அழும் குழந்தை சிரிக்கிறது...
திருப்பூரில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் (PEM SCHOOL OF EZCELLENCE)பள்ளிக்கு 20-06-2011 அன்று காலை சென்றிருந்தேன். இப்பள்ளி CBSE திட்டத்தில் செயல்படுகிறது. நமது காலத்தில் எல்லாம் ( 25 வருடமுன்பு)ஐந்து வயது முடிந்தவுடன் தான் பள்ளியில் சேர்ப்பார்கள். அதுவும் வலது கையால் இடது காதைத்தொட வேண்டும்..ஆனால் இப்போது... மூன்று வயது முடிவதற்குள்ளேயே முதலில் PRE K.G.,அப்புறம் L.K.G. பின் U.K.G, எனப்படித்து வந்தால் தான் ஒன்றாம் வகுப்பில் சேரவே முடியும்.. அம்மா மடியில் மழலை பேசி விளையாடும் குழந்தையை பள்ளியில் சேர்த்தவுடனேயே அழ ஆரம்ப்பித்து விடுகி றது..தாயைப்பிரிகிற சூழல் மட்டுமல்ல, தான் ஓடியாடி விளையாடிய பழகிய இடத்திற்குப்பதிலாக , பள்ளிச்சூழல் மாறுபட்டு இருப்பதால், பயந்து போய் அழ ஆரம்பித்துவிடுகிறது. குழந்தைகளுக்கு பறவைகளை மிகவும் பிடிக்கும்.எனவே பள்ளியில் வண்ணப்பறவைகளை வைத்து பராமரிக்கவேண்டும். மழலையர் பள்ளிகளில் ஊஞ்சல், சறுக்கு போன்றவற்றை அமைப்பதன் மூலம் குழந்தைகளின் வீட்டு நினைப்பை மாற்றி ,பிற குழந்தைகளோடு...