பாடு பட்டாத்தன்னாலே! பலனிருக்குது பின்னாலே!!
பாடு பட்டாத்தன்னாலே! பலனிருக்குது பின்னாலே!! ஒரு செயலை நாம் செய்யத்தொடங்கினால் மட்டும் போதாது..அச்செயலை சமுதாயக்கடமையுடன் உணர்வுப்பூர்வமாக ஒரு ஈடுபாட்டுடன் தொடர்ந்து செய்து வந்தால் நமக்கு வெற்றிகிட்டும் என்பது எனது அனுபவம். திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் 1989-ம் ஆண்டில் இருந்து சமூகப்பணியாற்றிவந்த எனக்கு 1991-ம் ஆண்டில் கோவை அறிவொளி இயக்கத்தில் பணியாற்ற தொலை தொடர்பு இலாகாவில் இருந்து மாற்றுப்பணியில் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது.. இதன் காரணமாக கோவையில் உள்ள சில பிரபல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.வி.சங்கர் இ.அ.ப. அவர்கள் தலைமையில் நடைபெறும் அறிவொளி இயக்க கூட்டங்களுக்கு செல்லும்போது அப்பள்ளிகளில் இருந்த கட்டமைப்புகள், கணிப்பொறிகள் சுற்றுப்புறச்சூழல் கண்டு வியந்து, ஜெய்வாபாய் நகராட்சிப்பள்ளியையும் இப்பள்ளிகள் போல மாற்ற வேண்டும் என்ற கன்வும், இப்பள்ளி மாணவிகளுக்கும் கணிப்பொறிக்கல்வியைத்தர என்ன செய்யலாம் எனக்கனவு காண்பதுண்டு.. ...