Wednesday, June 16, 2010

அந்தமான்...புண்ணிய பூமி!
திருப்பூர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எல்.டி.சியைப்பயன்படுத்தி மே 2 , 2010 முதல் மே 6 வரை வங்கககடலில் சென்னையில் இருந்து 1300 கி.மீ தொலைவில் உள்ள பூலோக சொர்க்கம் என அழைக்கப்படும் அ ந்தமான் தீவுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அ ந்தமான் தீவுகளின் அதியற்புதமான இயற்கைக்காட்சிகளும்,கடலுக்கடியில் வர்ணஜாலம் காட்டும் பவளப்பாறைகளும் பார்ப்பதற்கு,காணக் கண்கோடி வேண்டும் என்று கூறுகிறார்களே அது அ ந்தமானைப்பார்த்துத்தான் சொல்லியிருப்பார்களோ என்னவோ! நானும் அப்படித்தான் நினைத்தேன் மே 5-ல் செல்லுலர் ஜெயிலைப்பார்க்காத வரையில்!

வியாபாரம் செய்யவ ந்த வெள்ளையர்கள் ,பிரித்தாளும் கொள்கையால் இ ந்திய மன்னர்களையும், இ ந்தியமக்களை யும் அடிமைப்படுத்தி ஆட்சிசெய்த போது பல்வேறு எதிர்ப்புகள் ஆங்காங்கே வ ந்தாலும் கணிசமான அளவில் பல மன்னர்கள் ஒன்றினைந்து 1857 -ல் போராடினார்கள். இப்போராட்டத்தை ஆங்கிலேயர்கள் சிப்பாய் கலகம் என்று கூறி கடுமையான முறையில் அடக்கினார்கள். இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய தளபதிகள் மற்றும் வீரர்களை இ ந்தியாவில் வைத்திரு ந்தால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து என நினைத்தனர். 1858-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம்தேதி சுமார் 200 பேரை அந்தமான் தீவிற்கு அழைத்துவந்தனர்.இங்கு, யாருமே வரமுடியாத, வந்தால் திரும்பி போகமுடியாத அ ந்தமான் தீவுக்கூட்டங்களில் ஒன்றான கட்டுவிரியன் பாம்புகள் அதிகளவில் உள்ள வைபர் தீவில் கை.கால்களில் விலங்கிட்டு தீவில் இறக்கிவிட்டனர். இது ஒரு திறந்தவெளி சிறையாகும். கை கால்களில் தொடர்ச்சியாக விலங்கிட்டு,படுபயங்கரமான பாபுகள்,மலேரியா கொசு உள்ள காட்டு மரங்களை இவர்களைக்கொண்டே வெட்டி ஜெயிலை உருவாக்கினர். திறந்தவெளி சிறையில் இருந்து தப்பித்தால் கட்டுவிரியன் பாம்பு கடித்து சாவார்கள் .அதையும் மீறி கடலில் நீ ந்தி தப்பித்து சென்றால ஜாருவாஸ் ஆதிவாசிகளால் கொல்லப்படுவார்கள். 1857-ல் நடைபெற்ற முதல் இ ந்தியச்சுத ந்திரப்போரில்( காரல் மார்க்ஸ் தான் இதைச்சிப்பாய்க்கலகம் என்று கூறாமல் முதல் இ ந்தியச் சுத ந்திரப்போர் என்று கூறினார்.)ப ங்கேற்று உயிருடன் பிடிபட்டு அ ந்தமான் கொண்டுவரப்பட்டவர்கள்.1) அஸ்ஸாம் 5பேர்,(2)பெங்கால் -1,(3) பீகார்-9(4)ஹைதராபாத்-1(5)உத்திரபிரதேசம்-57(6)மத்தியபிரதேசம்-15. (7) மகாராஸ்டிரா-39.(8)மைசூர்-1.(9)ஒரிசா-1.(10)மா நிலம் தெரியாதவர்கள்-6.பேர் .இந்த மகத்தான மாவீரர்கள் வைபர் தீவிலேயே கடுமையான தண்டனைகளாலும், பாம்புக்கடிக்கும்,ஆதிவாசிகளின் அம்பிற்கும் பலியானார்கள்.

1864-ல் வகாபி புரட்சியாளர்கள் 17 பேர் அ ந்தமான் கொண்டுவரப்பட்டனர்.இவர்களில் சேர் அலி என்ற பதானும் ஒருவர். 1872-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம்தேதி சிறைச்சாலைக்கு வந்த இ ந்திய கவர்னர் ஜெனரல் லார்ட் மோயாவை கத்தியால் குத்திகொன்றுவிடுகிறார்.அடுத்த நாளே இவர் வைபர் தீவில் தூக்கில் போடப்படுகிறார். சுத ந்திரவேட்கை அதிகமானதால் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.இதனால் புதிய சிறைச்சாலை தேவைப்பட்டது. ரோஸ் ஐலேண்ட்(தலைமையிடம்)மற்றும் வைபர் தீவுக்கும் இடையில் இரு ந்த போர்ட்பிளேயரில் புதிய ஜெயில்,புதிய முறையில் 13அடி நீளம்,5 அடி அகலம் 12 அடி உயரம்(10 அடி உயரத்தில் சிறிய ஜன்னல்)கொண்ட செவ்வக அறை(செல்)போன்ற அமைப்பில் வடிவமைத்து , வைபர் தீவுகளில் இரு ந்த 600 சுத ந்திரப்போராட்ட வீரர்களைக்கொண்டு 1896-ல் கட்ட ஆரம்பித்து 1906-ல் முடிக்கிறார்கள். அன்று ரூ. 5,17,352/- செலவாயிற்றாம். தாமரைப்பூ வடிவில் சூரியனின் கதிர்கள் வருவதைப்போன்று நடுவில் காவல்காக்கும் மாடம்,அதைச்சுற்றி 7 வரிசையில் மூன்றடுக்கில் 698 சிறைக்கூடங்கள் என உலகிலேயே மிகக்கொடுமையான சிறைச்சாலையாக வடிவமைத்தனர். இச்சிறைச்சாலைகளில் இ ந்திய விடுதலைக்கு ஆயுதம் ஏ ந்திப்போராடிய , நூற்றுக்கணக்கான இ ந்திய இளைஞர்களை இ ந்தியாவில் வைத்திரு ந்தால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து என நினைத்து 1400 கி.மீ.தூரத்தில் உள்ள அ ந்தமான் சிறையில் அடைத்தனர்.

அலிப்பூர் சதி வழக்கு, மாப்பிலா கலகம், நாசிக் சதிவழக்கு,பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீச்சு போன்ற புரட்சிகர நடவடிக்கைகளில் ஆயுதப்போராட்டங்களை நடத்திய ,பத்திரிக்கைகளில் எழுதிய என்னற்ற இளைஞர்கள் செல்லுலர் ஜெயிலில் கடுமையான தண்டனைக்குள்ளானார்கள். அவர்களில் ஒரு சிலர் வருமாறு. 1. பரீ ந்தர் குமார் கோஸ்( அலிபூர் சதிவழக்கில் இவரும்,இவருடைய சகோதரர் ஸ்ரீ அரபிந்தகோஸும் தேடப்பட்ட குற்றவாளிகள்.( அரபிந்த கோஸ் புதுச்சேரிக்கு தப்பிவிடுகிறார்.இவர் தான் பின் சுவாமி அரவி ந்தராகிறார்.)2. வீர் வினாயக் தாமோதர் சாவர்க்கர்(போர்ட் பிளேயர் ஏர் போர்ட் இவர் பெயரைத்தாங்கியுள்ளது) 3. இவருடைய அண்ணன் கணேஸ் தாமோதர் சாவர்க்கார். 4. படு கேஸ்வர் தத். 5. சிவவர்மா (இவர்கள் இருவரும் மாவீரன் பகத்சிங்கின் சகாக்கள்) 6. லதா ராம்ஜி. 7.லகரி அஸ்தோஸ் 8. நானி கோபால் முகர்ஜி. 9.பண்டிட் பரமானந்த் 10. டாஜி வாமன் நாராயன் ஜோசி என பட்டியல் நீளுகிறது.1932-ல் இருந்து 1938 வரை அந்தமான் தீவிற்கு 1.பஞ்சாப்பில் இருந்து 2 பேர்,(2) டெல்லி 2(3) பீகார் 19 (4) பெங்கால் 334 பேர்,(5)அஸ்ஸாம் 5 ,(6)மெட்ராஸ் 2 பேர் எனக்கொண்டுவரப்பட்டு கடுமையான வேலை, சவுக்கடி,கொடுமையான முறையில் கை,கால்,இடுப்பு,கழுத்து போன்ற பகுதிகளில் விலங்கு மாட்டப்பட்டு, சாக்கு உடைகள்(உடம்பு எரியும்) அணிவிக்கப்பட்டும் சொல்லணாத்துயரத்திற்கு ஆட்பட்டும்,தூக்கில் தொங்கவிடப்பட்டும் ,கொலைசெய்யப்பட்டும் உள்ளனர் என்பதை அறி ந்தபோது கண்களில் ரத்தக்கண்ணீர் வருவதைப்போல உணர முடிந்தது. கத்தியின்றி ரத்தமின்றி சுத ந்திரத்தை மகாத்மா காந்தியும் அவருடைய காங்கிரஸ் கட்சியும் வாங்கிக்கொடுத்தார்கள் என்று வரலாற்றிலும்,பள்ளிகளிலும் சொல்வது எத்தனை பித்தலாட்டம் என்பதை உணரமுடிந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் 25-3-1942-ல் அ ந்தமானைக்கைப்பற்றி செல்லுலர் ஜெயிலில் இருந்த ஆவணங்கள் பலவற்றை அழித்துவிட்டதால் முழுமையான சுத ந்திரப்போராட்ட வீரர்களின் பட்டியல் கிடைக்கவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, கடுமையான வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ,த ந்திரமாக இ ந்தியாவை விட்டு வெளியேறி ஜெர்மன், மற்றும் ஜப்பான் நாட்டின் உதவியுடன் வெளி நாட்டில் ஆஜாத் ஹிந்த் சுதந்திரக்குடியரசை நிறுவுகிறார்.அ ந்தமான் நிக்கோபர் தீவுகளை வெற்றிகொண்ட ஜப்பான் ,நேதாஜி சுபாஸ் ச ந்திரபோஸிடம் 7-11-1943-ம் ஆண்டு ஒப்படைக்கின்றனர்.29-12-1943-ல் போர்ட்பிளேயர் வ ந்திறங்கிய சுபாஸ் சந்திரபோஸ் 30-ம் தேதி செல்லுலர் ஜெயில் சென்ற நேதாஜி முதல் முறையாக இந்தியாவின் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து ,” WHEN WE STOOD ON THE SOIL FREE INDIA FOR THE FIRST TIME,IT WAS AN UNFORGETTABLE EVENT FOR US TO SEE OUR NATIONAL TRICOLOUR FLUTTERING IN THA AIR....AND WE WONDER ALL THE TIME HOW THE WHEELS OF THE HISTORY WERE NOW MOVING IN INDIA FAVOR."என்று முழக்கமிடுகிறார்.

நமது இ ந்தியச்சுத ந்திரப்போராட்டம் வீரம்,விவேகம்,,வன்முறை,அகிம்சை என பன்முகத்தன்மை கொண்டது. இதில் எந்த முறையையும் குறைத்து மிதிப்பிடக்கூடாது. 1857-ல் இரு ந்து பாரதத்தாயின் அடிமை விலங்குகளை வீரம்,விவேகம்,வன்முறை என்ற சுத்தியல் கொண்டு அடித்த அடியில் வலிமையிழந்து போனபோது தான் மாகாத்மா காந்தி அகிம்சை வழியில் அ ந்தச்சங்கிலியை முறுக்கினார். சங்கிலி உடை ந்துவிட்டது! அகிம்சா வழியில் போராடிய ,மகாத்மா,நேரு,வல்லபாய் பட்டேல் போன்றவர்களை ஆகாகான் மாளிகையிலும்,ஏர்வாடா சிறையிலும் வைத்து, நூல் நூற்றல் என்ற இலகுவான வேலை மட்டுமே செய்தனர்! ஒரு வேளை அந்தமான் சிறையில போட்டிருந்தால் சுதந்திரமே வேண்டாம் என்று எழுதிக்கொடுத்து ஓடி வ ந்திருப்பார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்கமுடியவில்லை! இ ந்திய மக்கள் ஒவ்வொருவரும் போக வேண்டிய புண்ணியஸ்தலம் அ ந்தமான் செல்லுலர் ஜெயில் தான்!

1 comment:

  1. KANNEERAI VARAVAZHIKKUM KATTURAI! ANDRU POORAADIYA VEERARKALE , VEERA VANAKKAM!!

    ReplyDelete

தீபாவளி பிறந்த கதை..

                                       தீபாவளி பிறந்த கதை!   இந்துக்கள் மத்தியில்  பிரபலமான பண்டிகை தீபாவளியாகும்.! தீபாவளிய...