Posts

Showing posts from May 23, 2011

தமிழகத்தின் கல்வித்தொழிற்சாலைகள்....

Image
இ ன்றைய முதலீடு ரூபாய் 3 லட்சம் நாளைய(சேமிப்பு) லாபம் ரூ. 30 லட்சம். அன்பான பெற்றோர்களே! அதுவும் ஓரளவு நடுத்தர வருமானம் உள்ள தமிழக மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால்..உங்கள் மகனோ, மகளோ ஒரு மருத்துவராகவோ,ஒரு பொறியாளராகவோ மாறி லண்டன்,அமெரிக்கா சென்று  உங்கள் குடும்பத்தின் அந்தஸ்தை உயர்த்தி வளமாக வாழ நினைக்கிறீர்களா? அட என்னய்யா நீ....இப்படி கேட்கிறாய்? தந்தை மகற்காற்றும் கடமையே அது தானே..இதைத்திருவள்ளுவரே சொல்லியுள்ளாரே... நீ படித்ததில்லையா? என நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது? நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளை எதற்காக பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புகிறோம்? அறிவு பெறவா? வேலைக்காகவா? அட இது கூடவா தெரியாது.. நல்லா படித்து,பெரிய வேலைக்குப்போய்  நல்லா சம்பாதித்து நம்மைக்கொண்டுபோய் முதியோர் இல்லத்தில் விடாமல் நம்மைக்காப்பாற்றத்தான்..என ஒவ்வொருபெற்றோரும் நினைக்கிறோம்...அதற்காக வாயைக்கட்டி வயித்தைக்கட்டி பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து...அட அதென்ன நல்ல பள்ளி என்கிறீர்களா? அதாங்க அம்மா அப்பாவை, மம்மி,டாடி என்று மூன்று வயதிலேயே சொல்லித்தருகின்ற, அப்பா அம்மா பட்...