Posts

Showing posts from February, 2012

நூறு சத தேர்ச்சியும்..மிதிபடும் மாணவர்களும்.....

Image
                             யாரைக்குறை கூறுவது?    தமிழக கல்விக்கூடங்களில் என்னதான் நடக்கிறது? மாணவர்களுக்கு என்னவாயிற்று?  சென்னையில் ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியையே.. வகுப்பறையில் கத்தியால் குத்திக்கொள்கிறார்..உடுமலைப்பேட்டையிலோ ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியரின் அடிதாங்காத 11-ம் வகுப்பு மாணவர் 3 கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்...அதே சென்னையில் ஒரு கல்லூரி மாணவர் தனது தோழியை நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த செய்தியும் வருகிறது.. இச்செய்திகள் கல்வியாளர்களையும், சமூகவியலாளர்களையும் , ஆசிரியர்களையும், ,பெற்றோர்களையும் அதர்ச்சியடையச்செய்துள்ளது. .                  பூவைப்போல தூவப்படவேண்டிய கல்வி-இங்கு               ஆணியைப்போல அறையப்படுகிறது.. என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் வைரவரிகள் நிஜம் என்பதை பறைசாற்றுகின்றன..                 1996-க்குப்பிறகு புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக கல்வி வெகு விரைவாக தனியார் மயமாகியது..சாராய வியாபாரிகள் கையில் கல்விக்கடவுள் சரசுவதியும், அரசின் பாக்கெட்

கட்டாயஇலவசக்கல்விச்சட்டமும், பள்ளிமேலாண்மைக்குழுவும்..

Image
கட்டாய இலவச கல்வி சட்டம்..2009                        இந்திய அரசியல் சட்டம் 1950-ல் உருவாக்கப்பட்ட போது வழிகாட்டும் கொள்கையில், 1960 க்குள்  6 வய்து முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும்  கல்வி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது..உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் கல்வியை கட்டாய இலவச சட்டமாக இயற்றியிருந்தன..ஆனால் நாம் மட்டுமே  கல்வியை அடிப்படை  உரிமையாக்காமல் , வழிகாட்டும் கொள்கையில் எழுதி வைத்தோம்.., வழி காட்டும் கொள்கை என்பது கை காட்டி மரம் போல...போகும் வழியைக்காட்டுமே தவிர ..போகாது.                 கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், இந்திய மாணவர் சங்கமும் ,ஆசிரிய இயக்கங்களும் கல்வியை  கட்டாயமாகவும், இலவசமாகவும்  தர வேண்டி  பல்வேறு இயக்கங்களை நடத்தினர்.   உச்ச நீதி மன்றமும்  கல்வியை அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று  அளித்த தீர்ப்புகூட செவிடன் காதில் ஊதிய சங்காகப்போய்க்கொண்டிருந்தது..இந்த நிலையில் தான் தற்போது ஆண்டு கொண்டிருக்கும்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசு இடது சாரிகளின் ஆதரவுடன்  2