22 nd NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS-2014.
திருப்பூர் மாவட்டத்தில் 22 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2014
மாநாட்டு சின்னம். |
அழைப்பிதழ். |
ஏஞ்சல் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் குழந்தை விஞ்ஞானிகள். |
மாநாடு நிறைவுவிழா.. |
திருமதி.வனிதா செயல் அலுவலர். |
மாவட்ட தலைவர் ஆ.ஈசுவரன். |
மா நாட்டு துவக்கவுரை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சுப்பிரமணியம். |
மத்தியரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் சார்பாக கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும், நாடு முழுவதும் உள்ள உள்ளூர் வளங்களைக்கண்டறிதல், பிரச்சனைகளைக்கண்டறிந்து தீர்வு காண்பது போன்றவை இதன் முக்கிய அம்சங்களாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பொதுத்தலைப்பின் கீழ் 3 மாத காலம் மாணவர்கள் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். மாவட்டம், மா நிலம் என தேர்வாகி பின் அகில இந்திய அளவில் டிசம்பர் 27 முதல் 31 வரை ந்டைபெறும் இம்மா நாட்டில் நாடு முழுவதும் இருந்து மா நிலங்களில் தேர்வான மாணவர்கள் கலந்து கொளவார்கள். இந்த ஆண்டு 22 வது தேசிய மா நாடு டிசம்பர் 27 முதல் 31 வரை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ”கால நிலை மாற்றத்தைப்புரிந்து கொள்வோம் ”என்பதாகும்.
தமிழக அளவில் குழந்தைகள் அறிவியல் மா நாடு வருகிற டிசம்பர் 7,8 & 9 தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மெளண்ட் சியோன் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த மா நில மா நாட்டில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்ள 6 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வாகியுள்ளன. 21-11-2014 சனிக்கிழமையன்று ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் திருப்பூர் மாவட்ட மா நாடு நடைபெற்றது. இந்த மா நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 18 பள்ளிகளில் இருந்து 47 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 8 பேர் கொண்ட நடுவர் குழு மா நில மா நாட்டில் கலந்து கொள்ளும் தகுதியுடைய ஆய்வுகளை தேர்ந்தெடுத்தனர். அவை பின்வருமாறு:
1. தமிழ் ஜூனியர்”: ஜேசீஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, காங்கயம். இவர்களின் ஆய்வானது காங்கயம் பகுதிகளில் தேங்காய் உலரவைக்கும் தொழிற்சாலைகளில் தேங்காய்கள் பூசனம் பிடிக்காமல் இருக்க கந்தகம் பயன்படுத்துகிறார்கள். இந்த கந்தகமானது தேங்காய் பருப்பிலும், காற்றையும் கெடுக்கிறது. கந்தகம் எரிவதால் வெளியேறும் புகை காற்றில் கலந்து விலங்குகளுக்கும், மனிதர்களுக்கு சுவாசப்பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது” எனற ஆய்வு தேர்வாகியுள்ளது.
2. ஆங்கிலம் ஜூனியர்: பெம் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்லென்ஸ் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகள், காற்றின் வேகம், மேகங்களின் வகைகள், மழைப்பொழிவு, வெப்பம் இவற்றிற்குள்ள தொடர்பு என்ன என்ற ஆய்வினை செய்துள்ளனர். மூன்று மாதகால புள்ளிவிபர அடிப்படையில். மழை வரும்போது இருந்த வெப்பம், மேகத்தின் பெயர், காற்றின் வேகம், ஈரப்பதம் போன்றவற்றின் மூலம் மழை தரும் மேகங்கள் என்னவென்று கண்டுபிடித்துள்ளனர்.
3. தமிழ் சீனியர் : கே.எஸ்.சி. அரசு மேல் நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர்கள், கால நிலை மாறுவதால் , பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் நோயகள் என்ன வென்று கண்டுபிடித்துள்ளனர்.
4. ஆங்கிலம் சீனியரில் மூன்று ஆய்வுகள் தேர்வாகியுள்ளன.
1. செஞ்சுரி பெளண்டேசன் மாணவிகள், நமது முன்னோர்கள் பஞ்சாங்கத்தின் மூலம் மழைவரும் காலங்களைக்கூரியுள்ளதையும், 60 தமிழ் வருடங்களில் கூறியுள்ளபடி கடந்த 60 ஆண்டுகளில் பெய்துள்ள மழை என இரண்டையும் ஒப்பிட்டு சரிபார்த்துள்ளனர். முன்னோர்கள் கால நிலை மாற்றத்தை எவ்வாறு சரியாக கணித்துள்ளனர் என்ற ஆய்வு தேர்வாகியுள்ளது.
2. தி பிரண்ட் லைன் அகதாமி 11 ம் வகுப்பு மாணவர்கள், பெருந்தொழுவு கிராமத்தில் சிறு தானியங்களின் விளைச்சல் குறைந்து போயுள்ளதையும், அதை மீட்டு எடுப்பதற்கான செயல் திட்டத்தை இந்த கிராமத்தில் அமுல்படுத்தியுள்ளனர்.
3. டீ பப்ளிக்பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவிகள், திருப்பூரில் உள்ள மருத்துவர்களிடம் சென்று கால நிலை மாற்றத்தால் மக்களுக்கு என்ன வியாதிகள் கடந்த 3 மாத காலத்தில் வந்துள்ளன என்ற விபரத்தை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வும் மா நில மா நாட்டிற்கு தேர்வாகியுள்ளது.
நன்றியுடன்
ஆ.ஈசுவரன் தலைவர்.
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
Comments
Post a Comment