கல்வித்தாஜ்மஹால்.. வரலாறு..
இது கல்வித் தாஜ்மஹால் ..... .. முகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மீது கொண்ட அன்பின் காரணமாக கட்டிய உலக அதிசியமான தாஜ்மஹால் பற்றித்தெரியும் ! இது என்ன கல்வித்தாஜ்மஹால் ! எங்கே இருக்கிறது ? என அறிய ஆவலாக உள்ளதா ? 1992- ம் ஆண்டு திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் 50 ஆவது பொன்விழா கொண்டாட பள்ளி நிர்வாகமும், பெற்றோர்-ஆசிரியர் கழகமும் முடிவு செய்தன. அன்றைய தலைமையாசிரியை பிரேமா டேனியலும் , நானும் இப்பள்ளியை உருவாக்கிய ஆஷர் குடும்பத்தை அழைப்பது என முடிவெடுத்து வாரிசுகளின் விபரங்களை தேட ஆரம்பித்தோம் .. அப்போதுதான் மூத்தமகன் பிரதாப் ஆஷரின் மகன் மோகன் ஆஷர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள தேவ்ஜி காலனியில் ஜெய்வாபாய் பள்ளியின் ஸ்தாபகரின் மனைவியான(பாட்டி) சாந்திபாயுடன் வசிப்பதையறிந்து அங்கு சென்றோம். அங்கு சென்ற பின் தான் எங்களுக்கு ஜெய்வாபாய் அவர்களின் இளையமகன் கிருஷ்ணகுமார் ஆஷர் பெங்களூரில் இருப்பதை அறிந்தோம...