மாங்கல்ய நோண்பு அல்லது ஆருத்திரா தரிசனம்

இன்று 9-01-2020 மாங்கல்ய நோண்பு.. கொங்கு மண்டலத்தில் உள்ள திருமணம் ஆன குடும்பப்பெண்கள் பெரும்பாலும், மார்கழி மாதம் பெளர்ணமியன்று திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து இரவு சிவனுக்கும், பார்வதிக்கும் 7 வகையான பலகாரங்களுடன் பூஜை செய்து, கணவனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள். பின் தங்கள் கழுத்தில் ஏற்கனவேயுள்ள மஞ்சள் கயிற்றுக்குப்பதிலாக புதிய மஞ்சள் கயிற்றை கட்டிக்கொள்வார்கள்..குறிப்பாக கணவன் நீண்ட நாள் வாழவேண்டும் என்பதற்காக மனைவிமார்கள் ஒரு நாள் விரதம் இருந்து, கணவருக்காக கடவுளை வேண்டும் ஒரு பண்டிகையாகும். இதன் புராணக்கதைகள் என்ன? துரோதயா என்ற பெண் பார்வதியின் பக்தை. திருமணம் ஆன மூன்றாம் நாளே கணவன் இறந்துவிடுகிறார். உடனே பார்வதியை வேண்டுகிறார். பார்வதி சிவனைப்பார்க்கிறார். சிவனோ எமலோகத்தில் உள்ள எமனை முறைத்துப்பார்க்க, எமன் துரோதயாவின் கணவனை உயிரோடு திருப்பி தந்து விடுகிறார். அதிலிருந்து பெண்கள் மாங்கல்ய நோண்பு இருந்தால் கணவனுக்கு மரணமில்லை என நினைத்து கொண்டாடுகிறார்கள். அடுத்த புராணக்கதை, சாவித்திரி கதை. தன் கணவன் சத்யவானின் மரணத்தை எதிர்த்து, சாவித்திரி எம...