Posts

Showing posts from September, 2012

அக்கிரமம்!.மாநகராட்சிப்பள்ளி இடத்தை ஆக்கிரமித்த ரோட்டரி கிளப்பினர்...

Image
கல்வித்தாஜ்மஹாலை ஆக்கிரமிப்பு செய்த திருப்பூர் ரோட்டரி கிளப்பினர்.. உலக அதிசியமான தாஜ்மஹால் பற்றி அனைவரும் அறிவோம். அதென்ன கல்வித்தாஜ்மஹால்.?.எனக்கேட்கிறீர்களா...திருப்பூரில் ஜெய்வாபாய்  நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்குத்தான் கல்வித்தாஜ்மஹால் என்ற புனைப்பெயர் உண்டு...திரு.டி.ஓ. ஆஷர் என்பவர் 1948-ம் ஆண்டு தனது மனைவியின் கடைசி வேண்டுகோளுக்கிணங்க முதன் முதலில் திருப்பூரில் ஒரு பெண்கள் பள்ளியைத்தொடங்கி அதை நகராட்சிக்குத்தானமாக வழங்குகிறார். ஒரு முறை இப்பள்ளிக்கு வருகை புரிந்த பிரபல  சாகத்தியவிருது பெற்ற  நாவலாசிரியர் பொன்னீலன் அவர்கள் இப்பள்ளியின் வரலாற்றைப்படித்துவிட்டு, 6000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் கல்விகற்கும் இப்பள்ளிக்கு கல்வித்தாஜ்மஹால் எனப்பெயரிட்டழைத்தார்.                                         ஜெய் வாபாய் பள்ளி  வரலாறு..             திருப்பூரில் பஞ்சு வியாபாரத்தில் சிறந்து விளங்கியவர் தேவ்ஜி ஆஷர். இவரது மனைவி ஜெய்வாபாய். தனது 33 வது வயதில் 4 வது பிரசவத்தின்போது ஏற்பட்ட உடல் நலக்கோளாறால், இறக்கும் தருவாயில் தனது கணவரிடம், திருப்பூரில் பெண்