Posts

Showing posts from April, 2010

ஜெய்வாபாய் பள்ளியில் நீர் மறுசுழற்சி!

Image
மாணவிகள் குடிநீர் குழாய்களை உபயோகப்படுத்துகின்றனர் ... வெளியாகும் கழிவு நீர் மறுசுழற்சி பாத்தியின் வழியாகச் செல்கிறது .. பாத்தியின் வழியாக கரி, கல்வாழை, மணல் ஆகியவைகளை கடந்து வரும் நீர், அமிலத்தன்மை நீக்கப்பட்டு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அப்படி சேகரிக்கப்பட்ட தண்ணீர் மின் மோட்டார் மூலம், தொட்டியில் ஏற்றப்பட்டு, சாலையோரப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முயற்சியில் ஈடுபட்ட மாணவிகளை பாராட்டி, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர், முனைவர் க.பொன்முடி மாணவிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்குகிறார். (2/03/2010).

நீர் நமது உயிர்! தண்ணீரை வீணாக்காதீர்!!

தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழிக்காதே ! என்பது நான் சிறுவயதில் கிராமத்தில் கேட்ட பழமொழி! தாயைவிட தண்ணீருக்கு ஏன் இந்த முக்கியத்துவம் என்று அன்று தெரியவில்லை! இன்று தெரிகிறது!! எனது பாட்டி ஆற்று நீரைக்குடித்தார்! எனது அம்மா கிணற்று நீரைக்குடித்தார்!! நான் குழாய் நீரைக்குடித்தேன்!!! எனது மகள் பாட்டில் நீரைக்குடிக்கிறாள்!!!! நாளை எனது பேரனும், பேத்தியும்...................? தமிழ் நாடு மூன்று பக்கமும் கடலால் மட்டுமல்ல,ஆந்திரா, கர்நாடகா கேரளா என்ற மாநிலங்களாலு சூழப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீரை வழங்கும் ஆறுகள் எல்லாம்(தாமிரபரணி தவிர) இந்த மாநிலங்களில் உற்பத்தியாவதால் தண்ணீருக்காக அவர்களிடம் அடிக்கடி சச்சரவு ஏற்பட்டு இந்தியன் என்ற உணர்வுகள் மறைந்து, இன உணர்வு ஏற்பட்டு விரும்பத்தகாத சண்டைகள் ஏற்படுவதைக்கண்ட போதுதான் கிராமத்தில் கேட்ட பழமொழியின் உண்மை புரிகிறது! தண்ணீரின் மகத்துவம் புரிகிறது! சமீபத்தில் பேருந்தில் திருச்சி செல்லும்போது தாகமாக இரு

ஜெய்வாபாய் பள்ளியின் சுற்றுச்சூழல்

Image
1990-ம் ஆண்டில் பள்ளி வளாகத்திற்குள்( 7 1/2 ஏக்கர்) இருந்த மரங்கள் 49 மற்றும் சில காகிதப்பூச்செடிகள் மட்டுமே! 1992-ம் ஆண்டு பள்ளியின் பொன்விழாவின்போது பள்ளிவளாகத்திற்குள் மரம்/செடி/கொடிகள் வைப்பதைத் துவக்கிவைத்தோம்!2009-ம் ஆண்டு பள்ளிவளாகத்திற்குள் சுமார் ஆயிரம் மரம்,செடி,கொடிகள்,மூலிகைகளை வைத்து பெற்றோர்-ஆசிரியர் கழகம் பராமரித்து வருகிறது.இதனால் பள்ளிவளாகம் பூத்துக்குலுங்குகிறது.

அரசுப்பெண்கள் பள்ளிகளில் இளவரசிகளின் துயரம்!.

Image
ஒரு வகுப்பறையும் சில இளவரசிகளும் என்ற தலைப்பில் வந்தவாசி அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளின் சொல்லப்படாத துயரத்தை கவிதையாக்கி கவிஞர் வெண்ணிலா அவர்கள் 23-2-2011 ஆனந்த விகடன் பத்திரிக்கையில் எழுதியதைப்பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்கள் ரூ.9 லட்சம் மதிப்பில் டாய்லெட்டுகளும்,பாத்ரூம்களும் கட்ட பணித்துள்ளார்கள் என்ற செய்தி மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்ல,பாராட்டுதலுக்கும் உரியதாகும்...இப்பிரச்சனை, இப்பள்ளியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மாணவிகள் அனுபவித்துவரும் மெளனத்துயரமாகும். இதோ அந்தக்கவிதை ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்! பதினோரு மணிக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் காலையில் ஒரு முறை மத்தியானம் ஒருமுறை குழாயில் தண்ணீர் வரும் வேளை தப்பி வெளியே வருபவர்கள் மைதானம் பெருக்க வேண்டும் கடும் விதிகளை அறியாமல் வயிறு பிசையும் உள்ளாடை நனைந்து ஈரம் பரவும் உள்ள யாரு, வெளிய வா உரத்து ஒலிக்கும் அதிகாரக் குரலுக்குப் பயந்து பல்லியாய் சுவரொட்டும் பிம்பம் தண்ணீர் போகாமல் வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன நாப்கின்களால் நிறையும் கழிப்பறை பீங்கான்கள். தினம்

மாண்புமிகு தமிழக முதல்வர் பாராட்டிய நகராட்சிப்பள்ளி...

Image
     நமக்கு  ஏற்படும் பிரச்சனைகள்தான் அதைத் தீர்ப்பதற்கான வழி வகைகளைக்காணவும், அதற்கான தீர்வை நோக்கிச்செல்லவும், யோசிக்கவும் வைக்கிறது.  திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5000-ம் மாணவிகள் கல்வி கற்றனர்.  டாய்லெட்டிற்கு கிணற்றுத்தண்ணீர் போதுமானதாக இல்லை! கோடை காலங்களில் கிணறு வற்றிவிடும்!டாய்லெட்டை சுத்தமாக வைப்பதில் பிரச்சனையேற்பட்டது. தண்ணீர் இல்லாத காரணத்தால் மாணவிகள் டாய்லெட்டை உபயோகப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது!.  என்ன செய்வது? கிணற்றுக்குள் போர்போட அருகில வசிக்கும் மக்கள், தங்கள் பொதுக்கிணற்று போர்குழாயில் தண்ணீர் வற்றிவிடும் என்று போர்போட அனுமதிகவில்லை..என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு எங்களுக்குக் கிடைத்த விடை, நமது முன்னோர்கள் மழை நீரை சேமிக்க உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் ஞாபகத்திற்கு வந்தன.               மழை பெய்யும் போது பள்ளியின் மைதானத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் பள்ளியின் மேற்குப் பகுதியின் வழியாக வெளியேறி அருகில் உள்ள ஓடையில் கலந்து நொய்யல் ஆற்றிற்குச்சென்று விடுகிறது. பள்ளியில் பெய்யும் மழை நீர் முழ