Posts

Showing posts from March 30, 2015

தமிழகரசே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமுல் படுத்து..

Image
திருப்பூரில் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலை பள்ளிக்குள் செயல்படும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி..! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தமிழகரசு உடனடியாக அமுல் படுத்த வேண்டும்…!! ( ஜெய்வாபாய் ஈசுவரன்) திருப்பூரில் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியானது ஏழாயிரம் மாணவிகளுடன் செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய பெண்கள் பள்ளியாகும். இந்தப்பள்ளியின் ஒரு ஏக்கர் இடத்தை  தனியார் ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளியினர் ஆக்கிரமித்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக , ஜெய்வாபாய் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் 1996-ல் வழக்கு தொடுத்தது. கடந்த பதினெட்டு வருடங்களாக நடைபெற்ற வழக்கில் இறுதியாக சுப்ரீம் கோர்ட் கடந்த 30-7-2014 அன்று ஜெய்வாபாய் பள்ளிக்குள் உள்ள ரோட்டரி மெட்ரிகுலேசன் பள்ளியினர் வெளியேறவேண்டும் என்று தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்து எட்டு மாதமாகியும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்து கோர்ட் தீர்ப்பை றை என அனைவருமே மெளனம் சாதித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இன்னும் அமுல்படுத்தவில்லை.              இந்த வ