மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!


அல்லிப்பூ(Nymphaea nouchali Burmf.;Nymphaeceae)


சந்திரனைக்காணாமல் அல்லி முகம் மலருமா? என்ற பாடலையும்,இரவினில் மலரும் அல்லிப்பூ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலையும் கேட்கும் போதெல்லாம் அல்லிப்பூவை பள்ளியில் வைத்து வளர்க்கவேண்டும்! இரவினில் மலர்வதைக்காணவேண்டும் என்ற எண்ணம் வரும்! ஜெய்வாபாய் மாநகராட்சிப்பெண்கள் பள்ளியில் சிறிய குளம் அமைத்து அல்லி வைத்தோம். இரண்டு மாதம் கழித்து காலை 7 மணியளவில் மொட்டு நீருக்குள் இருந்து வெளியே தலையை நீட்டியிரு ந்தது! படம் 1-ல் இருந்து 10 வரை படத்தைப்பாருங்கள்......

படம்.1. 25-7-2010 காலை 7 மணி


டம் 2.காலை 8.30மணி.


படம் 3. காலை 09மணி.



படம் 4. காலை 09.40


காலை 10 மணிக்கு பூ முழுவதுமாக மலர்ந்து விட்டது. பூவின் குறுக்கு வெட்டு நீளம் 17 செ.மீ.ஆகும்.

இது வரை நான் பார்த்ததெல்லாம் காலையில் மலரும் பூக்கள் மாலையில் விழுந்து விடுவதையும் பார்த்துப்பழக்கப்பட்ட எனக்கு அல்லிப்பூ அதிசியமாகப்பட்டது! ஏன் தெரியுமா? மாலையில் 7 மணியளவில் பார்த்தபோது பூ மூடத்தொடங்கியதைக்காணமுடிந்தது... அதையும் பாருங்கள்....


படம் 5. இரவு 7.20 மணி





படம் 6. இரவு 7.30



படம் 7. இரவு 7.40



படம் 8.இரவு 7.46.




படம் 9. இரவு 07.55


படம் 10. இரவு 8 மணி.


26-7-2010-ல் காலை 7 மணிக்கு மேல் மீண்டும் பூக்கத்தொடங்கிய அல்லி இரவு மொட்டாகியது.இப்படி 28-7-2010 வரை 4 நாட்கள் மொட்டு மலராகி,மலர் மொட்டானதைக்கண்ட ,தாவரவியல் தெரியாத ,அல்லிப்பூவின் தன்மை பற்றித்தெரியாத என்னைப்போன்றோருக்கு இது ஒரு அதிசயமே!இந்த அதிசயத்திற்குக் காரணம் பச்சை நிறத்தில் இதழ்கள் போல நான்குபுறமும் உள்ள செபல் (sepals) தான். அது மட்டுமா!புதிய செடியானது அல்லி இலையின் நடுப்பகுதியில் இருந்து முளைத்துவருகிறது.

அல்லி மலரின் அழகை நாள்முழுவதும் ரசிக்கலாம்! மன அழுத்தம் குறை யும்! வீட்டின் ஈசான மூலையில் வாஸ்து முறைப்படி தண்ணீர் தொட்டி வைப்பவர்கள்,அல்லிக்குளம் உருவாக்கி,அதில் கலர் மீன்களை விட்டால் மன அமைதி கிடைக்கும்.

இப்போது ஒரு சந்தேகம் வருகிறதா? கண்ணதாசன் கூற்றுப்படி இரவில் மலரும் அல்லி பகலில் எப்படி மலர்ந்தது? ஒரு வேளை அல்லியில்லையோ!அல்லிதான்! நீல அல்லி என்று(குவளை) அழைக்கப்படுகிறது.
அடுத்து இரவினில் மலரும் அல்லியை(ஆம்பல் மற்றும் நெய்தல் / நன்றி: தமிழகரசு வெளியிட்ட செம்மொழி மாநாட்டு மலர்) படம் பிடிக்கலாம் வாருங்கள்.....





























Comments

  1. மிக அற்புதமானத் தகவல்களுடன் சிறந்த படங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா.

    இந்த தகவல் எனக்கு புதுசு. அதை ஒவ்வொரு படமாக இணைத்து இடுகையை போட்டிருப்பது இன்னும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

    நானும் 1989 1990 யில் 6ஆம் வகுப்பு ஜெய்வாபாயில்தான் படித்தேன். அந்த ஒரு வருடம் மட்டுமே. பின்பு உடுமலைப்பேட்டை வந்து விட்டோம். எனவே உங்களின் அறிமுகத்தை படித்தவுடன் ஒரு சந்தோசம். தொடருங்கள் இன்னும் இது போன்ற பதிவுகளையும், செப்பனிடுதலையும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!