Friday, September 18, 2015

ஜாக்கிரதை...சித்தமருந்தில் மெர்க்குரிகலப்பு.
எச்சரிக்கை..! 


நீங்கள் படத்தில் இருப்பது திருப்பதி லட்டு என்று எண்ணிவிடாதீர்கள்..இது அவினாசி ரோட்டில் நீலகிரி பேக்கரிக்கு பின்புறம் உள்ள சித்த வைத்திய சாலையில் கை அலர்ஜிக்காக எனது பெரியமகள் கடந்த ஜீலை மாதம் திருப்பூர் வந்த போது ஸ்கின் கேர் என்ற பெயரில் 30 நாட்களுக்கு தினம் ஒன்று வீதம் தரப்பட்ட மூலிகை உருண்டையை. ஒரு வாரம் தான் சாப்பிட்டிருப்பார்.

எட்டாவது நாள் நடக்க, உட்கார முடியாமல் போனதால் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் நரம்பியல் நிபுனரிடம் காட்டினோம்...அவர் சித்த மருந்தில் மெர்க்குரி கலக்குவாரகள்.. எனவே ரத்தத்தை எடுத்து அதில் மெர்க்குரி இருக்கிறதா எனப்பார்த்தபின்பே மருத்துவம் பார்க்கமுடியும் எனக்கூறி, ரத்தம் எடுத்து பாம்பே அனுப்பினார்கள்.. ஒரு வாரம் கழித்து பாம்பேயில் இருந்து வந்த ரிசல்டில் மெர்க்குரி 4.99 அளவு இருக்கிறது என வந்தது. மனித உடம்பில் 0.21 -1.3 வரை மட்டுமே இருக்கலாம். மகளுக்கு மெர்க்குரி அளவு 4.99 அதிகமாக இருப்பதால் நரம்புகளும், தசையும் இறுகி வலியெடுக்கும்.. நடக்க முடியாது.. முதுகெல்லாம் வலி என தொந்தரவு. மெர்க்குரியை வெளியேற்ற தினம் 22 மாத்திரைகள் சாப்பிடுகிறார்.


ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நிவாரனம் கிடைக்கவில்லை. டாக்டர் தாமதம் ஆகும் எனக்கூறியுள்ளார். இந்த சித்த மருத்துவ டாக்டரிடம் தங்கள் மருந்தில் மெர்க்குரி கலந்துள்ளீர்களா எனக்கேட்டேன். வெறும் மூலிகைதான்.. மெர்க்குரி கலக்கவில்லை என்றார். எனவே அவர் கொடுத்த இந்த உருண்டை மருந்தை சோதனை செய்ததில் 20 மி.கிராம் மருந்தில் 0.51 மி.கிராம் மெர்க்குரி கலந்திருப்பது தெரியவந்தது. திரும்பவும் இந்த டாக்டரிடம் இப்படி உங்கள் மருந்தில் மெர்க்குரி இருக்கிறதே என்றேன்.. எங்கள் மருந்தில் இல்லை.. மூலிகைதான் என்கிறார். சென்னையில் பிரபல நரம்பியல் டாக்டர் வி.சீனிவாசன் அவர்களிடமும் காட்டியாயிற்றும், ரத்தத்தில் கலந்துள்ள மெர்க்குரி மெதுவாகத்தான் உடம்பில் இருந்து வெளியேறும்.. அப்பல்லோ டாக்டர் எனது மாணவர்தான்,, அவர் கொடுத்த மாத்திரைகளே போதும் எனக்கூறியுள்ளார்.
எனது துணைவியார் மகளுக்கு துணையாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சென்னையில்தான் உள்ளார். இந்த SKM மகரிஷி மருத்துவமனையில் நிறைய பேர்கள் மாத்திரை, சூரணம், பொடி, தைலம் என வாங்குகிறார்கள்.. ஆங்கில மருந்தில் உள்ளதை போட்டிருப்பார்கள்.. ஆனால் சித்த மருத்துவத்தில் இப்படி மருந்தில் உள்ள பொருட்கள் என்ன என்று இருக்காது.. இணைய தளங்களில் சித்த மருத்துவம் எனப்போட்டால், மெர்க்குரி கலக்காத சித்த மருத்துவ மாத்திரைகளே இல்லை என உள்ளது. எனவே பொதுமக்கள், நண்பர்கள் இந்த சித்த மருத்துவ மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்குவது சரியா என இரண்டுமுறை யோசித்து வாங்குங்கள்.. ஏனென்றால் மெர்க்குரி ஒரு அபாயகரமான விஷத்தன்மையுள்ள மருந்து.
இந்த மெர்க்குரி சித்தவைத்திய மருந்தில் மட்டும் தான் இருக்கிறதா..? நாம் அழகுக்கு பயன்படுத்தும் நம் முகத்தை சிவப்பழகாக மாற்றும் கிரீம்களில் இருக்கிறது. நம் வீட்டில் குண்டு பல்பை எடுத்துவிட்டு சி.எல்.எஃப். பல்பு போட்டுள்ளோம். இதில் இருக்கிறது. தவறி இந்த பல்பு உடந்துவிட்டால் உடனே அந்த அறையை விட்டு வெளியேறிவிடவேண்டும். மெர்க்குரி திட, திரவ, வாயு வடிவில் மாறும் தன்மையுடையது.. நமது பெண்கள் பயன்படுத்தும் சிவப்பு செந்தூரப்பொட்டிலும் இருக்கிறது..எச்சரிக்கை..சித்த மருத்துவம் போகிறீர்களா.. எச்சரிக்கையாக இருங்கள்..
இந்தப்பதிவை போட்ட பின் நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவம்.

இரவு 09.30 மணியிருக்கும்.. கதவு தட்டப்படும் ஓசை.. ஜன்னலில் பார்த்தேன்..எஸ்.கே.எம். மகரிஷி மருந்தகத்தின் டாக்டரும் அவர் அருகில் ஒரு பெண்ணும் இருந்தனர். தைரியமாக கதவை திறந்தேன். அவரது மனைவி என்று அறிமுகம் செய்தார். இவரது குடும்பமே பரம்பரை சித்தவைத்தியமாம். தாராபுரத்தில் இருந்து தினம் திருப்பூர் வருகிறார்கள்.என்றார்கள். பேஸ் புக்கில் எனது பதிவில் இவருடைய மருந்தகத்தின் பெயர்ப்பலகை இருந்தது கண்டு இவருடைய நண்பர்கள் பலரும் போன் செய்து சொன்னார்களாம். காலையில் இருந்து உங்களைப்பார்க்க முயற்சி செய்கிறேன் என்றார்கள். எனது மகளின்

 மருத்துவ சோதனை முடிவுகளையும், இவர் தந்த மாத்திரையில் மெர்க்குரி உள்ள அளவின் ரிசல்டையும் காண்பித்தேன்.(கடந்த ஒரு மாதமாக தனது மருந்தில் மெர்க்குரி இல்லையென்றே வாதம் புரிந்தார்). இவர் கொடுத்த ஸ்கின் கேர் மாத்திரையால் எனது மகளுக்கு நேர்ந்துள்ள உடல் உபாதைக்காக மன்னிப்புக்கேட்டார்கள். தாங்கள் கொடுத்த மருந்தில் மெர்க்குரி பாதிப்பு வரும் என்பதே தங்களுக்குத்தெரியாது என்றார்கள்.. இந்த மருந்து கொடுப்பதை பேஸ் புக்கில் செய்தியாக பார்த்தபின் நிறுத்திக்கொண்டோம், என்றும் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டோம் என்றார்கள். உங்கள் மகள் விரைவில் குணம்டைய கர்த்தரிடம் பிரேசெய்கிறோம் என்றார்கள். உங்கள் மகள் எங்களுக்கும் மகள் போலத்தான்.. எங்களுக்கும் ஒரு பையனும், பெண்ணும் இருக்கிறார்கள்.. நாங்கள் தெரியாமல் இந்த மருந்தை குணமாகும் என்ற நோக்கத்தில் கொடுத்தோம்.. ஆனால் அது இப்படிப்பட்ட விளைவுகளைத்தரும் என்பது தங்களுக்குத்

தெரியாது என இருவரும் பலமுறை மன்னிப்புக்கேட்டார்கள்..இன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுப்பதாக இருந்தேன்.. ஏனோ அதை அடுத்தவாரத்திற்கு ஒத்திப்போட்டுவிட்டேன்..பேஸ் புக்கில் போட்டது கூட இந்த மருந்தின் விளைவுகள் தெரியாமல் வேறு யாரும் சாப்பிடக்கூடாது என்பதற்காகத்தானேயொழிய உங்கள் பிழைப்பை கெடுக்கவேண்டும் என்பதல்ல எனது நோக்கம் என்று கூறி அனுப்பிவைத்தேன். இணையத்தில் போய் பாருங்கள்.. மெர்க்குரியினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன என்று கூறி அனுப்பிவிட்டேன்.
Human health effects of mercury
High doses of mercury can be fatal to humans, but even relatively
low doses of mercury containing compounds can have
serious adverse impacts on the developing nervous system,
and have recently been linked with possible harmful effects on
the cardiovascular, immune and reproductive systems5.
Mercury and its compounds affect the central nervous system,
kidneys, and liver and can disturb immune processes; cause
tremors, impaired vision and hearing, paralysis, insomnia and
emotional instability. During pregnancy, mercury compounds
cross the placental barrier and can interfere with the development
of the foetus, and cause attention defi cit and developmental
delays during childhood .

No comments:

Post a Comment

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...