Posts

Showing posts from August 7, 2014

கல்வித் தாஜ்மகாலுக்கு வெற்றி !

Image
                               க ல்வித்தாஜ்மகாலுக்கு வெற்றி...! !...                                                                                                                                                                                                                                   திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 7000-ம் மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியானது மழை நீர் சேகரிப்பிற்காக 2002-ம் ஆண்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கையால் பரிசையும் , பாராட்டையும் பெற்ற பள்ளியாகும். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்து வந்ததில்,  இந்தியளவில் 10 முறை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு விருதையும் , மூன்று முறை   இந்திய விஞ்ஞானிகளின்   மாநாட்டில் பங்கேற்றும் சாதனை படைத்துள்ளது. 1994 முதல் இப்பள்ளியின் பெ.ஆ.கழகத்தால் மாணவிகளுக்கு கணிப்பொறிகல்வி அளித்து வந்ததன் காரணமாக 2003-ம் ஆண்டில் மத்தியரசின் சிறந்த கணணிக்கல்விக்கான பரிசையும்