அந்தமான் செல்லுலர் ஜெயில்...

அந்தமான் செல்லுலர் ஜெயிலின் தற்போதைய பருந்துப்பார்வை புகைப்படம். ஏழு பிரிவாக தாமரை இதழ் போலக் கட்டப்பட்ட ஜெயில் இரண்டாம் உலகப்போர் மற்றும் 1941-ன் பூகம்பம் காரணமாக சேதமடைந்தன. இந்திய அரசு இதை இடித்து அந்த செங்கற்களைக்கொண்டே ஜி.பி.பந்த் பெயரில் மருத்துவ மனையைக்கட்டியது. மீதியையும் இடித்திருப்பார்கள்! அதற்குள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை பெற்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்து, 1979 பிப்ரவரி மாதம் 11-ம் தேதி அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்கள் புனிதப்பயணம் மேற்கொள்ளத்திறந்து வைத்தார். சுதந்திரபோராட்டவீரர்கள் செல்லில் பயன் படுத்திய 1.உணவு. 2.குடி நீர்க்குவளை.3.இயற்கை உபாதை(மலம்,சிறு நீர்)பாத்திரம்.இதை அவர்களே சுத்தம்செய்து கொள்ளவேண்டும். தேங்காய் மட்டைவாங்கி,செக்கில் எண்ணெய் ஆட்டவேண்டும்,தேங்காய் மட்டையில் இருந்து கயிறு திரிக்கவேண்டும்.ஓய்வெடுத்தால் சாக்கிலான உடை மாட்டப்பட்டு, கீழே உள்ள படம்போல கழுத்து ,கை,இடுப்பு,கால்களில் விலங்கு மாட்டப்படும். முதல் இ ந்திய சுத ந்திரப்போரில் கைது செய்யப்பட்டவர்களை தூக்கில...