ஜாக்கிரதை...சித்தமருந்தில் மெர்க்குரிகலப்பு.

எச்சரிக்கை ..! நீங்கள் படத்தில் இருப்பது திருப்பதி லட்டு என்று எண்ணிவிடாதீர்கள் .. இது அவினாசி ரோட்டில் நீலகிரி பேக்கரிக்கு பின்புறம் உள்ள சித்த வைத்திய சாலையில் கை அலர்ஜிக்காக எனது பெரியமகள் கடந்த ஜீலை மாதம் திருப்பூர் வந்த போது ஸ்கின் கேர் என்ற பெயரில் 30 நாட்களுக்கு தினம் ஒன்று வீதம் தரப்பட்ட மூலிகை உருண்டையை . ஒரு வாரம் தான் சாப்பிட்டிருப்பார் . எட்டாவது நாள் நடக்க , உட்கார முடியாமல் போனதால் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் நரம்பியல் நிபுனரிடம் காட்டினோம் ... அவர் சித்த மருந்தில் மெர்க்குரி கலக்குவாரகள் .. எனவே ரத்தத்தை எடுத்து அதில் மெர்க்குரி இருக்கிறதா எனப்பார்த்தபின்பே மருத்துவம் பார்க்கமுடியும் எனக்கூறி , ரத்தம் எடுத்து பாம்பே அனுப்பினார்கள் .. ஒரு வாரம் கழித்து பாம்பேயில் இருந்து வந்த ரிசல்டில் மெர்க்குரி 4.99 அளவு இருக்கிறது என வந்தது . மனித உடம்பில் 0.21 -1.3 வரை மட்டுமே இருக்கலாம் . மகளுக்கு மெர்க்குரி அளவு 4.99 அதிகமாக இருப்பதால் நரம்புகளும் , தசையும் இறுகி வலியெடுக்...