Posts

Showing posts from 2015

ஜாக்கிரதை...சித்தமருந்தில் மெர்க்குரிகலப்பு.

Image
எச்சரிக்கை ..!  நீங்கள் படத்தில் இருப்பது திருப்பதி லட்டு என்று எண்ணிவிடாதீர்கள் .. இது அவினாசி ரோட்டில் நீலகிரி பேக்கரிக்கு பின்புறம் உள்ள சித்த வைத்திய சாலையில் கை அலர்ஜிக்காக எனது பெரியமகள் கடந்த ஜீலை மாதம் திருப்பூர் வந்த போது ஸ்கின் கேர் என்ற பெயரில் 30 நாட்களுக்கு தினம் ஒன்று வீதம் தரப்பட்ட மூலிகை உருண்டையை . ஒரு வாரம் தான் சாப்பிட்டிருப்பார் . எட்டாவது நாள் நடக்க , உட்கார முடியாமல் போனதால் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் நரம்பியல் நிபுனரிடம் காட்டினோம் ... அவர் சித்த மருந்தில் மெர்க்குரி கலக்குவாரகள் .. எனவே ரத்தத்தை எடுத்து அதில் மெர்க்குரி இருக்கிறதா எனப்பார்த்தபின்பே மருத்துவம் பார்க்கமுடியும் எனக்கூறி , ரத்தம் எடுத்து பாம்பே அனுப்பினார்கள் .. ஒரு வாரம் கழித்து பாம்பேயில் இருந்து வந்த ரிசல்டில் மெர்க்குரி 4.99 அளவு இருக்கிறது என வந்தது . மனித உடம்பில் 0.21 -1.3 வரை மட்டுமே இருக்கலாம் . மகளுக்கு மெர்க்குரி அளவு 4.99 அதிகமாக இருப்பதால் நரம்புகளும் , தசையும் இறுகி வலியெடுக்கும்

தமிழகரசே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமுல் படுத்து..

Image
திருப்பூரில் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலை பள்ளிக்குள் செயல்படும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி..! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தமிழகரசு உடனடியாக அமுல் படுத்த வேண்டும்…!! ( ஜெய்வாபாய் ஈசுவரன்) திருப்பூரில் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியானது ஏழாயிரம் மாணவிகளுடன் செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய பெண்கள் பள்ளியாகும். இந்தப்பள்ளியின் ஒரு ஏக்கர் இடத்தை  தனியார் ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளியினர் ஆக்கிரமித்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக , ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் 1996-ல் வழக்கு தொடுத்தது. கடந்த பதினெட்டு வருடங்களாக நடைபெற்ற வழக்கில் இறுதியாக சுப்ரீம் கோர்ட் கடந்த 30-7-2014 அன்று ஜெய்வாபாய் பள்ளிக்குள் உள்ள ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளியினர் வெளியேறவேண்டும் என்று தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்து எட்டு மாதமாகியும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்து கோர்ட் தீர்ப்பை றை என அனைவருமே மெளனம் சாதித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இன்னும் அமுல்படுத்தவில்லை.              இந்த வ