கல்வித்தாஜ்மகாலுக்கு வெற்றி...!!...
ஜெய்வாபாய் ஈசுவரன் திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 7000-ம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியானது மழை நீர் சேகரிப்பிற்காக 2002-ம் ஆண்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கையால் பரிசையும், பாராட்டையும் பெற்ற பள்ளியாகும். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்து வந்ததில், இந்தியளவில் 10 முறை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு விருதையும், மூன்று முறை இந்திய விஞ்ஞானிகளின் மாநாட்டில் பங்கேற்றும் சாதனை படைத்துள்ளது. 1994 முதல் இப்பள்ளியின் பெ.ஆ.கழகத்தால் மாணவிகளுக்கு கணிப்பொறிகல்வி அளித்து வந்ததன் காரணமாக 2003-ம் ஆண்டில் மத்தியரசின் சிறந்த கணணிக்கல்விக்கான பரிசையும், விருதையும் மேன்மைமிகு பாரதக்குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களால் பெற்றுள்ள பள்ளியாகும். 2005-ம் ஆண்டில் தமிழகரசின் சிறந்த சுற்றுச்சூழல் செயல் வீரர்களுக்கான பரிசையும் பெற்ற பள்ளியாகவும் திகழ்கிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியைகள் திருமதி ஆ.ஜரீன்பானுபேகம் 2002-ம் ஆண்டிலும், திருமதி அ...