மகாபாரதமும் கொரோனாவும்!

கொரோனாவும்.... மகாபாரதமு ம்..!!! . கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறோம். வீட்டின் கதவுகளை சாத்திக்கொண்டு, நம்மை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம். எதையும் தொடுவதற்கு பயம். கடைக்குச்சென்று வாங்குவதற்கு பயம்! வெளியில் செல்ல பயம்.! ஏடிம் மில் பட்டனைத்தொட பயம்! இப்படி தினம் தினம் தொலைக்காட்சிகளில் கொரோனா செய்திகளைப்பார்த்து இன்று மனித குலமே கிலி பிடித்து கதிகலங்கிக்கொண்டுள்ளது. இன்று இந்த தனிமைப்படுத்துதல் நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.. நமது இதிகாசமான மகாபாரதத்தில் ஒரு அரசன் இப்படித்தான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு அரண்மனைக்குள் அடைந்து கிடந்தான். யார் அந்த அரசன்? மகா பாரதமே இந்த அரசன் மூலமாகத்தான் நமக்கு கதையாக வருகிறது. மகாபாரதப்போர் முடிவடைந்து விட்டது. ஹஸ்தினாபுரத்தை ஆண்ட பாண்டவர்கள் , அபிமன்யுவின் பேரன் பரீட்சத்தை அரசனாக முடி சூட்டிவிட்டு சொர்க்கம் போக இமயமலைக்கு கிளம்பி விடுகிறார்கள். ஒரு நாள் பரீட்சித் வனத்த...