ஒரிசாவில் ஐந்து நாட்கள் சுற்றுலா...

பூரி ஜெகநாதர் கோவில் தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாட்டிற்காக 2005-ம் ஆண்டு டிசம்பர் 25 முதல் 31 வரை புவனேசுவரத்திற்கு தமிழகத்தின் 30 குழந்தைகளை, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அழைத்துச்சென்ற நண்பர்கள் 11 பேருடன் நானும் சென்றிருந்தேன். அங்கே எடுக்கப்பட்ட பூரி ஜக நாதர் கோவில் மற்றும் கோனார்க் கோவில் புகைப்படங்களைப்பார்த்த எனது மனைவி என்னை எப்போது கூட்டிச்செல்வீர்கள் எனக்கேட்டிருந்தார். ஆறுவருடம் கழித்துத்தான் அவரின் விருப்பத்தை , அதுவும் பணி ஓய்வு பெற்ற பின்புதான் நிறைவேற்ற முடிந்தது. தனியாக மொழிதெரியாத ஊருக்கு செல்வது உசிதமல்ல(ஏற்கனவே ஜாலியன் வாலாபாக், வாகா எல்லை சென்ற அனுபவத்தால்) என்பதால் உறவினர்களை கூட்டமாகச்சேர்த்துக்கொண்டு செல்வதுதான் உத்தமம் என்பதால் 11 பேர் கொண்ட எங்கள் குழு சென்ற மாதம் 16-8-2011 அன்று சென்னையில் இருந்து இரவு 12 மணிக்கு ஹவுரா மெயிலில் புறப்பட்டு 17-8-2011 இரவு 9 மணியளவில் புவனேசுவரம் சென்றடைந்தோம்.. அடுத்த நாளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பையும் குறிப்பையும் பாருங்கள்.. புவனேசுவரம் ஓட்டல் ஸ்வஸ்திக்கில் வரவேற்பறையில்.அறை ஒது...