புத்தகம் ஏதோ சொல்லத்துடிக்குது !... ( திருப்பூரில் ஜனவரி 25முதல் பிப்ரவரி 5 வரை 9 வது புத்தகக்கண்காட்சி-திருப்பூர்). புத்தகம் ஏதோ சொல்லத்துடிக்குது! உன்னிடம் வந்து இருக்கத்துடிக்குது! ! மேற்கண்ட பாட்டை 1991-ல் அறிவொளி இயக்கத்தில் தன்னார்வத் தொண்டனாக பணியாற்றிய போது பட்டி தொட்டியெல்லாம் பாடிய பாட்டு..ஏதாவது பணியாக கோவை செல்லும்போது புத்தகம் வேண்டும் என்றால் கோவையில் உள்ள நியூ செஞ்சுரி புக்ஸ் மற்றும் விஜயா பதிப்பகத்திற்குச்சென்று புத்தகம் வாங்கும் பழக்கம்.. நமக்குத்தேவையான புத்தகங்கள் அனைத்துமே அங்கிருக்கும் எனச் சொல்லமுடியாது.. இந்தக்குறையை திருப்பூரில் 2004-ல் முதன் முதலாக பின்னல் புக் டிரெஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து புத்தகக்கண்காட்சியை டவுன் ஹாலில் நடத்தினார்கள். தினமும் இரவு 7மணிக்கு மேல் கருத்தரங்கம் என 10 நாட்களும் நமக்கு வேண்டிய புத்தகம் மட்டுமல்ல செவிக்கு விருந்தும் கிடைக்கும்..எந்த விதமான லாப நோக்கமும் இல்லாமல்...