பகவத்கீதை என் பார்வையில்

சமீபத்தில் வாசித்த நூல் ஸ்ரீமத் பகவத்கீதா!.. இதனை கீதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மூலம், பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என 1052 பக்கங்கள்..விலை மிகவும் மலிவு ரூ135-00 மட்டுமே. இந்த வருட ஆரம்பத்தில் நைருதி பள்ளியின் அறிவியல் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்த போது பள்ளியின் சார்பாக நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. யூதர்களுக்கு பழைய ஏற்பாடு, கிருத்துவர்களுக்கு பைபிள், இஸ்லாமியருக்கு குரான் என்பது போல இந்துக்களுக்கு வேத நூல் பகவத்கீதையாகும். கிருஷ்து தன் சீடர்களுக்கு சொன்னது பைபிள், முகமது அலி(தனக்கு அல்லா சொன்னார் எனக்கூறியது) சொன்னவை குரான், கீதை என்பது பகவான் தன் திருவாயால் அர்ஜுணனுக்கு அருளியது அல்லது சொன்னது ஸ்ரீமத்பகவத்கீதா. பகவத் கீதை 18 அத்தியாயங்கள் கொண்ட( 700 ஸ்லோகங்களை உள்ளடக்கிய ) நூலாகும். அவைகள் பின்வருமாறு 1.அர்ஜுண விஷாத யோகம், 2.ஸாங்க்ய யோகம். 3.கர்மயோகம். 4. ஞானகர்ம ஸன்யாஸ யோகம். 5.கர்ம ஸன்யாஸ யோகம். 6. ஆத்ம ஸம்யம யோகம். 7. ஞான விஞ்ஞான யோகம்.8. அஷர ப்ரஹ்ம யோகம். 9. ராஜவித்யா ராஜ...