அழும் குழந்தை சிரிக்கிறது...
திருப்பூரில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெம் ஸ்கூல் ஆப்
எக்ஸ்லென்ஸ் (PEM SCHOOL OF EZCELLENCE)பள்ளிக்கு 20-06-2011 அன்று காலை சென்றிருந்தேன். இப்பள்ளி CBSE திட்டத்தில் செயல்படுகிறது. நமது காலத்தில் எல்லாம் ( 25 வருடமுன்பு)ஐந்து வயது முடிந்தவுடன் தான் பள்ளியில் சேர்ப்பார்கள். அதுவும் வலது கையால் இடது காதைத்தொட வேண்டும்..ஆனால் இப்போது...
மூன்று வயது முடிவதற்குள்ளேயே முதலில் PRE K.G.,அப்புறம் L.K.G. பின் U.K.G, எனப்படித்து வந்தால் தான் ஒன்றாம் வகுப்பில் சேரவே முடியும்..
மட்டுமல்ல, தான் ஓடியாடி விளையாடிய பழகிய இடத்திற்குப்பதிலாக , பள்ளிச்சூழல் மாறுபட்டு இருப்பதால், பயந்து போய் அழ ஆரம்பித்துவிடுகிறது.
குழந்தைகளுக்கு பறவைகளை மிகவும் பிடிக்கும்.எனவே பள்ளியில் வண்ணப்பறவைகளை வைத்து பராமரிக்கவேண்டும்.
மழலையர் பள்ளிகளில் ஊஞ்சல், சறுக்கு போன்றவற்றை அமைப்பதன் மூலம் குழந்தைகளின் வீட்டு நினைப்பை மாற்றி ,பிற குழந்தைகளோடு விளையாடும் எண்ணத்தை ஏற்படுத்தினால் பள்ளிச்சூழலுக்கு குழந்தைகள் சில மணி நேரங்களில் பழகிவிடும்.
என
வேண்டும்..
நல்ல பதிவு.
ReplyDeleteசெயல் முறை விளையாட்டாய் இருக்க வேண்டிய கற்கண்டாய் இனிக்க வேண்டிய கல்வி கட்டுப்பாட்டோடும் கசப்பைத்தருவதுமான முறையில் கற்க வைப்பத்துதான் வேதனை. நமது பள்ளிகளில் LKG வகுப்புக்கூட 20,000 ரூபாய் செலுத்தி படிக்க வைக்க எத்தனிக்கும் பெற்றோர் மத்தியில் தனது மகளை பஞ்சாயத்து பள்ளியில் இரண்டாம் நிலையில் சேர்த்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் அனந்தகுமார் மலைபோல் நிற்கிறார்.
ReplyDeleteநண்பர்களுக்கு நன்றி..மீண்டும் பார்க்கவும்..புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஅருமையான ஆனால் நீண்ட பதிவு
ReplyDelete