Wednesday, July 14, 2010படிக்காத மேதை கர்மவீரர் காமராஜருக்கு
திருப்பூர் மாவட்ட
பள்ளிக்கல்வித்துறையின் புகலாஞ்சலி!தமிழகத்தில் கல்விப்புரட்சிக்கு வித்திட்ட தமிழக முன்னாள் முதல்வர் பாரதரத்னா கர்மவீரர்,காலாகாந்தி,படிக்காத மேதை என்றழைக்கப்படுகிற காமராஜர் அவர்களின் பிறந்த நாளை தமிழகரசு கட ந்த மூன்று ஆண்டுகளாக ஜூலை 15 ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாகக் கொண்டாடி,மாற்றான் தோட்டத்து மல்லிகையின் அருமை,பெருமைகளை,வருங்கால மன்னர்களுக்கு எடுத்துக்கூறிவருகிறது. காமராஜர் ஆட்சி காலம்(1954-1963)பொற்காலம்,அதை மீண்டும் கொண்டுவருவோம் என்று மட்டும் கூறிக்கொண்டு,அவர் பயன்படுத்திய காரைக்கூட காப்பாற்றாமல்,பராமரிக்காமல் காயிலான் கடையில் கிடக்கும் கார் போல அவருடைய பெயர் தாங்கிய பிரம்மாண்டமான மாளிகையில் கேட்பாரற்று ( நன்றி: தினமணி 15-7-2010)கிடக்கின்ற செய்தியைப்படித்து வேதனையுற்ற உள்ளங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் காமராஜரின் சாதனைகளை அறியும் வண்ணம்,மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அமுல்படுத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் காமராஜர் அவர்களின் 108வது பிறந்த நாள் விழா திருப்பூர் வீரபாண்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவின் புகைப்படக்காட்சி உங்கள் பார்வைக்கு....

ஜெய்வாபாய பள்ளி மாணவிகளின் வாத்தியக்குழுவின் வரவேற்பு.


மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும்,
மாண்புமிகு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் மலர் கொத்துகள் கொடுத்து வரவேற்கிறார் திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.த.ராஜே ந்திரன் அவர்கள்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி வாத்தியக்குழுவினரின் வி.ஐ.பி சல்யூட்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்குகிறது......
கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு புஸ்பாஞ்சலி செலுத்தும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு புத்தகம் பரிசளிக்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்.
விழாவிற்கு வந்தவர்களை வரவேற்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் .
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு.சி.சமய மூர்த்தி ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமை யுரை ஆற்றுகிறார்.
திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.கோவிந்தசாமி அவர்களுக்கு புத்தகம் பரிசளிக்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.த.ராஜேந்திரன் அவர்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள், காமராஜர் அவர்களின் கல்விச்சேவையையும்,தமிழகரசு கல்விக்காக ஆற்றிவிரும் சாதனைகளையும் கூறி சிறப்புரையாற்றுகிறார்.
கல்வி வளர்ச்சி நாளையொட்டி,தமிழகரசின் சார்பாக மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலகம், ஏழு உயர் நிலைப்பள்ளிகளை மேல் நிலைப்பள்ளிகளாக உயர்த்துதல்,அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக கட்டப்பட்ட மூன்று வகுப்பறைகளை திறந்து வைக்கிறார் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்.
விழாப்பந்தலை அலங்கரிக்கும் வருங்கால மன்னர்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் படித்து திருப்பூர் மாவட்டளவில் அதிகமதிப்பெண்கள் பெற்ற 41 மாணவ மாணவிகளுக்கு தமிழகரசு சார்பாக ரூ.36000/-ம் மதிப்புள்ள மடிக்கணனிகள் இலவசமாக வழங்கப்பட்டது.மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் இருந்து மடிக்கணனி பெரும் திருப்பூர் ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் செல்வி. சரண்யா மற்றும்
செல்வி பத்மப்பிரியா
மேடை ஏற்பாடுகளை சிறப்பாகச்செய்திட உறுதுணை புரிந்த தலைமையாசிரியர்கள்/கல்வி அலுவலர்கள்.

நன்றியுரை கூறும் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.பெ. நடராஜன் அவர்கள்.

படித்தமைக்கு நன்றி! உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது!


No comments:

Post a Comment

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...