சனிப்பெயர்ச்சி என்றால் என்ன ? ! படம் 1.அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மையான அழகிய சனி கிரகம். இந்த கிரகம் உங்கள் வீட்டில் (பூமியில்)இருந்து 1.2 பில்லியன் கி.மீ தூரத்தில் இருக்கிறது. சூரியனை ஒரு முறை சுற்ற 30 வருடம் எடுத்துக்கொள்கிறது. மணிக்கு 36480 கி.மீ. வேகத்தில் செல்கிறது. # சனியின் தாக்கமண்டலம் அதன் மையத்தில் இருந்து வெறும் 5.45 கோடி கி.மீ. தான் என்று 19- ம் நூற்றாண்டிலேயே கணிதமேதை லாப்ளாஸ் கண்டுபிடித்துவிட்டார். இதன் பின்னரும் 120 கோடி கி.மீ தூரத்தில் உள்ள சனியின் தாக்கம் பூமியில் உள்ள மனிதர்கள் மீது இருக்கும் சோதிடர்கள் கூறுவது தவறானது, பொய்யானது என்பதை புரியாமல் மக்கள் இருப்பது வேதனையாக உள்ளது.# ( நன்றி விஞ்ஞான துளிர் டிசம்பர் 2023 இதழ் 12ம் பக்கம்) படம் 2. புராணக்கதைகளில் வரும் போலியான சனி கிரகம். மனிதர்கள் உருவாக்கிய மனித சிற்பம். இவரின் வாகனம் காகம். இவர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு போகிறார் என்று ஜனவரி 17 - 2023 ல் சொல்லி மக்கள் மத்தியில் பயம் ஊட்டி,அப்பனும் மகனும், அம்மாவும் மகளும் 2 வருடம் முகம் பார்க்க கூடாது என்று( திருக்கணித பஞ்சாங்கத்தின் ப...
Posts
Showing posts from December 15, 2023