மகாபாரதமும் கொரோனாவும்!


  கொரோனாவும்.... மகாபாரதமும்..!!!.





           கடந்த  இருபது நாட்களுக்கும் மேலாக அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறோம். வீட்டின் கதவுகளை சாத்திக்கொண்டு, நம்மை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம். எதையும் தொடுவதற்கு பயம். கடைக்குச்சென்று வாங்குவதற்கு பயம்! வெளியில் செல்ல பயம்.! ஏடிம் மில் பட்டனைத்தொட பயம்! இப்படி  தினம் தினம் தொலைக்காட்சிகளில் கொரோனா செய்திகளைப்பார்த்து இன்று மனித குலமே கிலி பிடித்து கதிகலங்கிக்கொண்டுள்ளது. இன்று இந்த தனிமைப்படுத்துதல் நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.. நமது இதிகாசமான மகாபாரதத்தில் ஒரு அரசன் இப்படித்தான் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு அரண்மனைக்குள் அடைந்து கிடந்தான். யார் அந்த அரசன்? மகா பாரதமே இந்த அரசன் மூலமாகத்தான் நமக்கு கதையாக
வருகிறது.


          மகாபாரதப்போர் முடிவடைந்து விட்டது. ஹஸ்தினாபுரத்தை ஆண்ட  பாண்டவர்கள் , அபிமன்யுவின் பேரன் பரீட்சத்தை அரசனாக முடி சூட்டிவிட்டு சொர்க்கம் போக இமயமலைக்கு கிளம்பி விடுகிறார்கள். ஒரு நாள் பரீட்சித் வனத்திற்குள் வேட்டைக்குப்போகிறான். வேட்டையாடி களைத்து, தண்ணீர் தாகம் எடுக்கிறது. ஒரு ஆலமரத்தடியில்  முனிவர் ஒருவர் தியானத்தில் இருப்பதை பார்க்கிறான். அவரிடம் சென்று தண்ணீர் கேட்கிறான். தியானத்தில் இருந்த முனிவர் பரிட்சித்தைக்கவனிக்கவில்லை. உடனே சுற்றும் முற்றும் பார்த்த பரீட்சித் அருகில் கிடந்த இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டான். அப்போதும் முனிவர் தியானத்திலேயே இருந்தார். இதனை தூரத்தில் வந்து கொண்டிருந்த முனிவரின் சீடன் இதனைப்பார்த்துவிட்டான். அரசனின் அருகில் வந்து, என் குரு நாதரின் கழுத்தில் இறந்த நாகத்தைப்போட்ட நீ, இன்னும் 7 நாட்களில் பாம்பு கடித்து சாவாய் என சாபமிட்டான்.
      அரண்மனைக்கு வந்த  பரீட்சித்  உயரமான அரண்மனையின் ஒரு அறைக்குள் புகுந்து கொண்டான். ஜன்னல், கதவு எல்லாவற்றையும் பூட்டிக்கொண்டான். அமைச்சர்கள் உள்ளிட்ட  ஒருவரையும் சந்திக்காமல் பாம்பு உள்ளே வந்துவிட்டால் என்ன செய்வது என்று என்ற பயத்தில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தான். தனக்கு வந்த உணவு உட்பட எல்லாவற்றிலும் சந்தேகம். உண்ணவும் முடியாமல் உறங்கவும் முடியாமல் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்தான். ஹஸ்தினாபுரத்து மக்கள், ஏன் நம் மன்னர் இப்படி பயந்து கொண்டு வாழ்கிறார். இவரின் பாட்டனார் அர்ச்சுணன் ஏப்பேர்ப்பட்ட வில் வீரர். இவரின் அப்பா அபிமன்யு மகாபாரதப்போரில் சக்ர வியூகத்தையே உடைத்த மாபெரும் வீரர். இவர்களின் சந்ததியில் வந்த நம் மன்னர் இப்படி கோழைத்தனமாக பயந்து கொண்டு வாழ்வது நம் ஹஸ்தினாபுரத்துக்கே கேவலாமாகும் என கிசு கிசுத்தனர்.






        7 ஆவது நாள்  மாலை ஆயிற்று.. எந்தவிதமான பாம்பும் அரண்மனைக்குள் வர முடியவில்லை. இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் கதவைத்திறந்து காவலரிடம் சாப்பிட பழம் கொண்டுவரச்சொன்னான். பழம் கொண்டுவந்தார்கள். பழத்தினை மன்னன் அறிந்தான். பழத்திற்குள் இருந்த ஒரு புழு, தட்சன் என்ற பயங்கர பாம்பாக மாறி மன்னனைக்
கடித்துக்கொன்றது.    இந்தத்தட்சன்  ஏன் பரீட்சித்தைக்
கொன்றான்?
         பரீட்சித்தின் பாட்டனார் அர்ச்சுணன் , தங்களுக்கான இராச்சியத்தின் தலை நகரை உருவாக்க காண்டவபிரஸ்தம் என்ற வனத்தினை தீ வைத்து அழித்து, இந்திரபிரஸ்தத்தை உருவாக்கினார். அப்போது இந்த வனத்திற்குள் இருந்த லட்சக்கணக்கான நாகர்கள் எரிந்து இறந்து போனார்கள். இந்த நாகர்களின் தலைவன் தான் தட்சன். இவன் மனிதனாகவும் இருப்பான், நாகமாகவும் இருப்பான். அன்று காட்டினை அழித்த அர்ச்சுணனைப்பார்த்து, அர்ச்சுணா இந்த படுபாதக செயலுக்கு நீயோ அல்லது உன் சந்ததியினரோ பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று சபதம் இட்டான் தட்சன். அன்று போட்ட சபதத்தை இன்று நிறைவேற்றி விட்டான்.
        இன்று நாம் அரண்மணையின் உயரமான அறைக்குள் கதவை தாளிட்டுக்கொண்டு பயந்து கொண்டு  தனிமையில் வாழ்ந்த பரீட்சித் அரசன் போல ... இன்று நம் வாழ்க்கையும் கொரோனாவுக்கு பயந்து கொண்டு வீட்டிற்குள் பயந்து கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்..
       வரலாறு திரும்புகிறதா ? அல்லது இயற்கையை அழித்த மனித குலத்துக்கு உலைவைக்க இயற்கை கொரோனா வடிவில் திரும்பித்தாக்குகிறதா..?
        மனித குலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயற்கை சீற்றங்களையும்,
சுனாமிகளையும்  கடந்து அதனை வென்று வந்துள்ளது!
        WE SHALL OVER COME!
        WE SHALL OVER COME SOME DAY!






      

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..