சித்திரை 1 தமிழ் வருட பிறப்பா ? சமஸ்கிருத வருட பிறப்பா? தமிழர்களை முட்டாளுக்கும் ஆரியர்களின் புராணப்புரட்டு!

 சித்திரை 1 ம் தமிழ் புத்தாண்டு என்றும், தமிழ் புத்தாண்டு அல்ல அது சமஸ்கிருத புத்தாண்டு என்றும் அல்ல அல்ல இது ஆரிய புத்தாண்டு என்றும் ஊடகங்களில் வருகின்றன. சித்திரை 1 புத்தாண்டு என்பது வேறு சில நாடுகளிலும் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. நமக்கு சித்திரை 1 தமிழ் புத்தாண்டு என்று ஏன் கொண்டாடத்தயக்கம் என்றால் தமிழ் வருடம் என்பது 60 ஆண்டு சுழற்சியில் வருவதால் தான்! அது ஒன்றாவதாக பிரப என்று ஆரம்பித்து அக்சய என்று 60 ஆண்டுகளில் முடிகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள பசலி , சாலிவாகன ஆண்டு, கொல்லம் ஆண்டு, தமிழில் 60 ஆண்டுக்கு மாற்றாக உள்ள திருவள்ளுவர் ஆண்டு, கிரிகோரியன் ஆங்கில ஆண்டுகள் எல்லாம் தொடர் ஆண்டுகளாக உள்ளதால் வரலாற்று நிகழ்வுகளை சரியான முறையில் கணக்கு வைக்க முடியும். ஆனால் தமிழில் உள்ள 60 ஆண்டுக்கணக்கில் நம் வயதைக்கூட சரியாக கணிக்கமுடியாத நிலைமையுள்ளதை நாம் இன்னும் உணரவில்லை. நல்ல வேளை கிரிகோரியன் ஆண்டும், திருவல்ளுவர் ஆண்டும் 2054 ம் இருப்பதால் நாம் பிழைத்தோம்! அதாங்க ஆங்கில ஆண்டு இருப்பதால் நாம் நம் வரலாற்று நிகழ்வுகளையும், நம் வயதையும் சரியாக கூறமுடிகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்களை மிகவும் கேவலப்படுத்தும் விதமாக இந்த 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருத மொழியில் பெயர் வைத்துள்ளார்கள். அனேகமாக இது கி.பி. 1500 ம் ஆண்டுகளில் விஜய நகரப்பேரரசு காலத்தில் தெலுங்கும் கன்னடமும், சமஸ்கிருதமும் இம்மன்னர்களின் மொழியாக இருந்ததால், ஒரு புனை கதையை உருவாக்கி தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் ஒரு தீராத விரோதப்பார்வை இருந்ததால், வேண்டும் என்றே அவப்பெயரை வரலாறு முழுவதும் தமிழர்கள் இருக்கும் வரை ஒரு அவமானக்கதையை உருவாக்கியுள்ளார்கள்! அது என்ன கதை?

இந்து சமயத்தின்படி சிவன், விஷ்ணு, பிரம்மா , லட்சுமி, சரசுவதி, பார்வதி, இந்திரன், நாரதர் என முப்பத்து முக்கோடி தேவர்களையும் ஊர்வசி, மேனகா, ரம்பா என அழகிய ஆடல் அழகிகளும் , விசுவாமித்திரர், வியாசர், வஷிஷ்டர், கெளதமர், அத்ரி போன்ற முனிவர்களும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்! இவர்களில் நாரதர் என்பவர் திருமணம் ஆகாத பெண் வாசனையே அறியாத நித்ய பிரம்மச்சாரியாவார். இவர் இந்திரலோகம், சிவலோகம், வைகுந்தம், பிரம்மலோகம், பூலோகம் என ஐந்து லோகத்திற்கும் சென்று வருபவர் ஆவார். இவர் ஒரு சமயம் இந்திரனைப்பார்க்க சென்றிருந்தபோது, இந்திரன் தன் மனைவி இந்திராணி, ரம்பை, ஊர்வசி, மேனகா என நான்கு காதலிகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதைக்கண்டு இவருக்கும் இல்லறத்தின் மீதும் , பெண் சுகத்தின் மீதும் ஆசை ஏற்பட்டு விட்டது. உடனே, இந்திரனிடம் ரம்பா, ஊர்வசி, மேனகா இந்த மூவரில் ஒருவரைத்தனக்குத்தருமாறும் தானும் இல்லற இன்பத்தை அறிய விரும்புகிறேன் எனக்கேட்கிறார். இந்திரனோ, நாரத முனிவரே, எனக்கு இருப்பது இந்த நால்வர் மட்டுமே! நான் எப்படி இவர்களைத்தரமுடியும் என்கிறார். உடனே நாரதர் எனக்கு இல்லற்ம் நடத்த ஒரு பெண் துணை வேண்டும் அதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் என்கிறார். இந்திரனும் சிறிது யோசனை செய்து ஒரு தீர்வினைக்கண்டுபிடித்தார். நாரத முனிவரே, பூலோகத்தில் மதுரா நகரில் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறார். இவருக்கு 60000 ம் மனைவிகள் உள்ளனர். அவரிடம் சென்று யாரையாவது ஒருவரைக்கேளுங்கள்! கிருஷ்ணரும் உடனே கொடுத்துவிடுவார் எனக்கூறுகிறார்.
உடனே நாரதரும் இந்திரலோகத்தை விட்டு பூலோகம் வந்து மதுராவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரின் அரண்மனையை அடைகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் நாரத முனியை அன்புடன் வரவேற்று உபசரித்து, நாரதரே தங்கள் மனதில் ஏதோ ஒரு குறை உள்ளது போலத்தெரிகிறது. அதைத்தெரிவித்தால் குறையினை தீர்த்துவைக்கிறேன் என சொல்கிறார். நாரதரும் எப்படி தன் வேண்டுகோளை ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்பது எனத்தயங்கியிருந்த போது, ஸ்ரீ கிருஷ்ணரே கேட்டதால் மகிழ்சியடைந்தார். கிருஷ்ணப்பெருமானே என் மனதில் சமீப காலமாக பிரம்மச்சரியத்தைவிட்டு, நானும் குடும்பஸ்தனாக மாறி ஒரு பெண்ணுடன் இல்லறம் நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன்.

உனக்குத்தான் 60000ம் பெண்கள் இருக்கிறார்களே! அதில் ஒரு பெண்ணை எனக்குத்தருவாயா ? எனக்கேட்கிறார். ஸ்ரீ கிருஷ்ணரும், நாரதரே எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை! என் காதலிகளிடம் சென்று உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்! யார் வந்தாலும் அழைத்துச்செல்லுங்கள் என்கிறார். நாரதரும் மிகவும் சந்தோசப்பட்டு, ஒவ்வொருவரவரகாச்சென்று தன்னுடன் இல்லறம் நடத்த அழைக்கிறார். ஆனால் 60000 ம் பெண்களிடம் நாரதர் கேட்டும் ஒருவரும் ஸ்ரீகிருஷ்ணர் தவிர வேறு ஒருவரிடமும் இல்லறம் நடத்தமுடியாது எனக்கூறிவிட்டனர். நாரதர் சோந்து போன முகத்துடனும், தளர்ந்த நடையுடனும் கிருஷ்ணரிடம் வருகிறார். கிருஷ்ணா, உன் 60000-ம் மனைவிகளிடமும் கேட்டுப்பார்த்தேன். ஒருவரும் உன்னை விட்டு வேறு யாருடனும் வாழமுடியாது எனக்கூறிவிட்டனர். இனி என்ன செய்வது ? என் விரகதாபம் தீரப்போவதில்லை! எனக்கு இல்லறவாழ்க்கையும் இல்லை , எனவே நான் கங்கை நதியில் விழுந்து இறப்பதைத்தவிர வேறு வழியில்லை எனக்கூறி கங்கைக்கரை நோக்கி நடக்கிறார்.
பகவான் கிருஷ்ணர் , நாரதரின் விரகதாபத்தை தீர்க்க எண்ணி, நாரதர் கங்கைக்கரையை அடையும் போது, கங்கையில் இருந்து ஒரு அழகிய பெண்ணாக உருமாறி வருகிறார். உடனே நாரதருக்கு இந்த மோகினிப்பெண்மீது ஆசை பிறக்க, தன்னை திருமணம் செய்து கொள்ளக்கேட்கிறார். மோகினியும் சரி எனக்கூற, கங்கைக்கரையின் அருகே இருந்த ஒரு அழகிய நந்தவனத்தில் இருவருக்கும் காந்தர்வ முறையில் திருமணம் நடைபெறுகிறது. இப்படி 60 ஆண்டுகள் நாரதர் மோகினி வடிவில் உள்ள கிருஷ்ணரிடம் இல்லறம் நடத்துகிறார். இவர்களின் இல்லறத்தின் சாட்சியாக வருடத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. முதல் குழந்தைக்கு பிரபாவ என்றும் இரண்டாவது வருடம் பிறந்த குழந்தைக்கு விபா என்றும் 36 ஆவது குழந்தைக்கு சுபகிருது ( இந்த ஆண்டின் பெயர்) என்றும் 60 வருடத்தில் பிறந்த குழந்தைக்கு அக்‌ஷ்ய என்றும் பெயர் வைக்கிறார்கள்! இந்த 60 குழந்தைகளின் பெயர்தான் தமிழ் வருடத்தின் பெயராக 15ம் நூற்றாண்டில் தமிழர்களை கேவலப்படுத்தும் விதமாக ஆரியப்புரோகிதப்பண்டிதர்களால் தமிழ்வருடத்திற்கு பெயர் இட்டுள்ளார்கள்!
தமிழ்வருடம் போலவே 60 ஆண்டு சுழற்சியை வைத்திருந்த பசலி,

சாதவாகணா, கொல்லம் போன்ற ஆண்டுகள் எல்லாம் தொடர் ஆண்டுக்கு மாறிவிட்டார்கள்! ஆனால் தமிழர்கள் மட்டும் இப்படி தொடர் ஆண்டுகள் ஏற்படுத்தியும் (திருவள்ளுவர் ஆண்டு 2054 சித்திரை 2 என கூறலாம்) அதனை ஏற்காமல், இன்னும் பழமையிலேயே அவமானப்பெயருடன் காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளோம்!
சங்கராச்சாரியாரும், ஜீயர்களும், ஆதீனங்களும் ஒன்று கூடி, இந்த 60 ஆண்டு தொடர்ச்சி என்பதை தொடர் ஆண்டாக மாற்றுங்கள்!

Comments

Popular posts from this blog

மொட்டு மலராகும்,மலர்ந்த பூ மீண்டும் மொட்டாகுமா? மொட்டாகும் அதிசயம்!!

அல்லிக்குளம் வைக்கலாம் வாருங்கள்!

கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..