நல்லதோர் வீணை செய்தே....
நல்லதோர் வீணை செய்தே!...

.இதாவது ஒரு புதிய ஆட்சி வந்ததால் புதிய தலைமைச்செயலகம் புறக்கணிக்கப்பட்டது என்று கூறலாம்..ஆனால் புதிய ஆட்சி வராமலேயே ஒரு இருபது நாள் தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு ஏப்ரல் 13க்குப்பிறகு புதிய தலைமைச்செயலகம் வந்த முதல்வர் கலைஞர் அவர்கள் அங்கிருந்த மீன் தொட்டியைப்பார்க்கிறார்..பாசம் பிடித்து கிடக்கிறது. உடனே அங்கிருந்த அதிகாரிகளைப்பார்த்து என்ன பராமரிக்க மாட்டீர்களா? என கடிந்து கொள்கிறார்.ரூபாய் ஆயிரம் கோடியில் கட்டப்பட்டதாகக்கூறப்படும் புத்தம் புது தலைமைச்செயலகத்திலேயே பராமரிப்பு சரியில்லை என்றால் தமிழகரசின் பிற அரசு அலுவலகங்கள், அரசுப்பேருந்துகள், மருத்துவமனைகள், பாலங்கள், சாலைகள், கல்லூரிகள், 40000க்கும் மேற்பட்ட அரசு/நகராட்சிப்பள்ளிகளின் நிலை எப்படி இருக்கும் என்பதை அவரவர் ஊரில் பார்த்தாலே தெரியும்.
தமிழகரசு புதியதாக மருத்துவமனைகள், கல்லூரிகள்,பள்ளிகள் பேருந்துகள் என ஆரம்பிக்கும்போது, புதியதாகக்கட்டும்போது மிகப்பிரமாதமாக இருக்கிறது.ஆனால் காலம் செல்லச்செல்ல இவைகள் போதிய பராமரிப்பின்றி வெய்யிலிலும்,மழையிலும் கிடந்து வீணாகிவிடுகின்றன. இந்தப்பொதுச்சொத்துக்களைப்பேணவேண்டியஅரசுஅதிகாரிகள், அலுவலர்கள்,ஆசிரியர்கள் என பெரும்பான்மையானவர்களுக்கு இது நம் நாட்டின் பொதுச்சொத்து, இவற்றைப்பேணவேண்டும் என்ற எண்ணம் மறைந்து, தனது சம்பளம், தனது பதவியுயர்வு என பொருளாதார வட்டத்திற்குள் விழுந்து விடுகின்றனர்.போதாக்குறைக்கு அரசு பராமரிப்பிற்கு ஒதுக்கும் தொகையோ மிகக்குறைவாக இருக்கிறது.... இதன் காரணமாக நமக்கென்ன வந்தது, மாதம் ஆனா சம்பளம் மட்டும் வந்தால் போதும் என்ற சுயநலப்போக்கின் காரணமாக பல நல்ல செயல்பாடுகள் பராமரிப்பின்மையால் வீணாகிக்கொண்டிருக்கின்றன.
மகாகவி பாரதி கூறியது போல,
” நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப்புழுதியில் எறிவதுண்டோ”
எனக்கூறியது மிகப்பொருத்தமானதே.. இதுவே தனது பொருளாக, சொத்தாக இருந்தால் பத்திரமாகப்பாதுகாப்பார். இவர்களைச்சொல்லிக்குற்றமில்லை. நமது கல்விமுறையில்பொதுச்சொத்துக்களைப்பேணுவதுபற்றி குழந்தைகளுக்குச்சொல்லித்தரவில்லையே!
ஒரு பள்ளியில் முன்பிருந்த தலைமையாசிரியர் ஓய்வு பெற்று விட்டால் அவருக்குப்பின் வருபவர், முன்பிருந்தவரை பள்ளி விழாவிற்கு அழைக்க மாட்டார்கள்! அவர் செய்த வேலைகளை நோண்டிப்பார்த்து ஏதாவது தப்பு கண்டுபிடிக்கமுடியுமா? என ஆராய்வார். முன்பிருந்தவர் உருவாக்கியவற்றை புதியதாக வந்தவர் கண்டுகொள்ளாமல், பராமரிப்பின்றி.போட்டு விடுவார்..சில மாதங்களில் அவை துருப்பிடித்து பின் காணாமல் காயலான் கடைக்குப் போய்விடும்.
எனது அனுபவத்திலேயே பல வற்றைக்கண்டுள்ளேன். அதிலும் குறிப்பாக திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 1997-இல் இருந்து 15 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பல நல்ல திட்டங்கள், செயல்பாடுகள் கடந்த 3 ஆண்டுகளாக எனக்குப்பின் வந்த பெ.ஆ.கழக நிர்வாகிகளும், பள்ளி தலைமையாசிரியையின்ம் அக்கறையின்மையின் காரணமாக பல ஆண்டுகளாக பயன்பட்டவைகள் அழிவை நோக்கிச்சென்றுகொண்டுள்ளது..எடுத்துச்சொல்லியும் பயனில்லை.உதாரணமாக
2003-ம் ஆண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்றது. அங்கு இந்த மாநாட்டையொட்டி அறிவியல் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட எனக்கு வியப்பாக இருந்தது. அங்கிருந்தவை எளிய முறையில் அறிவியலை செயல்முறையில் மாணவர்களுக்கு விளக்கும்படியாக அமைந்திருந்தது. எனக்கும் இதைப்போன்று திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் பள்ளியிலும் நிறுவவேண்டும் எனற எண்ணம் பிறந்தது.
காய்ந்து கிடக்கும் அறிவியல் பூங்கா..
திருமதி ஆர்.ஜரீன்பானு பேகம் அவர்கள் 2006- மே மாதம் ஓய்வு
பெற்றபின் வந்த புதிய தலைமையாசிரியை திருமதி.விஜயாஆனந்தம் அவர்கள் வந்தபின் இந்த அறிவியல் பூங்காவிற்குள் மாணவிகளை அனுமதிபப்து குறையத்தொடங்கியது. மாணவிகள் வராவிட்டாலும் பரவாயில்லை என்று அறிவியல் பூங்காவை மட்டும் தொடர்ந்து 2008-ம் ஆண்டுவரை பராமரித்து வந்தேன். மாணவிகள் ஏன் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படவில்லை? முன்பிருந்த தலைமையாசிரியை காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதாலா? அல்லது இதனால் என்ன பயன் என நினைத்து விட்டார்களா? எனக்குத்தெரியவில்லை! மாணவிகள் அறிவியல் பூங்காவிற்குள் செல்லவேண்டும் என ஆசைப்பட்டு, முன்பிருந்தது போல மாணவிகளை அறிவியல் பூங்காவிற்குள் அனுமதிக்கவேண்டும் என்று பழைய நடைமுறையை பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் ஆர்வலர் என்ற காரணத்தாலும் அமுல்படுத்திட பல முறை வேண்டியும் பலன் கிட்டவில்லை.
பெரிஸ் கோப்
கல்வித்துறக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து வந்த நிர்ப்பந்தம், தலைமையாசிரியையின் போதுமான ஒத்துழைப்பின்மை போன்ற நிர்ப்பந்தம் ,மன உலைச்சல் போன்ற காரணங்களால் தலைவர் பதவியை 2008-ல் ராஜினாமா செய்துவிட்டேன். திருப்பூரில் தனியார் பள்ளிகளில் கூட இல்லாத செயற்கை நீர்வீழ்ச்சி, வண்ணபறவைகள், மயில்கள், புராக்கள், வாத்துகள் என மாணவிகளின் மனம்கவர்ந்தவைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன்.பல ஆண்டுகளாக பயன்பட்ட அறிவியல் பூங்கா பராமரிப்பின்றி உருக்குலைந்து போவதைக்கண்டு, மாணவிகளுக்கு பயன்படாமல் துருப்பிடித்து வீணாவதைக்கண்டு ரத்தக்கண்ணீர் வடிப்பதைத்தவிர வேறு வழி தெரியவில்லை..இது மட்டுமல்ல மாணவிகளின் கண்களைக்கவர்ந்த அழகிய பல வண்ணப்பறவைகள், அழகிய நீர் வீழ்ச்சி, கழிவு நீர் மறு சுழற்சி அமைப்பு என பள்ளிக்குப்பெருமை சேர்த்த, முன்பிருந்த தலைமையாசிரியை திருமதி.ஜரீன்பானுபேகம் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தால்(என்னால்) உருவாக்கப்பட்ட அனைத்தும் பராமரிப்பின்றி, அதன் மீது அக்கறையின்றிப்போனதால் ஒவ்வொன்றாக அழிந்து கொண்டிருக்கிறது..
.
கடந்த மூன்று வருடங்களாக அறிவியல் பூங்கா பராமரிப்பின்றி பழுது பட்டு பல உபகரணங்கள் காணாமலும் உடைந்தும் விட்டது. இதற்கொரு விடிவு காலம் வராதா என ஏங்கிக்கொண்டிருந்தேன்..அந்த நாளும் வந்தது... 24-06-2011 அன்று பள்ளிக்கு வந்த முதன்மைக்கல்வி அலுவலர் திரு. த.ராஜேந்திரன் அவர்கள், அறிவியல் பூங்காவிற்கு வெளியே பல மாணவிகள் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்ததைக்கண்டு வியப்படைந்து தலைமையாசிரியை அவர்களை அழைத்து பூங்காவைத்திறக்கச்சொல்லி,
திரு. த.ராஜேந்திரன் அவர்கள் நெம்புகோல் தத்துவத்தைப்பார்வையிடுகிறார்.
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்,”.பொதுச்சொத்துக்களைப்பேணுகின்ற முறையில்... நலங்கெடப்புழுதியில் வீசப்பட்ட(அறிவியல் பூங்காவை) வீணையைக்கண்டு, அதை நல்லதோர் வீணையாக மாற்றச்சொன்னதால் தலைமையாசிரியை அவர்கள் தனது மேலதிகாரியின் கட்டளைக்கேற்ப அறிவியல் பூங்காவிற்குள் மாணவிகளை அனுமதித்துள்ளார். 27-6-2011 அன்று அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் சார்பாக அறிவியல் பூங்காவின் செயல்பாடுகளை வீடியோவாகவும் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.. அனேகமாக இந்த அறிவியல் பூங்கா பிற அரசு நகராட்சிப்பள்ளிகளிலும் விரைவில் அமைக்கப்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அரசுக்கு காட்டுவதற்காக எடுத்துள்ளனர். இதற்காக ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியை திருமதி.விஜயாஆனந்தம் அவர்களுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளேன். இதே போல செயற்கை நீர்வீழ்ச்சி, வண்ணப்பறவைகள், மண்புழு உரத்தயாரிப்பு, கைகழுவும் நீரை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்துவது, மழை நீர் சேகரிப்பு அமைப்பு, கணிப்பொறி ஆய்வகம் என அனைத்தையும் பராமரிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் மட்டுமல்ல பள்ளி நலனிலும், மாணவிகளின் நலனிலும் அக்கறையுள்ளோரின் விருப்பமாகும்.
..
தூய்மை செய்யப்பட்ட அறிவியல் பூங்காவின் மாதிரிகளைக்காண வீடியோவைக் கிளிக் செய்யவும்.
மேற்கண்ட அறிவியல் பூங்கா இப்படியே தொடர்ந்து இருக்கவேண்டும் மாணவிகள் பயன்படுத்தவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா? சில மாதங்கள் கழித்து திரு.த.ராஜேந்திரன் அவர்கள் திருப்பூரில் இருந்து கோவைக்கு மாற்றலாகிச்சென்று விட்டார். இவர் மாற்றலாகிச்சென்றதில் தலைமையாசிரியைக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது...கேட்பதற்கு அதிகாரி இல்லாததால் மீண்டும் அறிவியல் பூங்கா பராமரிப்பின்றி சிறுகச்சிறுக அழியத்தொடங்கியது. ஒரு நாள் காலையில் நடைப்பயணம் செல்லும்போது கவனித்ததில், காற்றின் ஈரப்பதம் காட்டும் கருவியைக்காணவில்லை.தேக்குமரத்தில் செய்யப்பட்ட மரப்பந்தையும் காணவில்லை.காவல்காரரிடம் கேட்டேன்.... தெரியாது என்றார்... இ
மேற்கண்ட அறிவியல் பூங்கா இப்படியே தொடர்ந்து இருக்கவேண்டும் மாணவிகள் பயன்படுத்தவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா? சில மாதங்கள் கழித்து திரு.த.ராஜேந்திரன் அவர்கள் திருப்பூரில் இருந்து கோவைக்கு மாற்றலாகிச்சென்று விட்டார். இவர் மாற்றலாகிச்சென்றதில் தலைமையாசிரியைக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது...கேட்பதற்கு அதிகாரி இல்லாததால் மீண்டும் அறிவியல் பூங்கா பராமரிப்பின்றி சிறுகச்சிறுக அழியத்தொடங்கியது. ஒரு நாள் காலையில் நடைப்பயணம் செல்லும்போது கவனித்ததில், காற்றின் ஈரப்பதம் காட்டும் கருவியைக்காணவில்லை.தேக்குமரத்தில் செய்யப்பட்ட மரப்பந்தையும் காணவில்லை.காவல்காரரிடம் கேட்டேன்.... தெரியாது என்றார்... இ
இன்ன்ன்
நல்ல பதிவு, இன்னும் நெறைய எழுதுங்கள் ... ! வாழ்த்துக்கள்
ReplyDelete