அரசுப்பெண்கள் பள்ளிகளில் இளவரசிகளின் துயரம்!.
ஒரு வகுப்பறையும் சில இளவரசிகளும் என்ற தலைப்பில் வந்தவாசி அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளின் சொல்லப்படாத துயரத்தை கவிதையாக்கி கவிஞர் வெண்ணிலா அவர்கள் 23-2-2011 ஆனந்த விகடன் பத்திரிக்கையில் எழுதியதைப்பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்கள் ரூ.9 லட்சம் மதிப்பில் டாய்லெட்டுகளும்,பாத்ரூம்களும் கட்ட பணித்துள்ளார்கள் என்ற செய்தி மகிழ்ச்சிக்குரியது மட்டுமல்ல,பாராட்டுதலுக்கும் உரியதாகும்...இப்பிரச்சனை, இப்பள்ளியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அரசு, நகராட்சிப்பள்ளிகளில் மாணவிகள் அனுபவித்துவரும் மெளனத்துயரமாகும். இதோ அந்தக்கவிதை ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்! பதினோரு மணிக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் காலையில் ஒரு முறை மத்தியானம் ஒருமுறை குழாயில் தண்ணீர் வரும் வேளை தப்பி வெளியே வருபவர்கள் மைதானம் பெருக்க வேண்டும் கடும் விதிகளை அறியாமல் வயிறு பிசையும் உள்ளாடை நனைந்து ஈரம் பரவும் உள்ள யாரு, வெளிய வா உரத்து ஒலிக்கும் அதிகாரக் குரலுக்குப் பயந்து பல்லியாய் சுவரொட்டும் பிம்பம் தண்ணீர் போகாமல் வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன நாப்கின்களால் நிறையும் கழிப்பறை பீங்கான்கள். தினம் ...