Posts

Showing posts from July, 2010
Image
படிக்காத மேதை கர்மவீரர் காமராஜருக்கு திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் புகலாஞ்சலி! தமிழகத்தில் கல்விப்புரட்சிக்கு வித்திட்ட தமிழக முன்னாள் முதல்வர் பாரதரத்னா கர்மவீரர்,காலாகாந்தி,படிக்காத மேதை என்றழைக்கப்படுகிற காமராஜர் அவர்களின் பிறந்த நாளை தமிழகரசு கட ந்த மூன்று ஆண்டுகளாக ஜூலை 15 ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாகக் கொண்டாடி,மாற்றான் தோட்டத்து மல்லிகையின் அருமை,பெருமைகளை,வருங்கால மன்னர்களுக்கு எடுத்துக்கூறிவருகிறது. காமராஜர் ஆட்சி காலம்(1954-1963)பொற்காலம்,அதை மீண்டும் கொண்டுவருவோம் என்று மட்டும் கூறிக்கொண்டு,அவர் பயன்படுத்திய காரைக்கூட காப்பாற்றாமல்,பராமரிக்காமல் காயிலான் கடையில் கிடக்கும் கார் போல அவருடைய பெயர் தாங்கிய பிரம்மாண்டமான மாளிகையில் கேட்பாரற்று ( நன்றி: தினமணி 15-7-2010)கிடக்கின்ற செய்தியைப்படித்து வேதனையுற்ற உள்ளங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் காமராஜரின் சாதனைகளை அறியும் வண்ணம்,மாண்புமிகு தமிழக முத

கல்வித் தாஜ்மஹால்.......

Image
இது கல்வித் தாஜ்மஹால்..... .. முகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மீது கொண்ட அன்பின் காரணமாக கட்டிய உலக அதிசியமான தாஜ்மஹால் பற்றித்தெரியும்!இது என்ன கல்வித்தாஜ்மஹால் ! எங்கே இருக்கிறது? என அறிய ஆவலாக உள்ளதா? திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு கல்வித்தாஜ்மகால் என்ற அடைமொழிப்பெயரை,1998-ல் பள்ளிக்கு வருகை புரிந்த பிரபல சாகித்திய அகதாமி விருது பெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் இப்பள்ளியின் வரலாற்றைக்கேள்விப்பட்டு, கல்வித்தாஜ்மஹால் என்று வர்ணித்தார். இந்தியாவிலேயே ஒரு அரசு/ நகராட்சிப்பள்ளிகளில் ஒரே வளாகத்தில் மிக அதிகமான 7300 மாணவிகள் கல்வி கற்கும் பெண்கள் பள்ளி இதுவாகத்தான் இருக்கும்!...ஜெய்வாபாய் பள்ளியின் வரலாறு உங்கள் முன்னே!..                                                                      1951-ம் ஆண்டில் கல்வித்தாஜ்மஹால்.. .என்கிற ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி- திருப்பூர். குஜராத் மாநிலம் ஜாம்  நகரைச்சேர் ந்த திரு.டி.ஒ.ஆஷர் தனது 13 வயதில் பம்பாயில் உள்ள ஒரு பஞ்சு வியாபாரியி