேகங்கள் என்னவென்று கண்டுபிடித்துள்ளனர்.

3. தமிழ் சீனியர் : கே.எஸ்.சி. அரசு மேல் நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர்கள், கால நிலை மாறுவதால் , பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் நோயகள் என்ன வென்று கண்டுபிடித்துள்ளனர்.

4. ஆங்கிலம் சீனியரில்  மூன்று ஆய்வுகள் தேர்வாகியுள்ளன.
         1. செஞ்சுரி பெளண்டேசன் மாணவிகள், நமது முன்னோர்கள் பஞ்சாங்கத்தின் மூலம் மழைவரும் காலங்களைக்கூரியுள்ளதையும், 60 தமிழ் வருடங்களில் கூறியுள்ளபடி கடந்த 60 ஆண்டுகளில் பெய்துள்ள மழை என இரண்டையும் ஒப்பிட்டு சரிபார்த்துள்ளனர். முன்னோர்கள் கால நிலை மாற்றத்தை எவ்வாறு சரியாக கணித்துள்ளனர் என்ற ஆய்வு தேர்வாகியுள்ளது.

          2. தி பிரண்ட் லைன் அகதாமி 11 ம் வகுப்பு மாணவர்கள், பெருந்தொழுவு கிராமத்தில் சிறு தானியங்களின் விளைச்சல் குறைந்து போயுள்ளதையும், அதை மீட்டு எடுப்பதற்கான செயல் திட்டத்தை இந்த கிராமத்தில் அமுல்படுத்தியுள்ளனர்.

         3.  டீ பப்ளிக்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவிகள், திருப்பூரில் உள்ள மருத்துவர்களிடம் சென்று கால நிலை மாற்றத்தால் மக்களுக்கு என்ன வியாதிகள் கடந்த 3 மாத காலத்தில் வந்துள்ளன என்ற விபரத்தை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வும் மா நில மா நாட்டிற்கு தேர்வாகியுள்ளது.

      நன்றியுடன்

ஆ.ஈசுவரன் தலைவர்.
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.

Friday, October 24, 2014

கல்வித்தாஜ்மகாலுக்கு வெற்றி...!!...ஜெய்வாபாய் ஈசுவரன்


திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 7000-ம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியானது மழை நீர் சேகரிப்பிற்காக 2002-ம் ஆண்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கையால் பரிசையும், பாராட்டையும் பெற்ற பள்ளியாகும். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்து வந்ததில், இந்தியளவில் 10 முறை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு விருதையும், மூன்று முறை இந்திய விஞ்ஞானிகளின் மாநாட்டில் பங்கேற்றும் சாதனை படைத்துள்ளது. 1994 முதல் இப்பள்ளியின் பெ.ஆ.கழகத்தால் மாணவிகளுக்கு கணிப்பொறிகல்வி அளித்து வந்ததன் காரணமாக 2003-ம் ஆண்டில் மத்தியரசின் சிறந்த கணணிக்கல்விக்கான பரிசையும், விருதையும் மேன்மைமிகு பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் பெற்றுள்ள பள்ளியாகும். 2005-ம் ஆண்டில் தமிழகரசின் சிறந்த சுற்றுச்சூழல் செயல் வீரர்களுக்கான பரிசையும் பெற்ற பள்ளியாகவும் திகழ்கிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியைகள் திருமதி ஆ.ஜரீன்பானுபேகம் 2002-ம் ஆண்டிலும், திருமதி அ.விஜயாஆனந்தம் 2007-ம் ஆண்டிலும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்று சாதனை படைத்த பள்ளியாகவும் திகழ்கிறது. இந்தியளவில் அரசு/நகராட்சிப்பள்ளிகளுக்கு சுற்றுச்சூழலிலும், பெண்கல்விக்கும் முன் உதாரணமாக இப்பள்ளி திகழ்கிறது. இப்பள்ளியின் வரலாறே.”. யாது ஊரே யாவரும் கேளீர் ”என்பதற்கு ஏற்ப, குஜராத்தில் இருந்து திருப்பூருக்கு வியாபாரம் நிமித்தமாக வந்த திரு தேவ்ஜி ஆஷர் என்பவர் இளம் வயதில் (33 வயது) தனது மனைவி திருமதி ஜெய்வாபாயின் மரணத்தருவாயில்(1937-ம் ஆண்டு) திருப்பூரில் பெண்களுக்கென தனியாக உயர் நிலைப்பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு 1942-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் இப்பள்ளியாகும். 1998-ம் ஆண்டு இந்தப்பள்ளிக்கு வருகை புரிந்த சாகித்திய அகதாமி பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் இப்பள்ளியின் வரலாற்றினை அறிந்து இதனை கல்வித்தாஜ்மகால் என்று அழைத்தார். 1942-ல் வாலிபாளையம் துவக்கப்பள்ளியில் தொடங்கப்பட்ட இப்பள்ளிக்கு திரு.தேவ்ஜி ஆஷரின் விடா முயற்சியின் காரணமாக அன்றைய சென்னை மாகாண அரசு 1948-ம் ஆண்டு அரசு ஆணை எண் 1425-ன் படி ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்காக 7 ஏக்கர் 7229 சதுர அடியை கொடுத்தது. இந்த இடத்தில் திரு தேவ்ஜி ஆஷரும், அவருடைய மகன்களான கிருஷ்ணகுமார் & பிரதாப் இணைந்து பள்ளிக்கட்டடம், விளையாட்டு மைதானம், தோட்டம் உட்பட அமைத்து திருப்பூர் நகராட்சிக்கு தானமாக வழங்கினார்கள். திருப்பூரில் 1955-ம் ஆண்டு ரோட்டரி கிளப் துவங்கப்படுகிறது. இதைத் துவங்கியவர்களில் ஜெய்வாபாய் பள்ளியை உருவாக்கிய தேவ்ஜி ஆஷரும் ஒருவராவார். ரோட்டரி கிளப்பின் கூட்டமே அவருடைய வீட்டில் தான் நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் ஆஷரின் ஆட்சேபனையை மதிக்காமல் 1960-ல் இருந்த ரோட்டரி கிளப் நிர்வாகத்தினர் மாண்டிசோரி பள்ளியும், மாதர் பூங்காவும் அமைத்து நகராட்சிக்கு நன்கொடையாக அளிக்கிறோம் என்ற உறுதியின் பேரில் திருப்பூர் நகராட்சியும் 1960 ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் ஆஷர் ரோட்டரி கிளப்பை விட்டு விலகினார். ரோட்டரி கிளப்பினர் 1963-ல் ஜெய்வாபாய் பள்ளி வளாகத்திற்குள் மாண்டிசோரி பள்ளி அமைத்தனர். ஆனால் மாதர் பூங்கா அமைக்கவில்லை. அதே சமயம் தாங்கள் கூறிய படி நகராட்சிக்கு தானமாகவும் அளிக்கவில்லை. தாங்களே வைத்துக்கொண்டனர். படிப்படியாக நர்சரி & பிரைமரி பள்ளி ஆரம்பித்து பல கட்டங்கள் கட்டி ஒரு ஏக்கர் இடம் வரை ஆக்கிரமித்துக்கொண்டனர். சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக பணபலம் படைத்தவர்களாக ரோட்டரி கிளப்பினர் இருந்த காரணத்தாலும், திருப்பூரில் இருந்த அனைத்து நகராட்சிப்பள்ளிகளும், நகராட்சியின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் அதிகாரிகளின் எதிர்ப்புகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1978-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் இருந்த நகராட்சிப்பள்ளிகளின் ( கட்டட பாராமரிப்பு தவிர) நிர்வாகம் முழுவதும் அரசுக்கல்வித்துறைக்கு வந்தது. ஜெய்வாபாய் உயர் நிலைப்பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதே சமயம் ஜெய்வாபாய் நகராட்சிபள்ளியின் நிர்வாகமும், கல்வித்துறையும் இதைப்பற்றிய சமூக அக்கறையின்றி இருந்துள்ளனர். நமக்கேன் வம்பு.. மாதச்சம்பளம் வந்தால் போதும் என்ற மன நிலையில் இருந்துள்ளனர். 1987-ம் ஆண்டில் ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவரும், ரோட்டரி பள்ளியின் தாளாளரும் ஒருவரே ஆகும். இவர் செய்த துரோகத்தின் காரணமாகவும், இவருக்கு நகர்மன்றத்தலைவரிடமிருந்த செல்வாக்கின் காரணமாக அன்றைய ஆணையாளரின் எதிர்ப்பையும் மீறி, நகர் மன்றத்தில் தீர்மானம் வருகிறது. திருப்பூர் நகர் மன்றத்தில் ஜெய்வாபாய் பள்ளிக்குச்சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தை ரோட்டரி பள்ளிக்கு வழங்குவதற்காக வந்த தீர்மானம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்களின்(குறிப்பாக திரு.என்.கோபாலகிருஷ்ணன், சி.கோவிந்தசாமி) எதிர்ப்பினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின் அவர்களின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையறிந்து பதறிப்போய் நகர்மன்றத்திற்கு சென்ற தலைமையாசிரியை செல்வி சாவித்திரியும், பிற ஆசிரியைகளும் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவரால் மிரட்டப்பட்டார்கள். 1989-ம் ஆண்டில் ஜெய்வாபாய் பள்ளியில் பொறுப்பேற்றுக்கொண்ட, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தினைச்சார்ந்த பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரின் பார்வைக்கு இந்த நில ஆக்கிரமிப்பு கவனத்திற்கு வந்தது. அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.சி.கே.குப்புசாமி அவர்களும் இதைச்சுட்டிக்காட்டினார். அன்றைய முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சரசுவதி பழனியப்பன் அவர்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். 1991 ம் ஆண்டில் ரோட்டரி கிளப்பினர் குறுக்கே கம்பிவேலி அமைத்து தெற்குப்பகுதியில் இருந்து மாணவிகளும் ஆசிரியைகளும் பள்ளியின் தென்புறக்கேட்டின் வழியாக பள்ளிக்குள் வருவதை தடுத்தனர். பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பாக மாண்புமிகு இன்றைய முதல்வர் தான் அன்றும் முதல்வராக இருந்தார். அதனால் அவருக்கு தந்தியடிக்கப்பட்டது. அடுத்த நாளே கம்பி வேலியை இரவோடு இரவாக அகற்றினார்கள். ஜெய்வாபாய் பள்ளிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்தனர். ஜெய்வாபாய் பள்ளியின் இடத்தை மீட்க வேண்டும் என்று 1990-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை ஏழு ஆண்டுகள் அரசிடமும், நகராட்சியிடமும் கோரிக்கை வைத்து கேட்டுப்பார்த்தனர். இந்தக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, மாறாக திருப்பூர் நகர் மன்றத்தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு ஏக்கர் நிலத்தை ரோட்டரி பள்ளிக்கு 99 வருட குத்தகைக்கு விடுவதற்கு வருவாய்த்துறை ஏற்பாடு செய்தது. எனவே வேறு வழியில்லாமல் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து செயல் பட்டு வந்த தனியார் ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளியின் மீது ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளை 1996-ல் சென்னை உயர் நீதி மன்றத்தின் மூலம் பள்ளி இடம் குத்தகைக்கு விடுவதற்கு தடையானை பெற்றனர். இந்தத்தடையானையை பெற்றுத்தந்தவர் அன்று வழக்கறிஞராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி திரு.கே.சந்துரு அவர்களாகும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே கல்வித்துறையின் அடிப்படை விதியான 10(1) ஏபி ன் விதிகளுக்கு மாறாக (அதாவது பள்ளியின் பெயரில் சொந்தமாக நிலம் இருக்கவேண்டும் அல்லது பள்ளியின் பெயரில் 30 வருட குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டு பத்திர பதிவுத்துறையில் பதிவு செய்தால் மட்டுமே பள்ளி தொடங்க முடியும்) உண்மைக்கு மாறான தகவல்களை கல்வித்துறைக்குத்தந்து, நகர் மன்றத்தீர்மானத்தின் அடிப்படையில் ஜெய்வாபாய் பள்ளி பெ.ஆ.கழகத்தினரின் ஆட்சேபனையை புறந்தள்ளிவிட்டு, மெட்ரிகுலேசன் பள்ளியாக மாற்றினார்கள். அதே சமயம் கனியாம்பூண்டியருகே பள்ளிக்கட்டம் கட்டுவதற்காக வாங்கிய சுமார் 8 ஏக்கர் இடத்தில் 2003-ல் அன்றைய ரோட்டரி நிர்வாகத்தினர் முதியோர் இல்லம் கட்டி திறப்புவிழா செய்தார்கள். ஆனால் அதற்கு அடுத்து வந்த ரோட்டரி நிர்வாகத்தினர்கள் அந்த இடம் முழுவதையும் விற்று விட்டு, ராயபுரத்தில் சிவானந்த கலர் கம்பெனி அருகில் பள்ளி கட்டுவதற்காக இடம் வாங்கிப்போட்டார்கள். 2005-ம் ஆண்டு பதவிக்கு வந்த நிர்வாகத்தினர்கள், 26-3-2005ம் தேதியிட்ட தினமலரில், தாங்கள் ராயபுரத்தில் வாங்கியுள்ள இடத்தில் திருப்பூர் மக்களின் கல்விக்கனவை நினைவாக்கும் விதமாக பெரிய அளவில் ரூ ஒரு கோடி செலவில் மேல் நிலைப்பள்ளியாக வளர்ச்சி காணப்போகிறது என்று தெரிவித்துள்ளனர். ஒன்பது ஆண்டுகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரனையின் முடிவில் W.P. எண்.19362/96 தேதி 24-6-2005-ன் படி ரோட்டரி கிளப்பினர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளிக்குள் உள்ள தங்கள் பள்ளியை 31-5-2006 க்குள் காலி செய்து வேறு இடத்திற்குச்செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஒரு வருடம் அவகாசம் அளித்து தீர்ப்பளித்தது. மேற்கண்ட தீர்ப்பை ஏற்காத திருப்பூர் ரோட்டரி கிளப்பினர் 2006-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில்(பென்ச்) ஜெய்வாபாய் பள்ளி பெ.ஆ.கழக அறக்கட்டளை, தமிழகரசின் வருவாய் செயலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவை, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர், ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் என ஐந்து பேர் மீதும் வழக்குப்போட்டு, மேல் முறையீடு செய்தனர். இவர்களின் மேல் முறையீட்டு மனுவான W.A. எண். 2211/2005 தேதி 28-2-2008 அன்று மீண்டும் சென்னை உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ரோட்டரி கிளப்பினர் 2008-ல் மறு சீராய்வு மனு வழக்குப் போட்டனர். இந்த வழக்கில் மெட்ரிகுலேசன் பள்ளியின் இயக்குனர் மீதும் வழக்குப்போட்டனர். அப்போது “ இந்த இறுதித்தீர்ப்பும் தங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், தாங்களே தங்களது ரோட்டரி பள்ளி இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி விடுவதாக ” மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனருக்கும், உயர் நீதி மன்றத்திலும் எழுத்து பூர்வமாக தெரிவித்தனர்.. சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கான R.A.(writ)எண்.61/2008 தேதி 22-10-2010. ன் படி இந்த மறு சீராய்வு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தாங்கள் ஏற்கனவே 2008-ல் கடிதம் மூலம் தெரிவித்தபடி திருப்பூர் ரோட்டரி கிளப்பினர் ஜெய்வாபாய் பள்ளிக்குள் இருந்த தங்கள் பள்ளி இடத்தை காலி செய்யவில்லை. இதற்கு மாறாக ரோட்டரி கிளப்பினர் சென்னை உயர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பினை எதிர்த்து சிறப்பு பெட்டிசன் மூலம் SLP 4053/2011 படி சுப்ரீம் கோர்ட்டில்,1) ஜெய்வாபாய் பள்ளி பெ.ஆ.கழக அறக்கட்டளை (2) வருவாய் செயலர், தமிழகரசு, (3) மாவட்ட ஆட்சித்தலைவர், (4) மாநகராட்சி ஆணையாளர் 5) ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் என ஐந்து பேர் மீதும் வழக்கு தொடுத்து சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழகரசும் இந்த தடையாணையை நீக்குவதற்கு 24-1-2014 ல் அபிடாவிட் தாக்கல் செய்தது. இந்த அபிடாவிட்டில், 1960 ம் ஆண்டு ரோட்டரி கிளப்பினர் நகராட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நடக்கவில்லையென்றும், ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் பள்ளியானது இந்தியாவிலேயே மிகச்சிறந்த நகராட்சிப்பள்ளியென்றும், திருப்பூர் மாநகராட்சிக்கு பெருமிதம் அளிக்கும் பள்ளியென்றும் கூறி, ஜெய்வாபாய் பள்ளிக்குள் இருந்து வெளியேற மறுக்கும் ரோட்டரி கிளப்பினரின் அப்பீல் மனுவை ரத்து செய்யுமாறு கோரியிருந்தனர். மேற்கண்ட வழக்கின் விசாரனை கடந்த மாதம் 30-6-2014 அன்றும், 07-07-2014 அன்றும் விசாரனைக்கு வந்தது. ரோட்டரி கிளப்பினரால் வாய்தா வாங்கப்பட்டது. இறுதி விசாரனை 30-7-2014 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. 30-7-14 அன்று உச்ச நீதி மன்றம் , 1948-ம் வருடம் அரசு ஆணை எண் 1425-ன் படி 7 ஏக்கர் 7229 சதுர அடி இடம் முழுவதும் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்குச்சொந்தமானது எனக்கூறி,சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு செல்லும் எனக்கூறி ரோட்டரி கிளப்பினரின் அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்தது. இந்தத்தீர்ப்பிற்கு மாற்றுத்தீர்ப்பு கோரி அதாவது இன்னும் இரண்டு வருடம் பள்ளி நடத்த அனுமதி கேட்டு, ரோட்டரி கிளப்பினர் மீண்டும் ஒரு மனுவை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு கடந்த 08-8-14 அன்று பதிவு செய்துள்ளனர். பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளை சார்பாக மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல பிரச்சனைக்கு இன்னும் முடிவு வரவில்லை. ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளிக்குள் ஐம்பது ஆண்டுகால தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.. சென்னை உயர் நீதி மன்றத்தீர்ப்பின் அடிப்படையில் ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளிக்கு 31-5-2006 க்குப்பின் அங்கீகாரம் இல்லையென்று மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரின் ந.க.எண் 2607/இ 3/2008 நாள் 29-5-2008 கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதி மன்றம் 2005-ம் ஆண்டே தனது தீர்ப்பில் ரோட்டரி பள்ளியினர் தங்கள் பள்ளியை 31-5-2006 க்குள் வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களும் ராயபுரத்தில் ரோட்டரி கிளப்பிற்கு சொந்தமான இடத்தில் மேல் நிலைப்பள்ளியை கட்டப்போகிறோம் என்று உயர் நீதி மன்ற தீர்ப்பு வரும் முன்பே 26-3-2005 அன்று செய்தித்தாளில் அறிக்கை வெளியிட்டவர்கள் 24-6-2005 அன்று தீர்ப்பு வந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கிற்காக செலவழித்த லட்சக்கணக்கான ரூபாயை வைத்து தங்கள் இடத்தில் பள்ளியை கட்டியிருக்கலாம்!. ஏன் கட்டவில்லை..? இவர்களுக்கு கல்வியின் மேல் அக்கறையில்லை என்பதையும், ரூபாய் நாற்பது கோடி மதிப்புள்ள ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் இடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு நோக்கம் தவிர வேறில்லை என்றாகிறது. மேலும் தங்கள் பள்ளிக்கு அங்கீகாரமோ, இடமோ இல்லையென்பதை பெற்றோர்களிடம் மறைத்து குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் சமச்சீர் பாடத்திட்டமே இருப்பதால் மாணவிகளை ஜெய்வாபாய் பள்ளியிலும், மாணவர்களை நஞ்சப்பா நகராட்சிப்பள்ளியிலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ளவர்களை காதர்பேட்டை, தேவாங்கபுரம், ராயபுரம் நகராட்சிப்பள்ளிகளில் ஆங்கில வழி இருப்பதால் அங்கு சேர்க்க முடியும். எனவே தமிழகரசு ரோட்டரி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமுல் படுத்தினால் மட்டுமே 7000-ம் மாணவிகள் படிக்கும் ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவிகளின் பாதுகாப்பிற்கும் பேருதவியாக இருக்கும் என்று திருப்பூர் மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள் வைக்கிறது.. . ,

Sunday, September 21, 2014

முதிர் கன்னிகளை உருவாக்கும் பஞ்சாங்க ஜோதிடர்கள்.... இரண்டு நாள் முன்பு எனது உறவினருடன் அவருடைய மகனுக்காக அவரின் குடும்ப ஜோதிடரிடம் திருமணப்பொருத்தம் பார்க்க சென்றிருந்தேன்..பேச்சு வாக்கில்.. உங்களைப்போன்ற ஜோதிடர்களால்தான்.. தமிழ் நாட்டில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் ஆவதே காலதாமதம் ஆகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செவ்வாய் தோசம் என்ற ஒன்றைக்கூறுகிறீர்கள்.. அடுத்த மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் ராக்கெட் போய் செவ்வாயில் போய் இறங்கப்போகிறது..இன்னும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றேன்..அதற்கு அவர் சிரித்துக்கொண்டே... சார் உண்மையில் செவ்வாய் தோசம் என்பதே..சாமியர்களுக்கானது.. செவ்வாய் தோசம் உள்ளவரை ஒரு மடத்தின் தலைவராக நியமிக்கக்கூடாதாம்.. ஏன் என்றால் செவ்வாய் காமாந்திரகிரகமாம்.. இந்த கிரகம் உள்ளவரை ஆன்மீககுருவாக ஆக்கினால்( நித்யானந்த போல) அவர் சன்னியாசியாக இருக்கமாட்டார்..என்பதாலேயே.. அப்படிச்சொல்லப்பட்டது.. இது எப்படியோ பெண்களுக்கு என்று மாறிவிட்டது என்றார்.. நாங்கள் கொண்டுசென்றிருந்த மூன்று பொருத்தங்களையும் பார்த்தார். இது ஏற்கனவே நான் மனோஜ் ஜெராக்சில் அஸ்ட்ரோ விசன் என்ற கணிப்பொறி ஜாதகம் மூலம் பொருத்தம் பார்த்த பிரிண்ட் அவுட். இதில் 3 பெண்களின் ஜாதகமும் 14 க்கு 13 பொருத்தங்கள் என வந்திருந்தது. உத்தமம். திருமணம் செய்யலாம் என்றும் இருந்தது..ஆனால் அவர் இந்த மூன்றையும் பார்த்தார். தன் மேஜையின் மீதிருந்த பஞ்சாங்கத்தில் தேடினார்..கடைசியில்...ஆணின் கிருத்திகை நட்சத்திரத்திற்கு ஆயில்யம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரம் சேராது என்று எதோதே கட்டங்களைக்கூறி மூன்று ஜாதகத்தையும் தள்ளுபடி செய்துவிட்டார். பின் கிருத்திகை நட்சரத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள் என்று ஒரு 10 நட்சத்திரங்களைக்கொடுத்தார். அதில் ஆயில்யம் ,விசாகம் மற்றும் மூலம் இல்லை. நேற்று அவர் வைத்திருந்த ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம் என்ற புத்தகத்தை ஏற்கனவே சென்ற மாதம் ஒருமுறை போனபோது பணம் கொடுத்து வாங்கிவந்திருந்தேன்.. அதில் தேடினேன்.. 92-ம் பக்கத்தில் ஜாதக பொருத்தம் ரெடி அட்டவணையில் ஆணின் கிருத்திகை பாதம் 1க்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்களில் ஆயில்யம் உத்தமம் என்றும், மூலமும், விசாகமும் மத்திமம் என்று உள்ளது. அதாவது இந்த மூன்று நட்சத்திரங்களும் பொருந்தும்.. சரி இணையத்தில் போய் ஜாதகப்பொருத்தம் என்று போட்டால் பல ஜோதிடர்கள் தங்கள் இணையத்தில் பதிவிட்டதில்... கிருத்திகை பாதம் 1 க்கு சித்திரை பாதம் 3,4 மற்றும் அவிட்டம் 1,2 என்று இரண்டு மட்டுமே சேரும் என்று போட்டுள்ளனர். இன்னும் சிலவற்றில் பத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பொருந்தும் என்று போட்டுள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக போட்டு... பொதுமக்களை ஏமாற்றுகின்றதை அறியமுடிகிறது. என்னிடம் உள்ள பஞ்சாங்கத்தில்.. இருந்ததை படித்தபோது அதர்ச்சியாக இருந்தது.. இந்த பிராமனீயம் பெண்களை இரண்டாம் பட்சமாக ஆணுக்கு கீழ், ஜாதகத்திலும் வைத்து புரட்டு செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. அதாவது மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் ஆண்களுக்கு எந்த நட்சத்திரமும் தோஷமில்லையாம்..ஆனால் பெண்களுக்கு மட்டும் ஆயில்யம் 1ம் பாதம் மாமியாருக்கு ஆகாது, மூலம் 1ம் பாதம் மாமனாருக்கு ஆகாது(ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்று டயலாக்). விசாகம் 4ம் பாதம் மைத்துனருக்கு ஆகாது. கேட்டை 1ம் பாதம் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்றுள்ளது. ஆக பெண்களின் நட்சரத்திற்கு மட்டுமே தோஷம்.. ஆண்களுக்கு இல்லை..ஏன்..? ஜோதிடம் என்பது மதத்தைப்போல ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது..அதனால் தான் பெண்களின் மீது இத்தனை பாரபட்சமாக எழுதி வைத்துள்ளனர். இந்த ஜாதகப்பொருத்தம் என்பது சுயம் வரத்திர்கும், காதல் திருமணத்திற்கும் தேவையில்லையென்றும் இருக்கிறது. இதே புத்தகத்தில்.. ஒரு நல்ல செய்தியையும் கூறியுள்ளனர்.அது என்னவென்றால்.. சந்திரன், குரு அல்லது சுக்கிரனோடு சேர்ந்தாலும், அவர்களால் பார்க்கப்பட்டாலும் பெண்களுக்கும் கூட ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம் பாதிப்புகிடையாது. இது தெரியாமல் பொதுமக்களும், ஜோதிடர்களும் , பெரியோர்களும் இது விசயத்தில் குழப்பம் செய்து பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கவேண்டாம்.. என்று இருக்கிறது..இதை எந்த ஜோதிடர்களும் கடைபிடிப்பதில்லை.. பெற்றோர்களுக்கு எடுத்து கூறுவதில்லை. வருகின்ற ஜாதகத்தையெல்லாம் தட்டிக்கழித்தால் தான் தங்களுக்கு பிழைப்பு என்பதால் தான் இப்படி செய்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இதையறியாமல் பெண்களைப்பெற்றவர்களும், ஆண்களைப்பெற்றவர்களும் ஏமாறிக்கொண்டே இருக்கிறார்கள்..இணைய மேட்ரிமோனியலில் போய் பார்த்தால் சகல ஜாதிகளிலும் திருமணம் ஆகாமல் 25, 26,27 ,28 வயதிற்கு மேற்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள்.. தங்களுக்கு வரும் வரனுக்காக பல் வேறு நிபந்தனைகளுடன் காத்துக்கொண்டுள்ளனர்.. ஜோடிப்பொருத்தம் நன்றாக இருந்தால் நட்சத்திரப்பொருத்தம் இல்லை.. நட்சத்திரப்பொருத்தம் சரியாக இருந்தாலும் ராகு, கேது என்ற பாப கிரகங்கள் இருக்கிறது...எனவே... வேண்டாம்.. சரி.. ராகு/கேது.. இருவருக்குமே இருக்கிறது.. நட்சத்திரப்பொருத்தமும் இருக்கிறது.. ஆனால்.. பெண்ணிற்கு 7ல் செவ்வாய், 8ல் செவ்வாய் என ஜாதகம் ஒதுக்கப்படுகிறது..அப்பாடா ஒரு வழியாக நட்சத்திரம், ராகு, கேது, செவ்வாய் என அனைத்தும் பொருந்திவந்தாலும்....பையனுக்கு வருட வருமானம் நாங்கள் எதிர்பார்த்த பத்துலட்சமோ, ஒரு கோடியோ இல்லை...பையனுக்கு நல்ல வேலை, வீடு, என இருந்தாலும் விவசாய நிலம் இல்லை.. எனவே வேண்டாம்.. சொத்துபத்து இருந்தாலும்.. சம்பந்தி ஊர் தூரம்... நல்லது கெட்டதுக்கு எப்படி உடனே போவது.. எனவே.. அவரவர் ஊருக்கு அருகிலேயே பெண்ணோ, பையனோ இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.. இது மட்டுமா...பெண்ணின் படிப்பு அதிகம்... படியில்லை...பெண்ணின் உயரம் குறைவு, பெண் நிறம் கம்மி, என இப்படி பல்வேறு காரணங்களால் ஆணுக்கும், பெண்ணிற்குமான திருமணங்கள் தடைபட்டுக்கொண்டுள்ளன. சுகி சிவம் அவர்கள் தனது புத்தகம் ஒன்றில் , மூல நட்சத்திரப்பெண்கள் பலர் தங்கள் திருமணம் ஜோதிடத்தால் காலதாமதம் ஆவதைக்கண்டனர். இந்து மதத்தில் இருந்தால் தானே இந்த ஜோதிடம் எல்லாம்.. எனவே மதம் மாறி திருமணம் செய்து கொள்கின்றனர் எனப்பொருள்கொள்ளும்படி கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.. இது மூலத்திற்கு மட்டுமல்ல செவ்வாய் தோசம், ஆயில்யம், என தொடர்கிறது.. காதலையும், காதல் திருமணங்களையும், மத மாற்றத்தையும் எதிர்க்கும் இந்துத்வா வாதிகளும், ஆன்மீக குருக்களும் உண்மையில் ராடவேண்டியது இந்த ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் தான்.. ஜோதிடர்கள் மன்னிப்பார்களாக. ஆ.ஈசுவரன். திருப்பூர். 20-9-14 L•


ஜோதிடர்களால் முதிர் கன்னிகளாகும்... இளம்பெண்கள்... முதிர் கன்னிகளை உருவாக்கும் பஞ்சாங்க ஜோதிடர்கள்.... இரண்டு நாள் முன்பு எனது உறவினருடன் அவருடைய மகனுக்காக அவரின் குடும்ப ஜோதிடரிடம் திருமணப்பொருத்தம் பார்க்க சென்றிருந்தேன்..பேச்சு வாக்கில்.. உங்களைப்போன்ற ஜோதிடர்களால்தான்.. தமிழ் நாட்டில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் ஆவதே காலதாமதம் ஆகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செவ்வாய் தோசம் என்ற ஒன்றைக்கூறுகிறீர்கள்.. அடுத்த மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் ராக்கெட் போய் செவ்வாயில் போய் இறங்கப்போகிறது..இன்னும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றேன்..அதற்கு அவர் சிரித்துக்கொண்டே... சார் உண்மையில் செவ்வாய் தோசம் என்பதே..சாமியர்களுக்கானது.. செவ்வாய் தோசம் உள்ளவரை ஒரு மடத்தின் தலைவராக நியமிக்கக்கூடாதாம்.. ஏன் என்றால் செவ்வாய் காமாந்திரகிரகமாம்.. இந்த கிரகம் உள்ளவரை ஆன்மீககுருவாக ஆக்கினால்( நித்யானந்த போல) அவர் சன்னியாசியாக இருக்கமாட்டார்..என்பதாலேயே.. அப்படிச்சொல்லப்பட்டது.. இது எப்படியோ பெண்களுக்கு என்று மாறிவிட்டது என்றார்.. நாங்கள் கொண்டுசென்றிருந்த மூன்று பொருத்தங்களையும் பார்த்தார். இது ஏற்கனவே நான் மனோஜ் ஜெராக்சில் அஸ்ட்ரோ விசன் என்ற கணிப்பொறி ஜாதகம் மூலம் பொருத்தம் பார்த்த பிரிண்ட் அவுட். இதில் 3 பெண்களின் ஜாதகமும் 14 க்கு 13 பொருத்தங்கள் என வந்திருந்தது. உத்தமம். திருமணம் செய்யலாம் என்றும் இருந்தது..ஆனால் அவர் இந்த மூன்றையும் பார்த்தார். தன் மேஜையின் மீதிருந்த பஞ்சாங்கத்தில் தேடினார்..கடைசியில்...ஆணின் கிருத்திகை நட்சத்திரத்திற்கு ஆயில்யம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரம் சேராது என்று எதோதே கட்டங்களைக்கூறி மூன்று ஜாதகத்தையும் தள்ளுபடி செய்துவிட்டார். பின் கிருத்திகை நட்சரத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்கள் என்று ஒரு 10 நட்சத்திரங்களைக்கொடுத்தார். அதில் ஆயில்யம் ,விசாகம் மற்றும் மூலம் இல்லை. நேற்று அவர் வைத்திருந்த ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம் என்ற புத்தகத்தை ஏற்கனவே சென்ற மாதம் ஒருமுறை போனபோது பணம் கொடுத்து வாங்கிவந்திருந்தேன்.. அதில் தேடினேன்.. 92-ம் பக்கத்தில் ஜாதக பொருத்தம் ரெடி அட்டவணையில் ஆணின் கிருத்திகை பாதம் 1க்கு பொருந்தும் பெண் நட்சத்திரங்களில் ஆயில்யம் உத்தமம் என்றும், மூலமும், விசாகமும் மத்திமம் என்று உள்ளது. அதாவது இந்த மூன்று நட்சத்திரங்களும் பொருந்தும்.. சரி இணையத்தில் போய் ஜாதகப்பொருத்தம் என்று போட்டால் பல ஜோதிடர்கள் தங்கள் இணையத்தில் பதிவிட்டதில்... கிருத்திகை பாதம் 1 க்கு சித்திரை பாதம் 3,4 மற்றும் அவிட்டம் 1,2 என்று இரண்டு மட்டுமே சேரும் என்று போட்டுள்ளனர். இன்னும் சிலவற்றில் பத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பொருந்தும் என்று போட்டுள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக போட்டு... பொதுமக்களை ஏமாற்றுகின்றதை அறியமுடிகிறது. என்னிடம் உள்ள பஞ்சாங்கத்தில்.. இருந்ததை படித்தபோது அதர்ச்சியாக இருந்தது.. இந்த பிராமனீயம் பெண்களை இரண்டாம் பட்சமாக ஆணுக்கு கீழ், ஜாதகத்திலும் வைத்து புரட்டு செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. அதாவது மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் ஆண்களுக்கு எந்த நட்சத்திரமும் தோஷமில்லையாம்..ஆனால் பெண்களுக்கு மட்டும் ஆயில்யம் 1ம் பாதம் மாமியாருக்கு ஆகாது, மூலம் 1ம் பாதம் மாமனாருக்கு ஆகாது(ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்று டயலாக்). விசாகம் 4ம் பாதம் மைத்துனருக்கு ஆகாது. கேட்டை 1ம் பாதம் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்றுள்ளது. ஆக பெண்களின் நட்சரத்திற்கு மட்டுமே தோஷம்.. ஆண்களுக்கு இல்லை..ஏன்..? ஜோதிடம் என்பது மதத்தைப்போல ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது..அதனால் தான் பெண்களின் மீது இத்தனை பாரபட்சமாக எழுதி வைத்துள்ளனர். இந்த ஜாதகப்பொருத்தம் என்பது சுயம் வரத்திர்கும், காதல் திருமணத்திற்கும் தேவையில்லையென்றும் இருக்கிறது. இதே புத்தகத்தில்.. ஒரு நல்ல செய்தியையும் கூறியுள்ளனர்.அது என்னவென்றால்.. சந்திரன், குரு அல்லது சுக்கிரனோடு சேர்ந்தாலும், அவர்களால் பார்க்கப்பட்டாலும் பெண்களுக்கும் கூட ஆயில்யம், மூலம், கேட்டை, விசாகம் பாதிப்புகிடையாது. இது தெரியாமல் பொதுமக்களும், ஜோதிடர்களும் , பெரியோர்களும் இது விசயத்தில் குழப்பம் செய்து பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை பாழாக்கவேண்டாம்.. என்று இருக்கிறது..இதை எந்த ஜோதிடர்களும் கடைபிடிப்பதில்லை.. பெற்றோர்களுக்கு எடுத்து கூறுவதில்லை. வருகின்ற ஜாதகத்தையெல்லாம் தட்டிக்கழித்தால் தான் தங்களுக்கு பிழைப்பு என்பதால் தான் இப்படி செய்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இதையறியாமல் பெண்களைப்பெற்றவர்களும், ஆண்களைப்பெற்றவர்களும் ஏமாறிக்கொண்டே இருக்கிறார்கள்..இணைய மேட்ரிமோனியலில் போய் பார்த்தால் சகல ஜாதிகளிலும் திருமணம் ஆகாமல் 25, 26,27 ,28 வயதிற்கு மேற்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள்.. தங்களுக்கு வரும் வரனுக்காக பல் வேறு நிபந்தனைகளுடன் காத்துக்கொண்டுள்ளனர்.. ஜோடிப்பொருத்தம் நன்றாக இருந்தால் நட்சத்திரப்பொருத்தம் இல்லை.. நட்சத்திரப்பொருத்தம் சரியாக இருந்தாலும் ராகு, கேது என்ற பாப கிரகங்கள் இருக்கிறது...எனவே... வேண்டாம்.. சரி.. ராகு/கேது.. இருவருக்குமே இருக்கிறது.. நட்சத்திரப்பொருத்தமும் இருக்கிறது.. ஆனால்.. பெண்ணிற்கு 7ல் செவ்வாய், 8ல் செவ்வாய் என ஜாதகம் ஒதுக்கப்படுகிறது..அப்பாடா ஒரு வழியாக நட்சத்திரம், ராகு, கேது, செவ்வாய் என அனைத்தும் பொருந்திவந்தாலும்....பையனுக்கு வருட வருமானம் நாங்கள் எதிர்பார்த்த பத்துலட்சமோ, ஒரு கோடியோ இல்லை...பையனுக்கு நல்ல வேலை, வீடு, என இருந்தாலும் விவசாய நிலம் இல்லை.. எனவே வேண்டாம்.. சொத்துபத்து இருந்தாலும்.. சம்பந்தி ஊர் தூரம்... நல்லது கெட்டதுக்கு எப்படி உடனே போவது.. எனவே.. அவரவர் ஊருக்கு அருகிலேயே பெண்ணோ, பையனோ இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.. இது மட்டுமா...பெண்ணின் படிப்பு அதிகம்... படியில்லை...பெண்ணின் உயரம் குறைவு, பெண் நிறம் கம்மி, என இப்படி பல்வேறு காரணங்களால் ஆணுக்கும், பெண்ணிற்குமான திருமணங்கள் தடைபட்டுக்கொண்டுள்ளன. சுகி சிவம் அவர்கள் தனது புத்தகம் ஒன்றில் , மூல நட்சத்திரப்பெண்கள் பலர் தங்கள் திருமணம் ஜோதிடத்தால் காலதாமதம் ஆவதைக்கண்டனர். இந்து மதத்தில் இருந்தால் தானே இந்த ஜோதிடம் எல்லாம்.. எனவே மதம் மாறி திருமணம் செய்து கொள்கின்றனர் எனப்பொருள்கொள்ளும்படி கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.. இது மூலத்திற்கு மட்டுமல்ல செவ்வாய் தோசம், ஆயில்யம், என தொடர்கிறது.. காதலையும், காதல் திருமணங்களையும், மத மாற்றத்தையும் எதிர்க்கும் இந்துத்வா வாதிகளும், ஆன்மீக குருக்களும் உண்மையில் ராடவேண்டியது இந்த ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் தான்.. ஜோதிடர்கள் மன்னிப்பார்களாக. ஆ.ஈசுவரன். திருப்பூர். 20-9-14 L•

Thursday, August 7, 2014

கல்வித் தாஜ்மகாலுக்கு வெற்றி !
               


             கல்வித்தாஜ்மகாலுக்கு வெற்றி...!!...                           
                                               


                                                                                                                    
                           திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 7000-ம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியானது மழை நீர் சேகரிப்பிற்காக 2002-ம் ஆண்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கையால் பரிசையும், பாராட்டையும் பெற்ற பள்ளியாகும். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்து வந்ததில்,  இந்தியளவில் 10 முறை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு விருதையும், மூன்று முறை இந்திய விஞ்ஞானிகளின்  மாநாட்டில் பங்கேற்றும் சாதனை படைத்துள்ளது. 1994 முதல் இப்பள்ளியின் பெ.ஆ.கழகத்தால் மாணவிகளுக்கு கணிப்பொறிகல்வி அளித்து வந்ததன் காரணமாக 2003-ம் ஆண்டில் மத்தியரசின் சிறந்த கணணிக்கல்விக்கான பரிசையும், விருதையும் மேன்மைமிகு பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் பெற்றுள்ள பள்ளியாகும். 2005-ம் ஆண்டில் தமிழகரசின் சிறந்த சுற்றுச்சூழல் செயல் வீரர்களுக்கான பரிசையும் பெற்ற பள்ளியாகவும் திகழ்கிறது.
                          ..                           
திருமதி.ஜரீன்பானுபேகம்.
      
             
         இப்பள்ளியின் தலைமையாசிரியைகள் திருமதி ஆ.ஜரீன்பானுபேகம் 2002-ம் ஆண்டிலும், திருமதி அ.விஜயாஆனந்தம் 2007-ம் ஆண்டிலும்   தேசிய நல்லாசிரியர் விருது பெற்று சாதனை படைத்த பள்ளியாகவும் திகழ்கிறது. இந்தியளவில் அரசு/
நகராட்சிப்பள்ளிகளுக்கு சுற்றுச்சூழலிலும், பெண்கல்விக்கும் முன் உதாரணமாக இப்பள்ளி திகழ்கிறது. 

ப்பங்கள்
 
இப்பள்ளியின் வரலாறே.. யாது ஊரே யாவரும் கேளீர் என்பதற்கு ஏற்ப, குஜராத்தில் இருந்து திருப்பூருக்கு வியாபாரம் நிமித்தமாக வந்த திரு தேவ்ஜி ஆஷர் என்பவர் இளம் வயதில் (33 வயது) தனது மனைவி திருமதி ஜெய்வாபாயின் மரணத்தருவாயில்(1937-ம் ஆண்டு) திருப்பூரில் பெண்களுக்கென தனியாக உயர் நிலைப்பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு 1942-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் இப்பள்ளியாகும். இவ்வரலாற்றை கேள்விப்பட்ட எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் இதனை கல்வித்தாஜ்மகால் என்று அழைத்தார்.
              

        ஆரம்பகாலத்தில் வாலிபாளையம் துவக்கப்பள்ளியில் தொடங்கப்பட்ட இப்பள்ளிக்கு திரு.தேவ்ஜி ஆஷரின் விடா முயற்சியின் காரணமாக அன்றைய சென்னை மாகாண அரசு 1948-ம் ஆண்டு அரசு ஆணை எண் 1425-ன் படி ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்காக 7 ஏக்கர் 7229 சதுர அடியை கொடுத்தது. இந்த இடத்தில் திரு தேவ்ஜி ஆஷரும், அவருடைய மகன்களான கிருஷ்ணகுமார் & பிரதாப் இணைந்து பள்ளிக்கட்டடம், விளையாட்டு மைதானம், தோட்டம் உட்பட அமைத்து திருப்பூர் நகராட்சிக்கு தானமாக வழங்கினார்கள்.


        திருப்பூரில் 1955-ம் ஆண்டு ரோட்டரி கிளப் துவங்கப்படுகிறது. இதைத்துவங்கியவர்களில் ஜெய்வாபாய் பள்ளியை உருவாக்கிய தேவ்ஜி ஆஷரும் ஒருவராவார். ரோட்டரி கிளப்பின் கூட்டமே அவருடைய வீட்டில் தான் நடைபெற்று வந்தது.  ஒரு கட்டத்தில் ஆஷரின் ஆட்சேபனையை மதிக்காமல்  1960-ல் இருந்த ரோட்டரி கிளப் நிர்வாகத்தினர் மாண்டிசோரி பள்ளியும், மாதர் பூங்காவும் அமைத்து நகராட்சிக்கு  நன்கொடையாக அளிக்கிறோம் என்ற உறுதியின் பேரில் திருப்பூர் நகராட்சியும் 1960 ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் ஆஷர் ரோட்டரி கிளப்பை விட்டு விலகினார். ரோட்டரி கிளப்பினர் 1963-ல் ஜெய்வாபாய் பள்ளி வளாகத்திற்குள்  மாண்டிசோரி பள்ளி அமைத்தனர். ஆனால் மாதர் பூங்கா அமைக்கவில்லை. அதே சமயம் தாங்கள் கூறிய படி நகராட்சிக்கு தானமாகவும் அளிக்கவில்லை. தாங்களே வைத்துக்கொண்டனர். படிப்படியாக நர்சரி & பிரைமரி பள்ளி ஆரம்பித்து  பல கட்டங்கள் கட்டி ஒரு ஏக்கர் இடம் வரை ஆக்கிரமித்துக்
கொண்டனர். சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக பணபலம் படைத்தவர்களாக ரோட்டரி கிளப்பினர் இருந்த காரணத்தாலும், திருப்பூரில் இருந்த அனைத்து நகராட்சிப்பள்ளிகளும், நகராட்சியின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால்  அதிகாரிகளின் எதிர்ப்புகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1978-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் இருந்த நகராட்சிப்பள்ளிகளின் ( கட்டட பாராமரிப்பு தவிர) நிர்வாகம் முழுவதும் அரசுக்கல்வித்துறைக்கு வந்தது. ஜெய்வாபாய் உயர் நிலைப்பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

     
                            
            1987-ம் ஆண்டில் ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவரும், ரோட்டரி பள்ளியின் தாளாளரும் ஒருவரே ஆகும். இவர் செய்த துரோகத்தின் காரணமாகவும், இவருக்கு நகர்மன்றத்தலைவரிடமிருந்த  செல்வாக்கின் காரணமாக அன்றைய ஆணையாளரின் எதிர்ப்பையும் மீறி, நகர் மன்றத்தில் தீர்மானம் வருகிறது. திருப்பூர் நகர் மன்றத்தில் ஜெய்வாபாய் பள்ளிக்குச்சொந்தமான ஒரு  ஏக்கர் இடத்தை ரோட்டரி பள்ளிக்கு வழங்குவதற்காக வந்த தீர்மானம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின் அவர்களின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையறிந்து பதறிப்போய் நகர்மன்றத்திற்கு சென்ற  தலைமையாசிரியை செல்வி சாவித்திரியும், பிற ஆசிரியைகளும் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவரால் மிரட்டப்பட்டார்கள்.  பின் 1989-ம் ஆண்டில் ஜெய்வாபாய் பள்ளியில் பொறுப்பேற்றுக்கொண்ட பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரின் பார்வைக்கு இந்த நில ஆக்கிரமிப்பு கவனத்திற்கு வந்தது. அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.சி.கே.குப்புசாமி அவர்களும் இதைச்சுட்டிக்காட்டினார். அன்றைய முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சரசுவதி பழனியப்பன் அவர்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.      1991 ம் ஆண்டில் ரோட்டரி கிளப்பினர் குறுக்கே கம்பிவேலி அமைத்து தெற்குப்பகுதியில் இருந்து மாணவிகளும் ஆசிரியைகளும் பள்ளியின் தென்புறக்கேட்டின் வழியாக பள்ளிக்குள் வருவதை தடுத்தனர். பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பாக மாண்புமிகு இன்றைய முதல்வர் தான் அன்றும் முதல்வராக இருந்தார். அதனால் அவருக்கு தந்தியடிக்கப்பட்டது. அடுத்த நாளே கம்பி வேலியை இரவோடு இரவாக அகற்றினார்கள். ஜெய்வாபாய் பள்ளிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்தனர். 


  

           ஜெய்வாபாய் பள்ளியின் இடத்தை மீட்க வேண்டும் என்று  1990-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை ஏழு ஆண்டுகள் அரசிடமும், நகராட்சியிடமும் கோரிக்கை வைத்து கேட்டுப்பார்த்தனர். இந்தக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, மாறாக திருப்பூர்  நகர் மன்றத்தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு ஏக்கர் நிலத்தை ரோட்டரி பள்ளிக்கு 99 வருட குத்தகைக்கு விடுவதற்கு வருவாய்த்துறை ஏற்பாடு செய்தது. எனவே வேறு வழியில்லாமல் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து செயல் பட்டு வந்த தனியார் ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளியின் மீது ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக அறக்கட்டளை  1996-ல் சென்னை உயர் நீதி மன்றத்தின் மூலம் பள்ளி இடம் குத்தகைக்கு விடுவதற்கு  தடையானை பெற்றனர்.                        
             சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே  கல்வித்துறையின் அடிப்படை விதியான 10(1) ஏபி ன் விதிகளுக்கு மாறாக (அதாவது  பள்ளியின் பெயரில் சொந்தமாக நிலம் இருக்கவேண்டும் அல்லது பள்ளியின் பெயரில் 30 வருட குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டு பத்திர பதிவுத்துறையில் பதிவு செய்தால் மட்டுமே பள்ளி தொடங்க முடியும்)  உண்மைக்கு மாறான தகவல்களை கல்வித்துறைக்குத்தந்து,  நகர் மன்றத்தீர்மானத்தின் அடிப்படையில்  ஜெய்வாபாய் பள்ளி பெ.ஆ.கழகத்தினரின் ஆட்சேபனையை புறந்தள்ளிவிட்டு, மெட்ரிகுலேசன் பள்ளியாக  மாற்றினார்கள்.
            அதே சமயம் கனியாம்பூண்டியருகே பள்ளிக்கட்டம் கட்டுவதற்காக வாங்கிய சுமார் 8 ஏக்கர் இடத்தில் 2003-ல் அன்றைய ரோட்டரி நிர்வாகத்தினர் முதியோர் இல்லம் கட்டி திறப்புவிழா செய்தார்கள். ஆனால் அதற்கு அடுத்து வந்த ரோட்டரி நிர்வாகத்தினர்கள் அந்த இடம் முழுவதையும் விற்று விட்டு, ராயபுரத்தில் சிவானந்த கலர் கம்பெனி அருகில் பள்ளி கட்டுவதற்காக இடம் வாங்கிப்போட்டார்கள். 2005-ம் ஆண்டு பதவிக்கு வந்த நிர்வாகத்தினர்கள், 26-3-2005ம் தேதியிட்ட தினமலரில், தாங்கள் ராயபுரத்தில் வாங்கியுள்ள இடத்தில் திருப்பூர் மக்களின் கல்விக்கனவை நினைவாக்கும் விதமாக பெரிய அளவில் ரூ ஒரு கோடி செலவில் மேல் நிலைப்பள்ளியாக வளர்ச்சி காணப்போகிறது என்று தெரிவித்துள்ளனர்.


         ஒன்பது ஆண்டுகள் சென்னை உயர்  நீதி மன்றத்தில்  நடைபெற்ற விசாரனையின் முடிவில்   W.P. எண்.19362/96 தேதி 24-6-2005-ன் படி ரோட்டரி கிளப்பினர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளிக்குள் உள்ள தங்கள் பள்ளியை 31-5-2006 க்குள் காலி செய்து வேறு இடத்திற்குச்செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஒரு வருடம் அவகாசம் அளித்து தீர்ப்பளித்தது.                                                                                                     
                 தீர்ப்பை ஏற்காத  திருப்பூர் ரோட்டரி கிளப்பினர் 2006-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில்(பென்ச்) ஜெய்வாபாய் பள்ளி பெ.ஆ.கழக அறக்கட்டளை, தமிழகரசின் வருவாய் செயலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவை, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர், ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் என ஐந்து பேர் மீதும் வழக்குப்போட்டு,  மேல் முறையீடு செய்தனர். இவர்களின் மேல் முறையீட்டு மனுவான  W.A. எண். 2211/2005 தேதி 28-2-2008 அன்று மீண்டும் சென்னை உயர் நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

       மீண்டும் ரோட்டரி கிளப்பினர் 2008-ல் மறு சீராய்வு மனு வழக்குப் போட்டனர். இந்த வழக்கில் மெட்ரிகுலேசன் பள்ளியின் இயக்குனர் மீதும் வழக்குப்போட்டனர். அப்போது “ இந்த இறுதித்தீர்ப்பும் தங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், தாங்களே தங்களது ரோட்டரி பள்ளி இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி விடுவதாக மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனருக்கும்,  உயர் நீதி மன்றத்திலும் எழுத்து பூர்வமாக தெரிவித்தனர்..   
                                                        

        சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கான R.A.(writ)எண்.61/2008 தேதி 22-10-2010. ன் படி இந்த மறு சீராய்வு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

           


  
  
          தாங்கள் ஏற்கனவே 2008-ல் கடிதம் மூலம் தெரிவித்தபடி திருப்பூர் ரோட்டரி கிளப்பினர் ஜெய்வாபாய் பள்ளிக்குள் இருந்த தங்கள் பள்ளி இடத்தை காலி செய்யவில்லை. இதற்கு மாறாக ரோட்டரி கிளப்பினர் சென்னை உயர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பினை எதிர்த்து சிறப்பு பெட்டிசன் மூலம் SLP 4053/2011  படி சுப்ரீம் கோர்ட்டில்,1) ஜெய்வாபாய் பள்ளி பெ.ஆ.கழக அறக்கட்டளை (2) வருவாய் செயலர், தமிழகரசு, (3) மாவட்ட ஆட்சித்தலைவர், (4) மாநகராட்சி ஆணையாளர் 5) ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் என ஐந்து பேர் மீதும் வழக்கு தொடுத்து சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக 2011-ல்  உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.
     திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழகரசும் இந்த தடையாணையை நீக்குவதற்கு 24-1-2014 ல் அபிடாவிட் தாக்கல் செய்தது. இந்த அபிடாவிட்டில், 1960 ம் ஆண்டு ரோட்டரி கிளப்பினர் நகராட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி நடக்கவில்லையென்றும், ஜெய்வாபாய்  மாநகராட்சிப்பெண்கள் பள்ளியானது இந்தியாவிலேயே மிகச்சிறந்த நகராட்சிப்பள்ளியென்றும், திருப்பூர் மாநகராட்சிக்கு பெருமிதம் அளிக்கும் பள்ளியென்றும் கூறி, ஜெய்வாபாய் பள்ளிக்குள் இருந்து வெளியேற மறுக்கும் ரோட்டரி கிளப்பினரின் அப்பீல் மனுவை ரத்து செய்யுமாறு  கோரியிருந்தனர்.
                                         
         மேற்கண்ட வழக்கின் விசாரனை கடந்த மாதம் 30-6-2014 அன்றும், 07-07-2014 அன்றும் விசாரனைக்கு வந்தது. ரோட்டரி கிளப்பினரால் வாய்தா வாங்கப்பட்டது. இறுதி விசாரனை 30-7-2014 அன்று உச்ச நீதிமன்றத்தில்  விசாரனைக்கு வந்தது. உச்ச நீதி மன்றம் , 1948-ம் வருடம் அரசு ஆணை எண் 1425-ன் படி 7 ஏக்கர் 7229 சதுர அடி இடம் முழுவதும் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்குச்சொந்தமானது எனக்கூறி,சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு செல்லும் எனக்கூறி ரோட்டரி கிளப்பினரின் அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்தது. ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளிக்குள் ஐம்பது ஆண்டுகால நில ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

      
        சென்னை உயர் நீதி மன்றத்தீர்ப்பின் அடிப்படையில் ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளிக்கு 31-5-2006 க்குப்பின் அங்கீகாரம் இல்லையென்று மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநரின் ந.க.எண் 2607/இ 3/2008 நாள் 29-5-2008 கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதி மன்றம் 2005-ம் ஆண்டே தனது தீர்ப்பில்  ரோட்டரி பள்ளியினர் தங்கள் பள்ளியை 31-5-2006 க்குள் வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களும் ராயபுரத்தில் ரோட்டரி கிளப்பிற்கு சொந்தமான இடத்தில் மேல் நிலைப்பள்ளியை கட்டப்போகிறோம் என்று உயர் நீதி மன்ற தீர்ப்பு வரும் முன்பே 26-3-2005 அன்று செய்தித்தாளில் அறிக்கை வெளியிட்டவர்கள்
24-6-2005 அன்று தீர்ப்பு வந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக  வழக்கிற்காக செலவழித்த  லட்சக்கணக்கான ரூபாயை வைத்து தங்கள் இடத்தில் பள்ளியை கட்டியிருக்கலாம்!. ஏன் கட்டவில்லை..? இவர்களுக்கு கல்வியின் மேல் அக்கறையில்லை என்பதையும்,  ரூபாய் நாற்பது கோடி மதிப்புள்ள ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் இடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு நோக்கம் தவிர வேறில்லை என்றாகிறது. மேலும்  தங்கள் பள்ளிக்கு அங்கீகாரமோ, இடமோ இல்லையென்பதை பெற்றோர்களிடம் மறைத்து குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும்  சமச்சீர் பாடத்திட்டமே இருப்பதால் மாணவிகளை ஜெய்வாபாய் பள்ளியிலும், மாணவர்களை நஞ்சப்பா நகராட்சிப்பள்ளியிலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ளவர்களை காதர்பேட்டை, தேவாங்கபுரம், ராயபுரம் நகராட்சிப்பள்ளிகளில் ஆங்கில வழி இருப்பதால் அங்கு சேர்க்க முடியும். எனவே தமிழகரசு ரோட்டரி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமுல் படுத்தினால் மட்டுமே 7000-ம் மாணவிகள் படிக்கும் ஜெய்வாபாய்  மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின்  கல்வி வளர்ச்சிக்கும், மாணவிகளின் பாதுகாப்பிற்கும் பேருதவியாக இருக்கும் என்று பெற்றோர்-ஆசிரியர் கழகம் வேண்டுகோள் வைக்கிறது..
              

                                                                                              
       
  

 

Sunday, February 23, 2014

.
     ஜெய்வாபாய் பள்ளிக்கு நன்றி சொல்லும் நேரமிது.
                             (A.ஈசுவரன் தலைவர், பெற்றோர்-ஆசிரியர் கழகம்..)

அன்புடையீர் வணக்கம்.

         1937-ம் ஆண்டு திருமதி ஜெய்வாபாய் என்ற பெண்மணி(இறக்கும் தறுவாயில்) திருப்பூரில் பெண்களுக்கென்று பள்ளி வேண்டுமென்று விருப்பப்பட்டார். தனது மனைவியின் விருப்பத்தை கணவர் D.O.ஆஷர் 1942-ல் நிறைவேற்றினார். திருமதி ஜெய்வாபாயின் பெண் கல்விக்கனவு நிஜமாகியுள்ளது. இந்தியாவிலேயே 7200 மாணவிகள் படிக்கின்ற மாபெரும்
 மாநகராட்சிப்பெண்கள் பள்ளியாக பல்வேறு சாதனைகளைப்படைத்து ஜெயக்கொடி நாட்டி வருகிறது.


          1989-ம் ஆண்டு எனது மகளை இப்பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்தபோது பள்ளியின் நிலையென்ன? அன்று மாணவிகளின் எண்ணிக்கை 3008. பள்ளியின் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டுக்கிடந்தது. அடிப்படை வசதிகளான குடி நீர், கழிப்பறைகள், கிணற்று நீர், வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் போன்றவை இல்லை. பன்றிகள் உலாவும் இடமாக பள்ளி வளாகம் காட்சியளித்தது. வேலியில்லாத பயிர் நாசம் என்பதை போலவே கண்காணிப்பும், பராமரிப்பும் இல்லாத பள்ளியும்! 

இச்சூழல் மாசுபாடு பற்றிய செய்தியை தினமணி நாளிதழ் “ஆராய்ச்ச்சிமணி” பகுதியில் எழுதியதில், பெற்றோர்கள்  மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. 25-07-1989 அன்று பெற்றோர்-ஆசிரியர் கழகம் புனரமைக்கப்பட்டது. மாதம் ஒரு ரூபாய் என்கிற நமக்கு நாமே திட்டம் உருவாயிற்று. பள்ளிப்பாதுகாப்புக்கமிட்டியில் என்னை இணைத்துக்கொண்டேன். மகாகவி பாரதி, சரஸ்வதி தேவி புகழ பாட்டில், கல்விக்கூடத்தை பேம்படுத்த         நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! 
        நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!

        ஆண்மையாள ருழைப்பினை நல்கீர்! என்றார்.


தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த என்னிடம் பொற்குவை இல்லை. உழைப்பு மட்டுமே இருந்தது. எனது தொலைபேசித்துறை பணி நேரம் போக, மீதி நேரத்தையும், இலாகா விடுமுறைகளையும் கடந்த 20 வருடங்களாக  பெண் கல்வி சிறக்க எனது உழைப்பை ஜெய்வாபாய் மகளிர் பள்ளியின் முன்னேற்றத்திற்குச் செலுத்தி வருகிறேன்.             1989-ல் போடப்பட்ட ஒரு ரூபாய் திட்டம் என்ற விதை இன்று ஆலம்விருட்சமாக உயர்ந்துள்ளது. 1991-ல் ஆசிரியை பற்றாக்குறையினைப் போக்க 2 ஆசிரியைகளை நியமித்தோம். 2 காவலர் மற்றும் 2 ஆசிரியைகள் சம்பளமாக மாதம் ரூ.2900/- தரப்பட்டது. தற்போது 67 ஆசிரியைகள், 9 பணியாளர்களுக்கு மாதம் ரூ.1.80 லட்சம் தரப்படுகிறது. 1993-முதல் கூடுதல் வகுப்பறைகள் கட்ட ஆரம்பித்தோம். இதுவரை 34 வகுப்பறைகள், 4 ஆய்வுக்கூடங்கள், 34  டாய்லெட்டுகள், 6 கீழ்-மேல் நிலைத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. 1989-90ம் கல்வியாண்டில் இருந்து 2007-08 ம் கல்வியாண்டு வரை சுமார் ரூ.3 கோடியளவில் கட்டடங்கள், ஆசிரியைகள் சம்பளம், பள்ளி பராமரிப்பு, சூழல் மேம்பாடு, மின் கட்டணம், கம்ப்யூட்டர்கள், மின்சார விளக்குகள், மின் விசிறிகள் எனச்செலவழிக்கப்பட்டுள்ளது.         திருப்பூரின் முக்கிய பிரமுகர்களை அணுகியத்தில் சென்னை சில்க்ஸ் இரண்டு, செல்வி பர்னிச்சர்ஸ் இரண்டு, மேகலா மணி ஒன்று ஆகியோர் ஐந்து வகுப்பறைகள் கட்டித்தந்துள்ளனர்.  2008-ல் திருப்பூரில் இதுவரை யாரும் செய்திராத அளவில் ஈஸ்ட்மேன் ஏற்றுமதி நிறுவனத்தார் ரூ. 85 லட்சம்  மதிப்பில் 15 வகுப்பறைகள் கட்டி தந்துள்ளானர்.  மத்தியரசு சார்பில் மூன்று வகுப்பறைகள், திரு. கே.சுப்பராயன் MLA அவர்கள் மூன்று வகுப்பறைகள், திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் MP  அவர்கள் 4 வகுப்பறைகள்  தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித்தந்துள்ளனர்.  பள்ளியின் வைரவிழாவினை முன்னிட்டு நமது மாணவிகளால் திருப்பூர் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ 10 லட்சம் நிதியில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரிய மா நகராட்சி மேயர் க.செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.கோவிந்தசாமி அவர்களும் நமது பள்ளியின் வகுப்பறை பற்றாக்குறையைப்போக்கும் வண்ணம் முயற்சிகள் எடுத்து திருப்பூர் மா நகராட்சி சார்பாக ரூ. 4 கோடி மதிப்பில் 33 வகுப்பறைகள் மற்றும் திறந்தவெளி கலையரங்கமும் கட்டப்பட்டு வருவதால் 10,000 மாணவிகள் கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.          திருப்பூரில் அரசு- நகராட்சிப்பள்ளிகளில், ஜெய்வாபாய் பள்ளியில் மட்டுமே 1000 த்திற்கும் மேற்பட்ட (1991-ல் 49 மரங்கள் இருந்தது) மரம், செடி, கொடிகள், வண்ணப்பறவை, வர்ணமீன்கள் காட்சியகம், செயற்கை நீருற்றில் துள்ளி விளையாடும் மீன்கள், பூத்துக்குலுங்கும் அல்லிக்குளங்கள், வறண்ட நில தாவர வகைகள், மழை நீர் சேகரிப்பு குளம், மூலிகைத்தோட்டம், சானிட்டரி நாப்கின் பாய்லர், அறிவியல் பூங்கா எனச் சோலைவனமாக உயிரோட்டத்துடன் காட்சியளிக்கும்படி இப்பள்ளியை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மாற்றியுள்ளதால் பல பள்ளிகளில் இருந்து பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் நமது பள்ளியை காண வருகின்றனர்.


       பெற்றோர் ஆசிரியர் கழக(எனது) வழிகாட்டுதலின் காரணமாக பத்துமுறை தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு விருதுகள், தமிழகரசின் சுற்றுச்சூழல் செயல்வீரர் விருது, மத்தியரசின் சிறந்த கம்ப்யூட்டர் கல்விக்கான விருது எனப்பல்வேறு சாதனைகளை செய்ததன் காரணமாக மேண்மைமிகு முன்னாள் பாரத குடியரசுத்தலைவர் டாக்டர் .A.P.J. அப்துல்க்லாம் அவர்கள் நமது பள்ளியை நேரில் கான விருப்பப்பட்டார். மாண்புமிகு முன்னாள் தமிழகமுதல்வர் J.ஜெயலலிதா அவர்கள் மற்றும் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் நமது பள்ளியைப் பாராட்டியுள்ளனர். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்ததைப்போன்று நமது பள்ளியின் தலைமையாசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திருமதி.ஆர்.ஜரீன்பானுபேகம் மற்றும் தற்போது பணிபுரியும் திருமதி.அ.விஜயா ஆனந்தம் அவர்களும் அடுத்தடுத்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளது மாபெரும் சிறப்பாகும்.

பள்ளி இடம்: ஜெய்வாபாய் பள்ளியின் ஒரு ஏக்கர் இடம், சமூகத்தில் செல்வமும் செல்வாக்கும் மிகுந்த ரோட்டரி கிளப் மற்றும் அவகள் நடத்தும் மெட்ரிகுலேசன் பள்ளியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது பெ.ஆ.கழகத்திற்கு 1990-ல் தெரியவந்தது. அன்று முதல் பள்ளி இடத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோம். 1996-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தோம். சென்னை உயர் நீதிமன்றம் 2005-ல்  வழங்கிய தீர்ப்பில், ஜெய்வாபாய் பள்ளிக்குள் இருந்து ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளியினர் 31-5-2006-க்குள் வெளியேறி விடவேண்டும் என்று தீர்ப்பளித்தும் ரோட்டரி நிர்வாகம் நீதிக்குத்தலைவணங்காமல் அப்பீல் செய்தனர்.  2008-ல் அவர்களின் அப்பீலை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் ஜெய்வாபாய் நகராட்சிப் பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் நோக்கத்துடன் வளர்ச்சி மற்றும் 7200 மாணவிகளின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு உழைத்டு வந்த நான் இன்று துரோணாச்சாரியார்கள் உருவாக்கிய கெளரவ் சேனையின் சக்கரவியூகத்தில் மாட்டிக்கொண்ட அபிமன்யு போல நிற்கிறேன், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி விட்டது. தர்மம் மறுபடியும் வெல்லும்.


                 மூன்று .அங்குல மண்புழு கூட மண்ணை வளப்படுத்தி மனிதனுக்கு உதவுகிறது. மனிதராக பிறந்த நாம் பிறருக்கு உதவவேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் எனது வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றவும், பெண் கல்வி சிறக்கவும் சேவைபுரிய ஜெய்வாபாய் பள்ளியில் அனுமதித்த தலைமையாசிரியைகள் செல்வி.ஜி.சாவித்திரி, திருமதி.பிரேமா டேனியல், திருமதி.ஆர்.ஜரீன்பானுபேகம், திருமதி.அ.விஜயா ஆனந்தம் மற்றும் ஒத்துழைப்பை நல்கிய அனைத்து ஆசிரியர்கள் அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவிகள் தமிழக் அரசின் கல்வித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கும், எனது செயல்பாட்டுக்கு பல்வேறு வழிகளில் உதவிப்புரிந்தவர்களுக்கும், மனமாற வாழ்த்தியவர்களுக்கும், அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்களுக்கும், எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி அரசிற்கும், BSNL இலாகாவிற்கும் தவறான புகார்களை,  அனுப்பி எனக்கு மன உளச்சலையும் துயரத்தையும் உருவாக்கிய அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

               ஜெய்வாபாய் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முன் மாதிரியாக திகழ்கிறது என்று பிரபல கல்வியாளர்கள் டாக்டர் வசந்திதேவி, டாக்டர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், டாக்டர் ராமனுஜம், சாகித்திய அகதாமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் உள்பட பலர் பாராட்டி உள்ளனர். இச்சிறப்பை மேலும் முன்னெடுத்து செல்லும் முகமாக புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் . ஜெய்வாபாய் பள்ளி மற்றும் மாணவிகளின் நலனுக்காக புதிய நிர்வாகிகளுக்கு எனது அனுபவம், ஆலோசனை மட்டுமல்ல உழைப்பையும் தரத்தயாராக உள்ளேன்.

 திருப்பூர்.                                                                                                                  வாழ்த்துக்களுடன்
03-10-2008                                                                                                                       ஆ.ஈசுவரன்

03-10-2008 அன்று  மாவட்டக்கல்வி அலுவலரின்(தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ) வேண்டுகோளுக்கிணங்க ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியபோது ஆசிரியைகளுக்கும், பெற்றோர்களுக்கும் நான் வினியோகித்த துண்டுப்பிரசுரம்.

ராணி ரூபா தேவி.. RANI RUPA DEVI STEP WELL AT AHEMADABAD, GUJARATH.                ராணி ரூபா  தேவி அல்லது ராணி ரூபாபாயின் பெய...