Posts

Showing posts from October, 2017

மேதகு அப்துல்கலாமும் ஜெய்வாபாய் பள்ளியும்..

Image
மேதகு அப்துல் கலாம் அவர்களும் ஜெய்வாபாய்    நகராட்சிப்பெண்கள்                               மேல் நிலைப்பள்ளியும்                                      (ஜெய்வாபாய்ஈசுவரன்)          திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிதான் இந்தியளவில் மிக அதிகமான அளவில் மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளியாகும். 2009-ம் ஆண்டு இந்தப்பள்ளியில் படித்த மாணவிகள் 7285 ஆகும்.   நான் இந்தப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் பொருளாளராக, செயலாளராக, தலைவராக 1989-ம் ஆண்டு முதல் 2009 –ம் ஆண்டுவரை சேவைசெய்துள்ளேன். இந்தப்பள்ளியானது மேதகு பாரத ரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுடன்   2001-ம் ஆண்டு முதல் தொடர்பில் இருந்துவந்துள்ளது. அது பற்றி எங்களது நினைவலைகள் உங்கள் பார்வைக்கு…            தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் ஏழாம் வகுப்பு மாணவிகள் ஆறுபேர் சேர்ந்து என்னுடையை வழிகாட்டுதலில் மழை நீர் சேகரிப்பு ஆய்வை நடத்தி இப்பள்ளியில் அதை அமுல்படுத்தியிருந்தனர். இந்த ஆய்வானது 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய வி