உலக மாணவர் தினமாக கொண்டாடுவோம்!
உலக மாணவர் தினவிழா! பாரத ரத்னா டாக்டர் அ.பெ.ஜெ.அப்துல்கலாம் (15-10-2010) அவர்களின் 80 வது பிறந்தநாள்! (புகைப்படங்களை பெரிதாக்க கிளிக் செய்யுங்கள்) 14-10-2010 அன்று இரவு 10 மணிக்கு,அப்துல் கலாம் அவர்களின் இணைய தளத்தில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை மின்னஞ்சலில் அடித்துக்கொண்டிருந்தேன்.அப்போது ...ஒரு போன். சார்! நான் பார்த்திபா பேசுகிறேன்..எனக்கு ஒரே குழப்பம்.யார் பார்த்திபா?.சார் நான் தான் ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவி..டெல்லிக்கு ஜனாதிபதி அவர்களைப்பார்க்க வ ந்தவர்களில் நானும் ஒருவள் சார்! நமது ஜனாதிபதி அவர்களுக்கு நாளை 80 வது பிறந்த நாள்..பள்ளியில் வருடா வருடம் அவருடைய பிறந்தநாளைக்கொண்டாடுவீர்கள்..இந்த வருடம் உண்டா சார் என்றார். நான் தற்போது பெற்றோர்-ஆசிரியர் கழக பொறுப்பில் இல்லை.!.பள்ளியில் கொண்டாடுவார்களா எனத்தெரியாது..ஆனால் 15-10-2010 அன்று மத்தியரசின் நிதியுதவியுடன் ” இன்ஸ்பியர்...